அம்மா…!

அண்ணி மீது கொண்ட பேரன்பால் வதனி என்று பெயரை சூட்டி கொண்டேன் இதுநாள்வரை நேரில் கண்டதில்லை அண்ணய..!

பல_சமராடி ஒரு பொறுப்பான பதவியோடுதான் உன் மகளும் களத்தில் இருந்தாள்…. அம்மா.!

அந்த_நாளுக்காகத்தான் காலன் காத்திருந்தானோ தெரியவில்லை.

இவ்வாறு ஒரு பிரிவு எங்களுக்குள் வரும் என்று நிஜத்தில் கூட கனவு வரவில்லை..
தத்தளித்து தடுமாறுகிறோம்..!
எங்கு செல்வது என்பது புரியவில்லை எவருக்கும்..!

முதல்_முறை பதட்டம் அடைகிறோம்…

எல்லா பெண் போராளிகளும் (புலிகள் பெண் போராளிகள் ஆகிறோம்) . பிரதேச வாதத்தின்பால் பிரிபட்டு
கடைசியாக வாகரை வந்தடைகிறோம்.,
ஒரு வாறாக பெரு மூச்சோடு வீடகளுக்கு சென்று விடலாம் என்ற நம்பிக்கை சிறிது சிறிதாக வருகிறது..’
பிரிந்தாகிவிட்டது இனி ஒன்றாக வாய்ப்பில்லை என்ற பரவலான கருத்துக்கள் அம்மானை தலைமையாக ஏற்ற பிள்ளையான் குழுக்களிடம் இருந்து காற்றோடு கசிகின்றது..

எதிர்பார்க்கவில்லை …!

நேற்று வரை அண்ணா என்றழைத்வர்களோடு கிழக்கு போராளிகளின் எதிர்பாராத யுத்தம்.!
அதை சண்டை என்று சொல்லி சிறுமைப்படுத்த விருப்பம் இல்லை (நேற்றுவரை புலிகள் இன்று கிழக்குப்போராளிகள்) நான் உட்பட எல்லா பெண் போராளிகளுமே அப்போது நிராயுத பாணிகள்தான் நாங்கள் வீடுகளுக்கு பயணமாக ஆயத்தமாக உள்ளோம் …

உங்களை தனித்தனியாக வீடுகளுக்கு அனுப்ப சொல்லி உத்தரவு …

அதுவரை அவர்களை பார்த்ததில்லை..
ஒரு அண்ண வந்து சொல்கிறார் நானும் அழைத்துச் செல்லப்படுகிறேன் ……… அண்ணன்கள் என்ற நம்பிக்கையில்தான் ….
பல மணி நேரங்களின் பின் உணர்வின்றி உடல் மட்டும் அசைகின்றது இடுப்புக்கு கீழே ஏதோ பாரமாக அசைக்க முடியாத வலியோடு …
மார்பகங்களில் பல இடங்களில் கீறல்களால் கசியும் இரத்தம் ..
வாய் விட்டு அழக்கூட சக்தி இல்லை நேற்று வரை அவர்களை அண்ணா எண்றுதான் அழைத்தோம் …இன்றும் இவைகளை உன்னிடம் செல்ல தைரியம் இல்லை அம்மா.!

பல_வருட மனப்போராட்டங்களின் பின் முடியாமல் முடித்துக்கொள்கிறேன் நீ என்னை தலாட்டி தூங்க வைத்த உன் சேலையில்…

என்னை எழுப்ப முயலாதே அம்மா உன் சத்தம் நான் சென்ற தூரம் வரை கேட்காது அம்மா….!அதன் பின் என் சகோதரனை கூட அழைத்ததில்லை அண்ணா என்று.! ஒரு முறை அழைக்கிறேன் அம்மா இறுதியாய் அண்ணா…

ஒரு பெண் போராளியின் சுருக்கப்பட்ட இறுதி கடிதம். #என்_மொழியில்.

2004.

ஈழம்_சுகன்.