பற்குணம் A.F.C (பகுதி 83 )

கொழும்பில் இருந்து திரும்பிய அரச அதிபர் பஞ்சலிங்கம் பற்குணத்தை அழைத்தார்.பற்குணத்தை கண்ட அவர் இருப்பிலுள்ள சகல உணவுகளையும் மக்களுக்கு விநியோகிக்குமாறு பணித்தார்.அதற்கு பற்குணம் போதிய அளவு உணவுகள் இருப்பில் இல்லை என்றார்.அதற்கு ஏற்கனவே இருப்பில் உள்ள உணவுகளை விநியோகிக்க சொன்னார்.அதற்கு அவை பழுதடைந்த உணவுகள் என பதிலளித்தார்.சனத்துக்கு உணவுகள் இல்லை நீர் பழுதடைந்தவை என்கிறீர் .ஆனால் அதைப்பற்றி கவலையில்லை எல்லா உணவுகளையும் விநியோகிக்கும்படி உதஃதரவிட்டார்.

அரச அதிபரின் உத்தரவு என்பதால் பற்குணத்துக்கு வேறு வழி இருக்கவில்லை.எல்லாவற்றையும் விநியோகித்தார்.இது கூட்டுறவு நிறுவனங்கள் ஊடாக பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.இது அரச அதிபர் பஞ்சலிங்கத்தின் கவனத்துக்கும் போனது.விபரம் தெரிந்த பஞ்சலிங்கம் தன் பொறுப்பை மறைத்து இது உணவு கட்டுப்பாட்டு அதிகாரி பற்குணமே இதற்குப் பொறுப்பு என்று பற்குணத்தின் மீது பழியைப் போட்டுவிட்டார்.்பற்குணம் தன் வாழ்நாளில் பெரும் அசௌகரியத்துக்குள்ளான சம்பவம் இது.

பற்குணத்துடன் பணிபுரிந்தவர்களுக்கு உண்மை தெரியும்.ஆனாலும் அவை எடுபடவில்லை.இதேவேளை புலிகள் அமைப்பினர் சிலர் பற்குணத்தை விசாரித்தனர்.அதிஷ்டவசமாக ஏற்கனவே பற்குணம் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு எதிராக விடுத்த பதில் அறிக்கை புலிகளின் விசாரணைகளிலிருந்து பாதுகாத்தது.புலிகளுக்கும் பஞ்சலிங்கமே பற்குணம்தான் காரணமென கூறியிருந்தார்.

இதைவிட பற்குணம் விடுத்த அறிக்கையால் பாதுகாப்புப் படை கீழ்நிலை அதிகாரிகள் அறிந்து ஆத்திரம் அடைந்தனர்.இராணுவ முகாம்களுக்குள் போய்வரும் உணவு மற்றும் கூட்டுறவு திணைக்கள ஊழியர்களிடம் பற்குணத்தை கண்டால் சுடுவோம் என சொல்லி அனுப்பினார்கள்.இந்த தகவலை பற்குணத்துக்கு பலர் பரிமாறினர்.அதைக் கேட்ட பற்குணம் புன்னகை செய்தார் என ஒருவர் கூறினார்.

பற்குணத்திற்கு பக்கபலமாக பல இராணுவ உயர் அதிகாரிகள் துணை நின்றனர்.அவரகளுடன் பற்குணம் கடமைக்கு மேலாக சிநேகபூர்வமாக யாழ்ப்பாண அகநுலைமைகளை விளக்கி கூறியதாலேயே இவை சாத்தியமாகின.இதைவிட லங்கா சீமனட் நிறுவன இயக்குனர் ஜெயமானே என்பவரும் இதில் பெரும் பங்காற்றிதாக கூறினார்.தன் பணி சிறப்பாக நடைபெற அவரின் கடும் ஒத்துழைப்பும் காரணம் என்றார்.

ஜெயமானே தமிழர்களை அதிகம் நேசித்தவர்.நம்பியவர்.இவரை பின்னாளில் மல்லாகம் சந்தியில் உயரோடு நெருப்பில் புலிகள் எறிந்தனர்.இதில் தானும் ஒருவன் என பெருமை பாராட்டிய மிருகம் ஒன்றை கனடா மொன்றியாலில் கண்டேன்.

ஜெயமானே மரணம் பற்குணத்தை வாட்டியது.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)