அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து ஹரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த பேருந்தின் சாரதியும் அவருடன் பயணித்த மற்றொரு நபரும் அம்பாறை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேகநபர்கள் கைதானதுடன் பேருந்தும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான இரண்டு சந்தேகநபர்களும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.