நவம்பர் 19

தோழமை என்பது பால் நிறம் இனம் சாதி மதம் கடந்து சர்வதேச சகோதரத்துவமானது.

“உலகத்தில் ஒரு கோடியில் மனிதர்கள் ஒடுக்கும் முறையால் துன்புறும்போது மனம் கொந்தளித்தால் நாம் தோழர்கள்” என்பார் சே!
இன்று பாலஸ்தீன காசாவில் திட்டமிட்ட இனசங்காரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு சமுதாயத்தை வேரறுக்கும் கொடூரம். உலக மானிடம் கொந்தளித்து நிற்கிறது. ஏகாதிபத்திய அதிகார வர்க்கம் இது இயல்பானது என சர்வ சாதாரணமாக கடந்து செல்ல முயல்கிறது.

பூர்வ குடிகளை அழித்தவர்கள் பெற்றோலிய எரிபொருள் இதர வளங்களை சுரண்டுவதற்காக மக்கள் வாழ்விடத்தை இயற்கையை அழிப்பவர்கள் அந்த உலகளாவிய ஏகாதிபத்திய அதிகாரவர்க்கம் தனது எல்லையற்ற பேராசை சுரண்டல் நலன்களுக்காக காற்றையும் நிலத்தையும் நீரையும் நஞ்சாக்குகிறார்கள்.

ஜீவாராசிகள் மனிதர்களை கொல்கிறார்கள். ” மார்க்ஸின் வார்த்தைகளில் கூறுவதானால் கொன்று பலியாக்கப்பட்ட மனிதனின் மண்டையோட்டில் இருந்தன்றி வேறெதிலிருந்தும் அமுதபானம் செய்ய விரும்பாத கொடூர தெய்வம் முதலாளித்துவம்.”

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேச மக்களே ஒன்றுபடுங்கள் என்பது சர்வதேச சகோதரத்துவம் தோழமை!

வர்க்க ஏற்றத்தாழ்வை தகரச் செய்தல் சாதிய ஒடுக்குமுறையை ஒழித்தல்
பால் சமத்துவத்தை நிறுவுதல்

அதிகார வர்க்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான பிரபுத்துவ உறவு முறையை தகரச் செய்தல்

இன சமூகங்களுக்கு இடையே சமத்துவத்தின் அடிப்படையில் உறவை நிறுவுதல்

காலனித்துவ உறவு முறையை நிராகரித்தல் -சுயநிர்ணய உரிமை எல்லாவற்றுக்கும் அடிநாதமாக இருப்பது தோழமை

மத ஸ்தாபனங்கள் அரசியல் கட்சிகள் சிவில் சமூக இயக்கங்களில் நிலவும் தனிமனித வழிபாடுகளை நிராகரித்தல் இவை எல்லாமே தோழமையை அடிப்படையாகக் கொண்டவை .

தோழர் பத்மநாபா அவர்கள் பிறந்த தினத்தில் உயரிய சுதந்திர சமத்துவ லட்சியங்களுடன் மறைந்த தோழர்களை போராளிகளைமக்களை நினைவு கூருவோம்!

வர்க்கம் நிறம் சாதியம் தேசிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடும் மக்களுடன் இவற்றுக்காக உயிர் துறந்த தியாகிகளுடனும் லட்சோப லட்சம் மக்கள் பெண்கள் சிறுவர்கள் குழந்தைகளுடன் எங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வோம்!

(தோழர் மோகன்)