சூர்யாவுக்கு எதிராக தீர்மானம்!

பாஜக மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம், அக்கட்சியின் சென்னை தியாகராயநகரில் உள்ள தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நடைபெற்றது.

பாஜக மாநில இளைஞரணிச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் ‘ஜெய்ஹிந்த்’ எனும் வார்த்தையை இழிவுபடுத்திய திருச்செங்கோடு பேரவை உறுப்பினர் ஈஸ்வரனுக்கு கண்டனம் நிறைவேற்றப்பட்டது .

மேலும், ஒன்றிய அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டம், சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பத்துக்காகத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார் நடிகர் சூர்யா. அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் பாஜக இளைஞரணி சார்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.