பற்குணம் A.F.C (பகுதி 78 )

முல்லைத்தீவில் ஞானசந்திரன் பல நெருக்கடிகள் கொடுக்க நினைத்து தோல்விகளையே கண்டார்.இந்த காலங்களில் இலங்கையின் இனப்பிரச்சினைகள் தொடங்கின.பல அமைப்புகள் மறைமுகமான தொடர்புகள் கொண்டபோதும் அவரகள்மீதான நம்பிக்கைகள் அவருக்கு ஏற்படவில்லை .அவரகளின் தேவைகளை நிறைவேற்றியிருக்கிறார்.ஆரம்பகாலங்களில் சந்ததியார் தங்கதுரை மூலமாக அறிமுகமானவர்.பாலகுமார் பல்கலைக்கழகத்தில் இவரின் மாணவர்.அதேபோல பத்மநாபாவும் வேறுவகைகளில் அறிமுகமானவர்.

இனப்பிரச்சினைகள் அதிகரிக்க யாழ்ப்பாண நிர்வாகம் சீர்குலைய தொடங்கியது.அதிலும் உணவு விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.இக் கட்டத்தில் அவரின் மருமகன் ஒருவரும் இராணுவ சுற்றிவளைப்பில் திடீரென கைது செய்யப்பட்டார்.இந்த தகவல் கிடைத்ததும் இராணுவ அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உடனே விடுவித்தார்.அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பணியாற்றுவது தொடர்பாக ஆர்வம் கொண்டார்.

அது ஆபத்து என்ற காரணத்தால் எங்கள் அம்மா,அய்யா விரும்பவில்லை.மேலும் இயக்கங்கள் தொடர்பாக அவர்களுக்கும் எங்களுக்கும் பயம் இருந்தது.அவரகள் இலகுவாகவே துரோகி என்றால் மக்களும் நம்பும் மனநிலையே இருந்தது.
—————————————————————————————

பற்குணத்தின் இன்னொரு பக்கம்

பற்குணம் 1977 கலவரத்தின் பின் மனைவி ஊரில் வாழ்ந்தார்.அவரின் மைத்துனர் ஒருவர் அவரின் வீட்டில் எல்லையோடு ஒட்டிய பெரியகாணி இருந்தது. அது விற்பனைக்கு வந்தபோது அவரும் அதில் ஒரு பங்கினை வாங்கினார்.இதில் வாங்கிய பங்காளரிடம் ஏற்பட்ட பிணக்கு காரணமாக நீதிமன்றம் சென்றனர்.இதன் வழக்கு பற்குணத்தின் மைத்துனருக்கே சாதகமானதாக இருந்தது.இதனால் ஆத்திரமுற்ற ஒரு பங்காளர் செல்லையா என்பவன் அருகில் இருந்தான்.அவன் தினமும் குடித்துவிட்டு தகராறு பண்ணுவான்.

பற்குணத்தின் மைத்துனர் ஒரு ஆசிரியர்.கௌரவம் காரணமாக அந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து வேறுஇடத்தில் குடியேறினார்.பயம் காரணமாகவே அவர் வெளியேறியதாக எண்ணி மேலும் மிரட்ட எண்ணினான்.

செல்லையா கொஞ்சம் அந்தப் பகுதியில் சண்டித்தனங்களுக்கு பெயர் போனவன்.எனவே அவன் பற்குணத்தை சந்தித்து உங்கள் மைத்துனருக்கு சொல்லுங்கள்,வழக்கை கைவிடாவிட்டால் கொலை செய்வேன் என்றான்.அதைக் கேட்ட பற்குணம் முதலில் அதை செய்துவிட்டு என்னிடம் வந்து சொல்லு.உந்த மிரட்டலுக்கு இந்த ஊர் எடுபடும்.என்னிடம் சொல்லாதே போ என விரட்டி அனுப்பினார்..அதன் பிறகு செல்லையா வாலாட்டுவதில்லை.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)