மகாவலி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம்

மகாவலி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்றிரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் மகாவலி ஆற்றின் ஓரத்தில் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது. கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அபாயம் எதிர்பார்க்கப்படுகிறது.