ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 315.84 முதல் ரூ. 315.70 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 332.87 முதல் ரூ. 333.49 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சற்று குறைந்துள்ளதுடன், சுவிஸ் பிராங்குக்கு எதிராக சற்று உயர்ந்துள்ளது. 

மாக்சிம் கார்க்கி(Maxim Gorky)

(சாகரன்)

ஈழவிடுதலைப் போராட்டத்தின் போராளிகளில் பலரும் வாசித்த புத்தகம் எது என்றால் அது தாய் என்ற புத்தகமாக இருக்கலாம்…? இதனை எழுதிய மாக்சிம் கார்க்கி பிறந்த தினம் இன்று.

ரூபாயின் பெறுமதியில் மாற்றம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி திங்கட்கிழமை (27) சற்று குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள்  தெரிவிக்கின்றன.

காய்கறிகளின் விலையில் மாற்றம்

அனைத்து காய்கறிகளின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக பேலியகொட மனிங் பொதுச் சந்தை சங்கம் தெரிவித்துள்ளது. மனிங் சந்தையில் அவரை, கரட், கத்தரிக்காய், தக்காளி, லீக்ஸ், உட்பட அனைத்து காய்கறிகளின் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.

சீனாவின் கடன் பொறிக்குள் 22 நாடுகள் சிக்கியுள்ளன

2008 மற்றும் 2021 க்கு இடையில் 22 வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த சீனா 240 பில்லியன் டொலரை செலவிட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது. அந்நாடுகளில் பல சீனாவிடம் பல்வேறு திட்டங்களுக்காக கடன் பெற்றுள்ளதாகவும், அவற்றை திருப்பி செலுத்துவதில் தற்போது கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆசிரியர் பற்றாக்குறைக்கு மிக விரைவில் தீர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று, நேற்று ( 27)  நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

நாவலர் கலாசார மண்டபத்தை கைமாற்றியமைக்கு எதிராக மகஜர்

யாழ். மாநகர சபையின் ஆளுகையில் இருந்த நாவலர் கலாசார மண்டபம், வடக்கு மாகாண ஆளுரால் மத்திய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர், ஆளுநர் செயலகத்தில் இன்று  (28) கையளிக்கப்பட்டது.

ராகுல் ஏன் குறிவைக்கப்படுகிறார்?

ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்ற வெளிப்படையான பழிவாங்கும் நடவடிக்கை இருக்கமுடியாது. ‘மோடி’ என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தம் சொன்னாராம். வழக்குப் போட்டிருக்கிறார்கள். இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதும். மறுநாளே பதவியைப் பறித்து விட்டது பா.ஜ.க.!

இலங்கை தன் கடன் மறுசீரமைப்பில் கானாவை பின்பற்றுமா?

(ச.சேகர்)

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நீடிக்கப்பட்ட நிதி வசதி கடந்த வாரம் கிடைத்திருந்தது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டிருந்த முதற்கட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தின் நிதி வசதி வழங்கப்பட்டிருந்ததுடன், நான்கு ஆண்டுகளுக்கு தொடரும் இந்தத் திட்டத்தினூடாக மொத்தமாக பெற்றுக் கொள்ளும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்துவதற்கு இலங்கைக்கு 4 முதல் 10 வருட கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

முடிந்தளவு பணம் தந்து உதவுங்கள்: முன்னாள் ஜனாதிபதி

தண்டப்பணத்தை செலுத்த தனக்குக் கொடுக்கப்பட்ட 6 மாத கால அவகாசத்தில் ஏற்கனவே 3 மாதங்கள் முடிந்துவிட்டதாகவும் எனவே மீதமுள்ள 3 மாதங்களுக்குள், உங்களால் முடிந்தளவு பணத்தைக் கொடுத்து உதவுங்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.