மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு படகில் அகதிகள் சிலர் கிரீஸ் நாட்டின் தீவான கிரீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்களது படகு கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். படகு மூழ்கி கிடப்பதை அந்த வழியாக சென்ற துருக்கி கப்பலில் இருந்தவர்கள் பார்த்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து கடலில் தத்தளித்து கொண்டிருந்த 2 பேரை மீட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்டனர். இந்த அகதிகள் படகு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை
இந்தோனேசியா பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900
மியான்மரின் நிவாரண விமானம் வந்தடைந்தது
மியான்மர் விமானப்படை விமானம் (Y8) பேரிடர் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை (06) அன்று கட்டுநாயக்க விமானப்படைக்கு வந்தடைந்தது. மியான்மர் அரசாங்கத்தின் ஒரு குழுவும் நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்கு வந்தது. பேரிடர் நிவாரணத்தில் சுகாதாரப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களும் உள்ளடங்கும்.
பெண்ணுக்கு எதிராக சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு
போதை வஸ்து, சிகரட் கைப்பற்றப்பட்டன
யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
முன்னாள் எம்.பியான செல்லையா இராசதுரை காலமானார்
யாழில் இடி, மின்னல் தேவாலயத்துக்கு சேதம்
யாழில் இடி மின்னல் தாக்கத்தால் தேவாயலம் ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்த வகையில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/187 சங்குவேலி கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் இந்த இடி மின்னல் தாக்கம் சனிக்கிழமை (06) இரவு இடம்பெற்றது. இந்த இடி மின்னல் தாக்கத்தால் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பேரிடர் மரணங்கள் 627 ஆக பதிவு
கண்டி-கொழும்பு ரயில் பயணிகளுக்கு விசேட சலுகை
கண்டியிலிருந்து கொழும்புக்கு புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. புகையிரத பருவ டிக்கெட்டுகளை பயன்படுத்தி இந்த சிறப்பு பேருந்துகளில் பயணிக்க முடியும் என்று அதன் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.
இலங்கையிற்கு உதவ…. அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் வந்தன
டிட்வா சூறாவளி அனர்த்தத்திற்கான இலங்கையின் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக அமெரிக்க வான்போக்குவரத்துத்திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super Hercules விமானங்களும் அமெரிக்க விமானப்படையின் 36ஆவது எதிர்பாராத அவசரநிலைகளுக்கான பதிலளிப்புக்குழுவினைச்(CRG) சேர்ந்த விமானப் படை வீரர்களும் கட்டுநாயக்க விமானத்தளத்தினை ஞாயிற்றுக்கிழமை (07) அன்று வந்தடைந்தனர்.
