ரங்கசாமி ஐயங்காருக்குச் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். பிழைப்புக்காக ஆந்திராவில் உள்ள நெல்லூருக்குச் சென்றவர் , அங்கேயே தங்கிவிட்டார். அடுத்தடுத்து மூன்று பெண்களைப் பெற்றுவிட்டு , ஏகப்பட்ட மன உளைச்சலோடு இருந்தவருக்கு நாற்பது வயதில் ஒரு நல்ல செய்தி வந்தது. அது , பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் கிடைத்த குமாஸ்தா வேலை. இதுதான் அந்தக் குடும்பத்துக்கே ஒரு திருப்புமுனை. வேதா , அம்புஜா , பத்மா மூன்று பெண்களும் சரி , மூத்த பையன் ஸ்ரீநிவாசனும் சரி , அப்பா பேச்சைத் தட்டாத பிள்ளைகள். படித்து முடித்ததும் எச்.ஏ.எல். ஃபேக்டரியில் ஸ்ரீநிவாசன் வேலைக்குப் போக ஆரம்பித்த பின்னர் அந்தக் குடும்பத்துக்கு ஓரளவு வசதி வர ஆரம்பித்தது.
(“அம்முவிலிருந்து ஆயிரத்தில் ஒருவன்(ஒருத்தி) வரை” தொடர்ந்து வாசிக்க…)