மறைத்தலின் அழகும் ‘நிகாப்’ தடையும்

(மொஹமட் பாதுஷா)

ஒருமுறை பிரித்தானிய ஆய்வாளர் ஒருவர், முஸ்லிம் முற்போக்குவாதி ஒருவரைப் பார்த்துக் கேட்டார், “நீங்கள் ஏன், உங்களது பெண்களின் முகத்தையும் உடற்பகுதியையும், முற்றாக மறைக்கின்றீர்கள்? ஏன் அவர்களுடன் கைகுலுக்கிக் கொள்வதற்கோ கதைப்பதற்கோ ஏனைய ஆண்களுக்கு இடமளிப்பதில்லை?” என்று. அதற்கு பதிலளித்த அந்த முஸ்லிம் நபர், “நீங்கள் உங்களது பிரித்தானிய மகாராணியை நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடியுமா? முடிக்குரிய இளவரசியுடன் கைகுலுக்குவதற்கான அனுமதி உங்களுக்கு கிடைக்குமா?’ என்று கேட்டார். அதற்கு அந்த பிரித்தானியர், “இல்லை அதற்கான வாய்ப்பே இல்லை” என்றார். “ஏன் அதற்கென்ன காரணம்?” என்றார் முஸ்லிம் நபர். “அவர்கள் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்களைக் காண்பது அரிதான வாய்ப்பாகும். அப்படிக் காணக்கிடைத்தாலும் அவர்கள், கையுறை போட்டுக் கொண்டே கைகுலுக்குவார்கள்” என்றார். அதற்குப் பதிலளித்த முஸ்லிம் நபர் சொன்னார், “நாங்களும் எங்களது வீட்டிலுள்ள பெண்களை, மகாராணியாகவும் இளவரசியாகவுமே பார்க்கின்றோம். அதனாலேயே, பிற ஆண்கள், அவர்களை முகத்துக்கு முகம் சந்திப்பதற்கான, கைகலுக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை” என்றார்.

(“மறைத்தலின் அழகும் ‘நிகாப்’ தடையும்” தொடர்ந்து வாசிக்க…)

மலையக மக்களின் போராட்டத்துடன் நாமும் இணைவோம்

(கிருஷாந் உடன் சாகரன்)

மனித உரிமை மீறல்களால் அதிகம் பாதிக்கப்பட்டு, நீதிக்காக ஏங்கும் நாம், சக மனிதர்களின் வாழ்வுரிமைகள் அழிக்கப்படும்போது கட்டாயமாக குரல்கொடுக்க வேண்டும். மலையக மக்கள் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்கள் கடந்தும் அந்த மக்கள் அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறவில்லை. பொருட்களின் விலைகள் மின்னல் வேகத்தில் ஏறினாலும் அம்மக்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் அளவு கூட்டப்படவில்லை.மிக மோசமான உழைப்பு சுரண்டலை எதிர்கொள்கின்றனர். எத்தனையோ மனித உரிமைகள் அமைப்புக்கள், தொழிலாளர் அமைப்புக்கள் இருந்தும் இந்த விடயம் குறித்து கவனம் எடுக்கவில்லை.

(“மலையக மக்களின் போராட்டத்துடன் நாமும் இணைவோம்” தொடர்ந்து வாசிக்க…)

மீண்டும் எழுந்து வாரீரோ…..?.

ஆண்டு 1993. ஜனவரி 15 தேதியிடப்பட்ட கடிதம் யாழ்ப்பாணத்தில் எங்களிற்கு கிடைத்தது மார்ச் 12. கொழும்பில் இருந்து மைத்துனன் அனுப்பியது. அதன்பிற்பாடே எங்களிற்கு தெரியும் 29 டிசம்பர் 1992 இல் நெல்லியடியில் இருந்து புறப்பட்ட மாமா கொழும்பைச் சென்றடையவில்லை என்பது.யாழ்ப்பாணம் பிரேமதாசாவின் கிடுக்குப்பிடியில் இருந்தது அந்நேரத்தில்.

(“மீண்டும் எழுந்து வாரீரோ…..?.” தொடர்ந்து வாசிக்க…)

இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 2)

(சிவகாமி)

வாழ்வின் பின்னோக்கிய பயணமிது

சிவகாமி தனக்கான தன் பெயரை இயக்கத்தில் மாற்றி வேறு ஓர் அடையாளப் பெயருடன் செயலாற்றத் தொடங்கினாள். அங்கு போன பின்பு தன்னை சிவகாமி நிறைய கற்றலுக்குட்படுத்தினாள். தேடலுக்குட்படுத்தினாள். ஆனால் என்னவோ அவளின் சித்தத்தில் தர்மமும் நீதியும் இருந்தது. அப்போது தான் அவளுக்கு வழிகாட்ட சுதாக்கா ,மனோமாஸ்டரின்  பேச்சுக்கள் புரிந்தது. பிடித்தும் போய் விட்டது. அவர்களை அவள் நேசித்தது மட்டுமல்ல மதித்து நடந்து அவர்களின் உரைகளைக் கவனித்து தன்னைச் செதுக்கினாள்.பல தேடல்களை தானே தேடினாள்.ஆனால் விடை எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும் கூட  உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காத எண்ணத்தை மட்டும் அவள் சித்தத்தில் பதிய விட்டிருந்தாள்.

(“இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 2)” தொடர்ந்து வாசிக்க…)

சமாதானத்துக்கான நொபல் பரிசு: இம்முறை யாருக்கு?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பரிசுகள் தருகிற சுவையை விட அது யாருக்குக் கிடைக்கும் என எதிர்வு கூர்வதில் சுவை அதிகம். பரிசுகள் ஏன் வழங்கப்படுகின்றன என்ற கேள்வி ஒருபுறம் பதில்களைத் தேடியபடி இருக்கையில், மறுபுறம் அது யாருக்கு வழங்கப்படுகின்றன என்பதைத் பொறுத்து பரிசின் நோக்கமும் போக்கும் விளங்கப்படுகின்றன. அங்கீகாரத்துக்கான ஆவல் பரிசுகளின் பெறுமதியை உயர்த்துகின்றன. இது உள்ளுரில் வழங்கப்படும் பரிசுகள் தொட்டு உலகளாவிய பரிசுகள் வரை அனைத்துக்கும் பொருந்தும். இதனாலேயே பரிசுகள் யாருக்குக் கிடைத்தன என்பதை விட யாருக்குக் கிடைக்கும் என்பதை அறியும் ஆவல் மிகுகிறது.

(“சமாதானத்துக்கான நொபல் பரிசு: இம்முறை யாருக்கு?” தொடர்ந்து வாசிக்க…)

உலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் சாதனைகள்

சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், உலகில் வேறெந்த நாட்டிலும் வாழும் மக்கள் அறிந்திருக்காத வசதி வாய்ப்புகள், சோவியத் பிரஜைகளுக்கு வழங்கப் பட்டன. மேற்கத்திய நாடுகளில் கூட, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தான் அவை நடைமுறைக்கு வந்தன. அந்த வகையில், இன்றைக்கு மேற்குலகில் வாழும் மக்கள் அனுபவிக்கும் சலுகைகளை, சோவியத் யூனியன் தான் முதன் முதலாக அறிமுகப் படுத்தியது.

(“உலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் சாதனைகள்” தொடர்ந்து வாசிக்க…)

அஷ்ரபும் வடக்கு – கிழக்கு இணைப்பும்

‘எழுக தமிழ்’ பேரணியின் மூலமாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாட்டில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக மற்றொரு சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றார்.

(“அஷ்ரபும் வடக்கு – கிழக்கு இணைப்பும்” தொடர்ந்து வாசிக்க…)

சோவியத் பாடசாலைகளில் மதக் கல்வி போதிக்கப் படவில்லை.

சோவியத் யூனியனில் “தத்துவார்த்தம் ஊட்டப் பட்ட சமூகம்” இருந்ததாக சிலர் கற்பனை செய்து கொள்கிறார்கள். அதாவது, மாணவர்கள், மக்கள் எல்லோரும் “சித்தாந்தத்தால் மூளைச் சலைவை” செய்யப் பட்டனர் என்பது தான் அவர்கள் சொல்ல விரும்புவது. அது சுத்த அபத்தமான கற்பனை. முதலில் சோவியத் யூனியன் மட்டுமல்ல, உலகில் எந்த நாடாக இருந்தாலும் பெரும்பாலான பாடங்கள் பொதுவானவை. வரலாறு, சமூகவியல் போன்ற பாடங்கள் மட்டும் தான் நாட்டுக்கு நாடு மாறுபடும்.

(“சோவியத் பாடசாலைகளில் மதக் கல்வி போதிக்கப் படவில்லை.” தொடர்ந்து வாசிக்க…)

ஆசிரியர் தினத்தில் என் அனுபவப் பகிர்வு

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

என்னையும் ஆசிரியராக்கிய எனது ஆசிரியர்களின் நினைவுகளை மனத்தில் மீட்டுப் பார்க்க வைக்கும் இந்த ஆசிரியர் தினத்தை நான் நினைவு கூர்வதில் மகிழ்ந்து நிற்கின்றேன். புலம் பெயர் தேசத்து பட்டமும் இதனைத் தொடர்ந்த பயிற்சிகளும் என்னை கணணித்துறையில் வாழ்க்கையிற்கு தேவையான பொருளீட்டுதலுக்கான பணத்தைத் தேடுவதில் ஈடுபடுத்தியிருந்தாலும் நான் ஆசிரியராக என்னை அடையாளப்படுத்துவதில் மகிழ்ந்திருக்கின்றேன். மகிழ்ந்திருக்கின்றேன் என்பதையும் விட எனது அடையாளமாக ‘மாஸ்ரர்” என்பதே பொது வெளியில் அதிகமாக இருக்கின்றது தெரிகின்றது. தொடரந்தால் போல் 40 வருடங்களாக உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தில் ஈடுபடுவதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

(“ஆசிரியர் தினத்தில் என் அனுபவப் பகிர்வு” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். கூச்சல் குழப்பங்களும் கொழும்பின் கொண்டாட்டமும்

சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் முதல் சிறிசேன வரை 1931 -2016)’ என்கிற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 01, 2016) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஒரு நூல் வெளியீட்டு விழா என்கிற அளவோடு மாத்திரம் நின்றுவிடாமல், ‘புவிசார் அரசியலில் கைதிகளாய் இருக்கின்ற ஈழத் தமிழர்கள்’ என்கிற விடயத்தினை முன்னிறுத்திய திறந்த கலந்துரையாடலாகவும் அந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது.

(“யாழ். கூச்சல் குழப்பங்களும் கொழும்பின் கொண்டாட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)