கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் வெடிப்பொருட்களை வெடிக்க வைத்து உயிரிழந்த தீவிரவாத குழுவின் உறுப்பினர்களுக்கு மீரிகம- கிரிஉல்லயில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றிலிருந்து ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள்கள் தொடர்பில், மேல் மாகாண வடக்கு பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினரும் மீரிகம பொலிஸாரும் இன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Category: செய்திகள்
சாய்ந்தமருது தாக்குதல்; சஹ்ரானின் குடும்பத்தினரே பலி; மனைவியும் குழந்தையும் காயம்?
சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள், தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவரும் இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரானின் குடும்பத்தினரே உயிரிழந்துள்ளனர் என்றும் சம்பவத்தில் காயமடைந்த பெண்ணும் குழந்தையும், சஹரானின் மனைவியும் மகளும் என்றும் தெரியவருகிறது. காத்தான்குடியில் இருந்து இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்ட சஹ்ரானின் சகோதரி ஹாஷிம் மதனியா, சஹ்ரானின் மனைவியும் மகளும் காயமடைந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
‘இது முடிவல்ல’ IS அமைப்பு எச்சரிக்கை
எதிர்வரும் காலங்களில், உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்று, இஸ்லாமிய இராச்சியம் எனும் பெயரில் இயங்கும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘ஈராக், சிரியா பாணியில் இலங்கையில் தாக்குதல் திட்டம்’
ஈராக், சிரியா நாடுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போன்று இலங்கையிலும் அதிரடித் தாக்குதல்களை நடத்த. தீவிரவாதிகள் திட்டமிட்ட அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது. இலங்கை வந்த அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் நடத்திய புலனாய்வு விசாரணைகளில். இது தொடர்பான தகவல்கள் வெளிவந்தள்ளதாக. இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரக்கண்டியில் பல ஆயுதங்கள் மீட்பு
திருகோணமலை – இரக்கண்டி பகுதியில் இன்று (27) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என, கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவற்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து, மோட்டார் சைக்கிளொன்றும் ஒவ்வொன்றும் 130 கிலோகிராம் எடையுடைய, வெடிகுண்டு குச்சிகள் 51, 27 அடியைக் கொண்ட பாதுகாப்புக் கம்பிகள், 215 டெட்டோனேட்டர்கள் என்பவை மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
நிந்தவூரில் தற்கொலை அங்கிகள் மீட்பு
அம்பாறை – நிந்தவூர் பகுதியில், சற்றுமன்னர் வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள், வெடிபொருள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன என, பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு, பதிவு செய்யப்படாத வாகனமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கல்முனை – சவலக்கடை, சம்மாந்துறையில் ஊரடங்கு
கல்முனை – சவலக்கடை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களுக்கு, மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில், பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாகக் கூறப்படும் வீடொன்றை, இராணுவத்தினர், பொலிஸ் அதிரடிப்படையினர் சுற்றிவளைத்த போது, பயங்கரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து, அங்கு மூன்று பாரிய வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அங்கு, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.
வாரணாசியில் பிரியங்கா இல்லை
’2 வருடங்களுக்கு முன்னரே சஹ்ரானில் மாற்றம் ஏற்பட்டது’
தெமட்டகொடயில் FBI சோதனை
தெமட்டகொட பிரதேசத்தில், கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, அமெரிக்காவின் எஃப்.பீ.ஐ விசாரணைப் பிரிவினர், இன்று (26) மாலை, குறித்த பகுதிக்குச் சென்றனர். குறித்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் சுமார் 30 நிமிடங்கள் வரையில், அவ்விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.