புலிகளின் தலைவர் பிரபாகரனை காட்டி கொடுத்தார் நளினி!

இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்ற நளினி முருகனால் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் காட்டி கொடுக்கப்பட்டு உள்ளார் என்று பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய பிரபாகரன்தான் உத்தரவிட்டு இருந்தார் என்று பிரியங்காவுக்கு நளினி முருகன் தெரிவித்து இருக்கின்றார்.

ராஜிவ் காந்தியின் மகள் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி வேலூர் சிறைக்கு சென்று நளினியை சந்தித்து பேசினார். இது முற்றிலும் தனிப்பட்ட சந்திப்பு என்று பிரியங்கா ஊடகவியலாளர்களுக்கு கூறினார். இதே போல செய்த பாவங்களை இச்சந்திப்பின் மூலம் கழுவி விட்டார் என்று நளினியும் கருத்து வெளியிட்டார்.

செய்த பாவங்களை கழுவி விட்டார் என்கிற நளினியின் வார்த்தை இலேசுப்பட்டது அல்ல. பிரபாகரனின் உத்தரவின் பேரிலேயே படுகொலை இடம்பெற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை ராஜிவ் காந்தியின் குடும்பத்துக்கு இருந்தது. இப்படுகொலை குறித்து ஏனையோரை காட்டிலும் மிக நன்றாக தெரிந்தவர் நளினி மாத்திரமே.

ஏனென்றால் இப்படுகொலைக்கான சதியில் குறைந்தது 20 நாட்கள் நளினி சம்பந்தப்பட்டு இருக்கின்றார். சிவராசன், சுபா, தனு ஆகியோர் இவரின் வீட்டில் இரு வாரங்களுக்கு மேல் தங்கி இருந்து படுகொலைக்கான ஆயத்தங்களை செய்திருக்கின்றனர். சம்பவ தினம் ஸ்ரீபெரும்பூரில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்துக்கு பஸ்ஸில் இவர்களுடன் நளினியும் சென்று இருக்கின்றார்.

இவைதான் நளினியை சந்திக்க பிரியங்காவை தூண்டி இருக்கின்றன. நளினியுடன் பிரியங்கா மேற்கொண்ட சந்திப்பை அடுத்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் விடுதலை புலிகளுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் போர் நடவடிக்கைக்கு பூரண ஆதர வழங்கியது அவதானத்துக்கு உரியது.

சுமார் 03 தசாப்தங்களாக விடுதலை புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க முடியாமல் தடுமாறிய இலங்கை இராணுவம் பிரியங்காவுக்கும் நளினிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்று 14 மாதங்களுக்கு இடையில் பிரபாகரனை அழித்து புலிகள் இயக்கத்தை வேரறுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.