ஹோ சி மின்

இந்தியா – பாக்கிஸ்தான் லடாய் , பாலஸ்தீன் – ஆக்கிரமிப்பு தேச போர் , வறுமையில் தள்ளாடும் ஆபிரிக்க தேசங்கள் என்று பட்டியல் நீள்கிறது. அதே போல பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெற்ற உடனே பத்திக்கொண்ட ஒரு சம்பவம் உண்டு. அது தான் வியட்நாம் சுதந்திர போர்!
நியாயமா பார்த்தால் வியட்நாம் சுதந்திரமடைந்த போது அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்திருக்க வேண்டும்! விடுமா அமெரிக்கா! ஆடியது ஒரு ருத்ர தாண்டவம்!

நீ ஆடினா நா சும்மா இருப்பேனா என்று குருட்சேவ் கணக்கு போட்டார்! விளைவு 20 ஆண்டுகால யுத்தம்! 58,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்தனர்… 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட வியட்நாமியர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தனர்… இறுதியில், வென்றது யார்?

80 , 90 களில் வந்து பெரும்பாலான ஹாலிவுட் படங்களில் வியட்நாம் ரெபெரன்ஸ் தான் அதிகமா இருக்கும். ஏன் Kong Skull Island இன் ஆரம்ப காட்சிகள் கூட அமெரிக்கா – சோவியத் லடாய் (வியட்நாம்) பற்றிய காட்சிகள் தான் இருக்கும். அமெரிக்க வரலாற்றில் படுதோல்வியில் முடிந்த ஒரு படையெடுப்பு! ஐசனோவர் – கென்னடி – ஜான்ஸன் என்று பல அதிபர்கள் வந்தும் போரை நிறுத்த முடியவில்லை!

Lbj lbj how many kids did you kill today என்று ஜனாதிபதி ஜான்ஸனை பார்த்து அமெரிக்கர்களே பாட ஆரம்பித்துவிட்டார்கள்! வியட்நாம் பூர்வகுடிகளின் உண்மையான அபிலாஷைகளை அறியாது அமெரிக்கா ஆடிய தாண்டவத்தில் மூன்று தேசங்கள் ஆம் அமெரிக்கா – சோவியத் – வியட்நாம் கொடுத்த விளை அதிகம். கம்யூனிசம் மீதான அதீத வெறுப்பு ஒன்றே அமெரிக்காவை நிலைகுலைய செய்தது எனலாம்.

ஆனால் சுதந்திர தாகம் மிக்க வியட்நாமியர்கள் முன் அமெரிக்காவாவது புடலங்காயாவது என்றாகி போனது டாலர் தேசம். ஹோ சீ மீன் என் பெயரை கேட்டாலே அமெரிக்கா வீரர்கள் நடுங்கி போன வரலாறு அது. அவர் தான் வியட்நாமின் தேசதந்தை! போரில் அமெரிக்கா ஜெயித்திருந்தால் கிழக்காசியாவின் வட கொரியா – தென் கொரியா வாக வியட்நாம் மாறியிருக்கும். ஆனால் தீரமிக்க வியட்நாமியர்கள் முன் அமெரிக்கா மண்டியிட்டது என்பது வரலாறு.

எவ்வளவு பெரிய அதிநவீன ராணுவ பலம் இருந்தாலும், ‘சுதந்திரம்’ என்ற ஒற்றை வார்த்தையை சுவாசமாகக் கொண்ட மக்களை, எந்தப் பேரரசாலும் அடிமைப்படுத்த முடியாது என்பதற்கு வியட்நாமே சாட்சி. டாலரும், வெடிமருந்தும் உடல்களைத் துளைக்கலாம்; ஆனால் மண்ணுக்காக மார்தட்டும் மக்களின் மன உறுதியை துளைக்க முடியாது.

வரலாறு மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்தும் உண்மை என்னவென்றால் ஏகாதிபத்தியத்தின் ஆணவத்தை அடக்க, ஹோ சி மீன் போன்ற ஒரு எளிய தலைவனும், ‘தாய்மண் காப்போம்’ என்ற உறுதியும் போதும். அன்று வியட்நாமில் வீழ்ந்த வல்லாதிக்கத்தின் கொட்டம், ஆஃப்கான் வெனிஸுவெல , இரான் வரை தொடர்கிறது. அடக்குமுறை இருக்கும் வரை, அதை எதிர்க்கும் குரல்களும் ஒலித்துக்கொண்டே இருக்கும்!
வல்லரசுகள் வீழ்வதும், சாமானியர்கள் வாழ்வதும் காலத்தின் கட்டாயம்!
(2025 ஏப்ரல் மாதம் மற்றும் இந்தாண்டு ஜனவரி மாதம் எழுதிய பதிவு)

  • Abdullah Ibnu Naseer