அலெப்போவில் அமெரிக்க படைகள்

அலெப்போவில் அமெரிக்க இராணுவ வீரர்கள் கடந்த ஐந்தாண்டுகளாக செயற்பட்டு வந்துள்ளனர். இதை எனக்கு ஏற்கனவே ஒருவர் உறுதிப் படுத்தி இருந்தார். அமெரிக்காவில் வாழும் வெள்ளையின அமெரிக்கப் பெண் ஒருவருடன் இணையத்தில் அரட்டை அடித்த நேரம் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருந்தார். அமெரிக்க இராணுவ வீரரான அவரது கணவர், ஐந்து வருடங்களுக்கு முன்னர் சிரியாவில் நடந்த யுத்தத்தில் கொல்லப் பட்டதாக கூறினார். அந்த இடமும் அலெப்போ தான். அப்போது இந்தத் தகவல் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், சிரியாவின் உள்ளே தனது படைகள் இருப்பதாக, அமெரிக்க அரசு எந்தக் காலத்திலும் ஒத்துக் கொள்ளவில்லை. அமெரிக்க அரசு இப்படி எத்தனை இரகசியங்களை தனது மக்களுக்கு மறைத்திருக்கும்?

(Kalai Marx)

எனது கருத்தை விமர்சிக்க கட்சியின் தலைமையைத் தவிர வேறு யாருக்கும் தகுதி கிடையாது – திருநாவுக்கரசர்

நான் தெரிவிக்கும் கருத்தை விமர்சிக்கும் தகுதி கட்சியின் தலைமையைத் தவிர, வேறு யாருக்கும் கிடையாது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நேற்று நடைபெற்ற ஒரு சமூக சேவை சங்கத்தின் மண்டல மாநாட்டில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

(“எனது கருத்தை விமர்சிக்க கட்சியின் தலைமையைத் தவிர வேறு யாருக்கும் தகுதி கிடையாது – திருநாவுக்கரசர்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்.விபத்தில் 10 பேர் பலி

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத நிலையத்துக்கு முன்னால், சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 10 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். மாதம்பேயிலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வானொன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ​நேருக் குநேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுற்றுலா வாகனத்தில் பயணித்த, 4 பெண்களும் 6 ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும்,

(“யாழ்.விபத்தில் 10 பேர் பலி” தொடர்ந்து வாசிக்க…)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் விலகாவிட்டால் நீதிமன்றம் செல்வேன் – சுப்பிரமணியன் சுவாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினருமான அவர் இது குறித்து ‘தி இந்து’வுக்கு விரிவான பேட்டி அளித்தார்.

(“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் விலகாவிட்டால் நீதிமன்றம் செல்வேன் – சுப்பிரமணியன் சுவாமி” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்,

(முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்)

அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள் நீடிப்பு,

பிரான்சில் நெருக்கடி நிலையை ஜூலை மாதம் 15-ந் தேதி வரை மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்க வகை செய்து, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளது . அதன்பேரில் நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஓட்டெடுப்பில், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பதற்கு 288 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் நிறைவேறியது. எதிராக 32 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

(“பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்,” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். பல்கலை மாணவர் கொலை: பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐவரையும், இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்.நீதவான் நீதிமன்றம், இன்று (16) உத்தரவிட்டது. உயிரிழந்த இரு மாணவர்களில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐவரும், பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த படுகொலைச் சம்பவம், யாழ். கொக்குவில், குளப்பிட்டி பகுதியில், கடந்த மாதம் 20ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருணாநிதிக்கு மூச்சுத் திணறல்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு, ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டதாக, காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. கருணாநிதியின் உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறலை சரி செய்ய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“கருணாநிதிக்கு மூச்சுத் திணறல்” தொடர்ந்து வாசிக்க…)

More 1 of 6,715 சம்பளப் பிரச்சினை தொடர்பாக தொழிலாளர்களுக்கு அறிவூட்டுவதற்காக மக்கள் தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ள துண்டுபிரசுரம்

இவ்வருடம் கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தொழிலாளர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக மக்கள் தொழிலாளர் சங்கம் விபரமான துண்டுபிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளதுடன். தோட்டங்கள் தோரும் அதனை வினியோகித்து வருகிறது.

(“More 1 of 6,715 சம்பளப் பிரச்சினை தொடர்பாக தொழிலாளர்களுக்கு அறிவூட்டுவதற்காக மக்கள் தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ள துண்டுபிரசுரம்” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதி டுட்டேர்ட்டேயின் பதவி பறிபோகுமா?

பிலிப்பைன்ஸின் சர்ச்சைக்குரிய ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டே, தனது பதவியைப் பறிகொடுக்கக்கூடிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக, அந்நாட்டின் செனட்டர்கள் இருவர் தெரிவித்துள்ளனர். நாட்டின் போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துகளே, அவர் மீதான இந்த விமர்சனங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

(“ஜனாதிபதி டுட்டேர்ட்டேயின் பதவி பறிபோகுமா?” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் 6 பேருக்கு எச்.ஐ.வி தொற்று

யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் 6 பேர் புதிதாக எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் தாரினி குருபரன் தெரிவித்தார். ‘இவர்களில் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் உள்ளடங்குகின்றனர். யாழ். மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு, 12 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். 2015ஆம் ஆண்டு ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், 2016 ஆம் ஆண்டு, 6 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இது சடுதியான அதிகரிப்பை எடுத்துக் காட்டுகின்றது’ என அவர் மேலும் கூறினார்.

(“யாழில் 6 பேருக்கு எச்.ஐ.வி தொற்று” தொடர்ந்து வாசிக்க…)