இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று நிலையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ளது. இந்தக் கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 14 ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. இந்த நிலையில், பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மதித்து பொதுமக்கள் வீடுகளில் இருந்தால் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னர் நாட்டினை திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் – 8)


2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இவை முன்னர் ஈ.பி.ஆர.எல்.எவ்.நெற்.கொம், சூத்திரம்.கொம், தேனீ.கொம் ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்பு பட்டவர்களின் கவனிப்புக்கும் கருத்;துக்கும் பொருத்தமானவை என்று கருதுகிறேன் . எனவே இக்கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாக மீள்பதிவு செய்கிறேன்.

இலங்கை: கொரனா செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 71 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  கொரோனா ஒழிப்பு கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் நேற்று மாலை வரை ஒரே நாளில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 103 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவப்பு பட்டியலில் இலங்கை இணைப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது. ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொஸ்டாரிகா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் டிரினிடாட் – டொபாகோ ஆகிய 07 நாடுகளே இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 8ம் திகதி முதல் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு நாட்டுக்கும் பிரித்தானிய பிரஜைகள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 7ஆம் திகதி காலை 4 மணியுடன் தளர்த்தப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அப்பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 14 ஆம் திகதி வரையிலும், மேலும் ஏழு நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.
இதற்கான உத்தியோகபூர்வு அறிவிப்பு, நேற்று (02) மாலை, விடுக்கப்பட்டன. மூன்றாவது கொரோனா அலைக்குப் பின்னர் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், தளர்வின்றி தொடர்ச்சியாக 19 நாள்கள் அமுல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்தில் கர்ப்பிணிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளதுடன், இதுவரை 52 கர்ப்பிணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 19 ஆண்கள், 12 பெண்கள் அடங்கலாக 31 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் நால்வர் மரணமடைந்துள்ளனர் எனவும்  மாவட்டத்தின் மொத்த மரண எண்ணிக்கை  91ஆக அதிகரித்துள்ளதாகவும் அப்பணியகம் தெரிவித்துள்ளது.

கொரனா: பெருவில் மோசமான உயிரிழப்பு வீதம்

பெருவானாது கொரோனாவால் உயிரிழந்த தமது உத்தியோகபூர்வ எண்ணிக்கையை 180,764ஆக நேற்று ஏறத்தாழ மூன்று மடங்காக்கியுள்ளது. அரசாங்க மீளாய்வொன்றைத் தொடர்ந்தே பெரு இவ்வாறு உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மாற்றியுள்ள நிலையில், உலகின் மோசமான இறப்பு வீதத்தைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.

தடுப்பூசி அரசியல்: முதியோர்கள் புறக்கணிப்பு

(எம்.எஸ்.எம். ஐயூப்)

மே மாதம் 21ஆம் திகதி, கொவிட்- 19 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. அது, ஜூன் மாதம் ஏழாம் திகதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கால கட்டத்துக்குள், மே 25, 31, ஜூன் நான்கு ஆகிய திகதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆயினும், மே மாதம் 25 ஆம் திகதி, பொது மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார்கள் என்று, மே 31, ஜூன் நான்கு ஆகிய திகதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது என, பின்னர் அறிவிக்கப்பட்டது.

ஒடுக்கப்பட்டோரின் நல்வாழ்வுக்காக ஒலித்த குரல்

சங்கைக்குரிய பத்தேகம சமித தேரர், சிறந்த பிக்குவாகவும் நேர்மையும் கொள்கைப்பற்றும் மிக்க அரசியல்வாதியாகவும் சுயநலமற்ற, சமூகச் செயற்பாட்டாளராகவும், புத்தரின் போதனைகளை மனச்சாட்சிக்கு விரோதமின்றிக் கடைப்பிடித்த முன்னுதாரண புருஷராகவும் வாழ்ந்து காட்டினார். சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டடோர் போன்றோரின் நல்வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்த இவரது முன்மாதிரியான வாழ்வு நினைவுகூரப்படவேண்டியது ஆகும்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடானது,  தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமென இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இந்த மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை இப்பயணக்கட்டுபாடு நீடிக்கப்பட்டுள்ளதென, கொரோனா ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.