ராவனபலய, சிஹல ராவய தேரர்களுக்கு விளக்கமறியலில்!

ராவனா பலய அமைப்பின் அழைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் சிஹல ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர் ஆகியோர் ஹோமாகம காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு, ஹோமாகம நீதிமன்றில் போராட்டம் நடத்தியதாக இந்த இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ராவனா பலய இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், சிஹல ராவய அக்மீமன தயாரட்ன தேரர் ஆகியோரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இவர்களுடன் மேலும் இரண்டு பௌத்த பிக்குகளையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹோமாகம நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.