தங்காலை பொலிஸில் விமல் ஆஜர்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். பொலிஸாரால் விடுக்கப்பட்ட முறையான அழைப்பாணையைத் தொடர்ந்து தேசிய சுதந்திர முன்னணி (NFF) தலைவர் ஆஜராகினார். அவர் தற்போது தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.