முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம்

தமிழகம் சென்றுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.