2.5 மில்லியன் டொலர் சூறையாடல்: FBI தீவிர விசாரணை

இலங்கைத் திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பிற்குள் (Email System) சட்டவிரோதமாக ஊடுருவி, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) உதவியைப் பெறப் புலனாய்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்தகவலைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.