இணையவழி கடன் : பல உயிர்களைப் பலி

அத்தனக்கல்ல  பிரதேச செயலகப் பிரிவின் வெலகெதர எனும் கிராமத்தில் ஹிமாயா செவ்வெந்தி என்ற இளம் பெண் இணையவழி கடன் மாபியாவில் சிக்கி, தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என அறியக்கிடைப்பதனால், இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வியாழக்கிழமை (13) அன்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.