“டித்வா” சுழற்காற்றுப் பேரழிவிலிருந்து நாடு மீண்டு வரும் சூழலில், காலி கடற்பரப்பிற்கு அருகாமையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானியக் கப்பல் “ஐரிஸ் டேனா” (IRIS Dena) மூழ்கடிக்கப்பட்டமை, இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த இக்கட்டான சூழலிலிருந்து நாட்டைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாகப் பின்பற்ற வேண்டிய 04 முக்கிய முன்னுரிமைத் துறைகளை அவர் முன்வைத்தார்:
01. தேசிய எரிசக்தி அவசரநிலையைப் பிரகடனப்படுத்தல் (National Energy Emergency)
- தற்போது இலங்கையிடம் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே போதுமான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளது.
- ஹர்முஸ் நீரிணையில் ஏற்படும் தடைகளால் உலக சந்தையில் எண்ணெய் விலை உயரும் அச்சுறுத்தல் நிலவுகிறது.
- இதற்குத் தீர்வாக, புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து, சூரிய சக்தி (Solar) மற்றும் காற்றாலை (Wind) மின் திட்டங்களை எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
02. வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருமானத்தைப் பாதுகாத்தல்
- மத்திய கிழக்கில் பணிபுரியும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கைத் தொழிலாளர்கள் மூலம் 2025-ல் சுமார் 8.076 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டது.
- போர்ச் சூழலால் அங்குள்ள வங்கிக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டாலும், தொழிலாளர்கள் தங்களின் ஊதியத்தைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அனுப்பக்கூடிய அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்ப உதவி முறையொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.
03. ஏற்றுமதிப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கக் கடல் காப்புறுதித் திட்டம்
- போர்ச் சூழலால் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மற்றும் கடல் போர் அபாயக் காப்புறுதிக் கட்டணங்கள் மும்மடங்கு உயர்ந்துள்ளன.
- இது இலங்கையின் தேயிலை மற்றும் ஆடைத் தொழில்துறையை முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த மேலதிகச் செலவுகளை மானியமாக வழங்கும் வகையில், அரச உதவியுடன் கூடிய விசேட ‘கடல் காப்புறுதி நிதியம்’ (Marine Insurance Buffer) ஒன்றினை உருவாக்க வேண்டும்.
04. இராஜதந்திர நடுநிலைமை மற்றும் IORA தலைமைத்துவம்
- இலங்கை கடற்படையால் ஈரானிய வீரர்கள் 32 பேர் மீட்கப்பட்டமை பாராட்டுக்குரியது. எனினும், இலங்கை வெறும் பார்வையாளராக மட்டும் இருக்கக் கூடாது.
- இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் சங்கத்தில் (IORA) இலங்கைக்கு இருக்கும் தலைமைத்துவத்தைப் பயன்படுத்தி, வர்த்தகக் கப்பல் பாதைகள் இராணுவமயமாக்கப்படுவதைத் தடுக்க இலங்கை தீவிரமாக இராஜதந்திர ரீதியில் செயற்பட வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவரின் அறைகூவல்:
“குறை கூறுவதை விடுத்துத் தீர்வுகளை முன்வைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம். சர்வதேச எரிசக்திச் செலவு அதிகரிப்பைச் சாட்டாகக் கொண்டு, உழைக்கும் மக்கள் மீது 18 சதவீத டிஜிட்டல் VAT போன்ற மேலதிக வரிகளைச் சுமத்தி நசுக்க அரசாங்கம் முற்படக் கூடாது.” என சஜித் பிரேமதாச திட்டவட்டமாகத் தெரிவித்தார்.