திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் முரண்பாடு

தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நிகழ்வு, இன்று (15) ஆம்பிக்கப்பட்ட நிலையில் நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டது. பருத்தித்துறை வீதி – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபன் நினைவு தூபியில், மேற்படி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

(“திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் முரண்பாடு” தொடர்ந்து வாசிக்க…)

சொகுசு வாகனத்தை நிராகரித்த தென் மாகாண ஆளுநர்

தென் மாகாண ஆளுநருக்கு, 430 இலட்சம் ரூபாய் செலவில் வாகனமொன்றை ​கொள்வனவு செய்வதற்காக, மாகாண சபையில் ஒதுக்கப்பட்ட நிதியை, அவர் நிராகரித்துள்ளார். அத்துடன் குறித்த நிதியை, அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தவுள்ளதாக, ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். தென் மாகாண செயலாளருக்கு கடிதம் மூலம் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார். வாகன கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட குறித்த நிதியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய முன்னெடுக்கப்பட்டுவரும், விசேட வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற எண்ணியுள்ளதாக, ஆளுநர் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘வெப்பமே உயிரிழப்புக்கு காரணம்’

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் வரட்சியுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தாலேயே, நந்திக்கடல் பகுதியில், மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக, மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், இன்று (12) தெரிவித்தார். முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில், நேற்று (11) பெருமளவான மீன்கள் உயிரிந்த நிலையில் கரையோதுங்கியுள்ளன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது. இது தொடர்பில் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், கடந்த வருடமும், அதிக வெப்பநிலை காரணமாக இதேபோன்று, மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியதாகத் தெரிவித்தார்.

ஊடக சந்திப்பு

பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம்
වැවිලි ශ්‍රම යිති මුහය
Plantation Labour Rights Confederation
152 1/3 Hulftsdorp Street, Colombo 12
plantationlabour@gmail.com 071-6275459
10-09-2018

பிரதம ஆசிரியர்
மதிப்புக்குரிய ஐயா/அம்மணி,
ஊடக சந்திப்பு
பெருந்தோட்ட கூட்டு ஒப்பந்தமும் தொழிலாளர்களின் சம்பள உரிமையும்
திகதி: 12-09-2018
நேரம்: பி.ப. 2.00 மணிக்கு
இடம்: பிரைட்டன் ரெஸ்ட் இல. 214ஃ2, மெசஞ்சர் வீதி, கொழும்பு 12.

(“ஊடக சந்திப்பு” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை- வியட்நாம் நேர​டி விமான சேவை

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில், நேரடி விமான ​சேவையினை ஆரம்பிக்க இரு நாட்டு பிரதமர்களும் அவதானம் செலுத்தியுள்ளனர். வியட்நாமில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொள்ளச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வியட்நாம் பிரதமர் கிரையன் சூன் புக் ஆகியோருக்கிடையில் இன்று(11) இடம்பெற்றுள்ள கலந்துரையாடலின் போதே இந்த விமான சேவைக் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

(“இலங்கை- வியட்நாம் நேர​டி விமான சேவை” தொடர்ந்து வாசிக்க…)

குருந்தூர் மலைக்கு செல்ல தற்காலிக தடை

முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை – தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைக்கு, பொதுமக்கள், மதம் சார்ந்தவர்கள் எவரும் செல்வதற்கு, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 04ஆம் திகதியன்று குருந்தூர் மலைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் நோக்குடன் பிக்குமார் உள்ளிட்ட 12 பேர் சென்றுள்ளார்கள். (“குருந்தூர் மலைக்கு செல்ல தற்காலிக தடை” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் சேவையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர்

நேற்றையதினம் 07/09/2018 வெள்ளிக்கிழமை, ஆத்திமோட்டை தமிழ் வித்தியாலத்தில் பொதுமக்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர், அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பிரதேசசபை ஊழியர்களுடன் இணைந்து சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. சிரமதானப்பணியின் போது அகற்றப்பட்ட கட்டிட கழிவுகளை மேடு பள்ளமாக காணப்பட்ட ஆத்திமோட்டை 7ம் வீதி குறுக்குஒழுங்கையில் கொட்டப்பட்டு நண்பர்களுடன் இணைந்து நிரவப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

மட்டக்களப்பு, புல்லுமலை தண்ணீர் போத்தலிடும் தொழிற்சாலைக்கு எதிராக, மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நாளை (07) நடைபெறுவுள்ள ஹர்த்தாலுக்கு பல்வேறு கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகள் பல பூரண ஆதரவு தெரிவித்துள்ளனர். குறித்த ஹர்த்தாலுக்கான அழைப்பு, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பால் விடுக்கப்பட்டிருந்தனர். (“தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்” தொடர்ந்து வாசிக்க…)

7 பேரை விடுவிக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு: உச்சநீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை அனுபவித்து வருகின்றன பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கான அதிகாரம் தமிழக அரசிற்கு உள்ளனதென, உச்ச நீதிமன்றம் ​அறிவித்துள்ளது.