தோழர் மிச்சேல் லூக்காஸ் அவர்களுக்கு புரட்சிகர அஞ்சலி!

(Maniam Shanmugam)

சோவியத் மக்களுக்கான கனடிய நண்பர்கள் சங்கத்தினதும் (இவ்வமைப்பு சோவியத் புரட்சிக்கு அடுத்த ஆண்டு 1918 இல் கனடாவில் ஆரம்பிக்கப்பட்டது), சோவியத் மக்களுடன் ஒருமைப்பாட்டுக்கான சர்வதேச சங்கத்தினதும் நீண்டகால தலைவரும், அந்தச் சங்கத்தின் மாத வெளியீடான North Star Compass சஞ்சிகையின் (இது பல மொழிகளில் வெளியிடப்பட்டது) ஆசிரியரும், கனடிய கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலம் அங்கம் வகித்தவருமான தோழர் மிச்சேல் லூகாஸ் (Michael Lucas) அவர்கள் தமது 94 ஆவது (1926 – 2020) வயதில் மே 04 ஆம் திகதி ரொறன்ரோவில் காலமானார் என்ற செய்தி எங்கள் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.