நீர் மேலாண்மை குறித்து கலந்துரையாடல்

எதிர்கால முன்னறிவிப்புகளின்படி இந்த ஆண்டு கிடைக்கக்கூடிய மழைவீழ்ச்சி குறித்தும், தற்போது நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு குறித்தும் இதன்போது புள்ளிவிபரங்களின் அடிப்படையில் விரிவாக ஆராயப்பட்டது.

விசேடமாக, மின்சார விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக நீர்மின் உற்பத்தி, குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் யல பருவச் சாகுபடிக்கு தேவையான நீரை விடுவித்தல் ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அவசியமான நீர் மேலாண்மை குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த, குறித்த அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, மகாவலி பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஜே.கே. ஹேரத், நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம் கித்சிறி வெலிகெபொலகே, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.