ஹட்டன் – டிக்கோயா நகர சபையில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற மாதாந்த அமர்வு, கடுமையான பதற்ற நிலையை எட்டியது. கடந்த மாதம் 24ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் சபை அறிக்கை (Minutes) தொடர்பான சர்ச்சை காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியான அமர்வே மீண்டும் நடத்தப்பட்டுள்ளது.