மரங்களை நடும் போது கவனிக்க வேண்டிய முக்கிய இடைவெளிகள்

வேப்பமரம் — 15′ × 15′

பனைமரம் — 10′ × 10′

தேக்கு மரம் — 10′ × 10′

மலைவேம்பு — 10′ × 10′

சந்தனம் — 15′ × 15′

வாழை — 8′ × 8′

தென்னை — 24′ × 24′

பப்பாளி — 7′ × 7′

மாமரம் (உயர் ரகம்) — 30′ × 30′

மாமரம் (சிறிய ரகம்) — 15′ × 15′

பலா — 22′ × 22′

கொய்யா — 14′ × 14′

மாதுளை — 9′ × 9′

சப்போட்டா — 24′ × 24′

முந்திரி — 14′ × 14′

முருங்கை — 12′ × 12′

நாவல் — 30′ × 30′

பண்டைய காலம் முதல் நமது முன்னோர்கள் இவ்வகை இடைவெளிகளைப் பின்பற்றி வந்துள்ளனர்.அவர்கள் கூறியது —“தென்னைக்கு தேரோட…வாழைக்கு வண்டியோட…கரும்புக்கு ஏரோட…நெல்லுக்கு நண்டோட…”என்று மிகவும் அழகாக விளக்கியுள்ளனர்

200 வகையான காய்கறி, கீரைகள், பழங்கள், மாடித்தோட்டம், உரங்கள் பற்றிய தகவல்களை ஒரே இடத்தில் அறிய

www.agriculturetrip.com/all#இடைவெளி_அமைப்பதின்_பயன்கள்

மரங்களுக்கு போதுமான வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் கிடைக்கும்

இலைகள் மற்றும் கிளைகள் நன்கு பரவி வளர்க்கும்

காய்கள் பெரிதாகவும் திரட்சியாகவும் உருவாகும்

மரம் விரைவாக பழம் காய்க்கும்

இடைவெளி குறைந்தால் — மரங்கள் நீளமாக வளர்ந்தாலும், காய்கள் சிறிதாகவும் திரட்சி இல்லாமலும் இருக்கும்.இது நம் முன்னோர்களின் அனுபவ அறிவு

நாமும் அதை பின்பற்றிப் பயனடைவோம்