கிர்கிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லை மோதல்களில் 31 பேர் பலி

நீர் வசதியொன்றில் கண்காணிப்பு கமெராக்கள் நிறுவப்பட்டதையடுத்து, இரண்டு தரப்பு மக்களும் மறு தரப்பு மீது கற்களை எறிந்ந நிலையிலேயே மோதல்கள் கடந்த புதன்கிழமை ஆரம்பித்திருந்தன.

யுத்தநிறுத்தமொன்றும், படைகள் பின்வாங்கலும் இணங்கப்பட்டபோதும், சில சூடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளதாகத் தோன்றுகின்றது.

மேற்குறிப்பிட்ட இழப்பு விவரங்கள் கிர்கிஸ்தானைச் சேர்ந்தவை என்றவை என்ற நிலையில், தஜிகிஸ்தானின் இழப்புகள் தெளிவில்லாமலுள்ளது.

சமூகவலைத்தளங்களில் பகரப்பட்ட புகைப்படங்களின்படி, கிர்கிஸ்தானின் பட்கென் பிராந்தியத்தைச் சூழவுள்ள பிரச்சினைக்குரிய பகுதியொன்றில் சில கட்டடங்கள் எரிந்த வண்ணம் காணப்பட்டிருந்தன.

ஆரம்ப மோதல்கள் தீவிரமடைந்தையடுத்து எல்லைக் காவலர்கள் மோதலில் பங்கெடுத்ததாகவும், நேற்று முன்தினம் இரண்டு தரப்பு இராணுவப் பிரிவுகளும் சூட்டைப் பரிமாறியுள்ளன.