CPC முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 800 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால், திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்டார்.