ஒரே சிந்தனையில் இணைந்து பயணமாதல்

தோழமை தினம் என்பதாக பலரையும் இணைக்கும் பத்மநாபா ஈபிஆர்எலஎவ என்றாக தற்போதைய தமிழர் சமூக ஜனநாகக் கட்சி செயற்பட்ட காலத்தில் இது முன்னெடுக்கப்பட்டது.

இது தோராயமாக பத்து வருடங்களுக்கு முன்பாக. (இதே பெயரில் அண்மையிலும் ஒரு முன்னெடுப்பு நடைபெற்றது… வேறு சிலரால் அதனை நான் இங்கு குறிப்பிடவில்லை)

இதில் கணிசமான முன்னேற்றங்களையும் அந்த அமைப்பு கண்டது. அது கொழும்பை மையமாக கொண்ட செயற்படும் தமிழ் கட்சிகள் கிழக்கின் தமிழ் கட்சிகள் வடக்கு கிழக்கு என்றாக செயற்படும் பல கட்சிகளையும் உள்ளடக்கியதாக நகர்ந்து சென்றது.

இவ் அமைப்பின் சந்திப்புகள் ஒவ்வொரு இடமாக வடக்கு கிழக்கு எனறாக நகர்ந்து பலரையும் இணைக்கும் செயற்பாட்டில் இறங்கியும் இருந்து. இதன் உத்தியோகப் பற்றற்ற பேச்சாளராக சிவாஜிலிங்கம் செயற்பட்டார்(அப்போதுதான் தமிழ் ஊடகங்கள் அவரின் செய்தியாக இதனைப் பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் என்ற தந்திரோபாய அடிப்படையில் இது அனுமதிகப்பட்தாகவும் அறிய முடிந்தது. இதில் வெற்றியும் கண்டனர்)

இதில் டக்களஸ் தேவானந்தாவின் கட்சியும் இணைந்து சந்திப்புக்கள் நடைபெற்றன.

அப்போது தமிழரசுக் கட்சியுடன் கூடிய புளட் ரெலோ ஈபிஆர்எல்எவ் அமைப்புகள் ஒன்றாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருந்த கால கட்டம் சுமந்திரனின் அரசியல் வருகை அல்லது ஆளமை இல்லாத கால கட்டம் அது.

ஆனால் தமிழ் மக்கள் அரகத்தின் அழைப்பை ஏற்று கூட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகம் ஆர்வம் காட்டாத ஏக போகமாக தன்னை காட்டிக் கொண்டது நம்பியது.

அன்று பேச்சுவார்தைகளில் இணைந்து ஒரு பலமான ஐக்கியச் செயற்பாடுகளை அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வம் காட்டவில்லை என்பதற்கு அப்பால் அப்போதைய தமிழ் தேசியக் கூட்மைப்பின் பேச்சாளர் தமக்கு தமிழ் மக்கள் அரங்கம் என்ற அமைப்பு பற்றி ஏதும் தெரியாது என்பது போன்ற கருத்துகளையும் தெரிவித்து வந்தார். (இதற்கான ஆதாரங்கள் எல்லாம் பொதுவெளியில் உள்ளன.

ஆனால் கால ஓட்டம் தமிழ் மக்கள் அரங்கத்தில் பலரும் இணைந்து பலமாக முன்னேற முற்படுகையில் ஈழ விடுதலைப் போராட்ட 1980 களின் நடுப்பகுதிக் காலத்தில் கடைசியாக ஈஎன்எல்எவ் இல் புலிகள் அவசரமாக வந்த கலந்து கொண்டு இணைந்து அதனை இல்லாது செய்தது போல் தமிழ் தேசிய கூட்மைப்பு ஒரு நாள் இந்த தமிழ் மக்கள் அரங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு இதன் பின்பு அது தொடர்ந்தும் செயற்படாத சூழ் நிலையாக அது முடிவுற்றது வரலாறு

தமிழ் மக்கள் அரங்கத்தை மீண்டும் செயற்பட வைக்க வேண்டும் என்ற விடயத்தில் என்னைப் போன்றவர்களுக்கு இருந்த ஆர்வம் அது சாத்தியப்படப் போவது இல்லை என்றான விளக்கமும் பதிலும்தான் கிடைத்தன. பெரும் ஏமாற்றமாக கடந்த அரசில் வரலாறு எம்முடையது.

உண்மையில் அன்று தமிழ் மக்கள் அரங்கம் தனது இணைவிற்கான முயற்சிகளை தடைப்படாமல் முன் நகரத்தி இருந்தால் இன்றைய நிலையில மீண்டும் புதிய முயற்சியாக ஏற்பட்டுவரும் தற்போதைய இந்த புதிய முயற்சி பலமான நிலையை இன்று அடைந்திருக்கும்

இதற்குப் பின்னரான அரசியல் சூத்திரங்கள் அணி மாற்றங்கள் தேர்தல் தோல்விகள் வெற்றிகள் என்றாக பலதையும் சந்தித்த பின்னர் எவ்வாறு ஒரு காலத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உருவானதோ அதே மன நிலையில் தமிழ் கட்சிகள் இன்று வந்து…? இந்த புதிய முயற்சியில் ஒரிடத்தில் சந்திப்பது மாற்றங்களை ஏற்படுத்துமா…? என்பதற்கான வரலாற்று தகவல்களை சொல்வதற்காகவே இந்த பதிவை இங்கு செய்கின்றேன்

13 வது திருததச் சட்டத்தின் அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கத்தை மாகாணசபைகளின் தேரதல்களை நடாத்த இயங்க வைத்தல் என்பதாக தோழர் வரதராஜப்பெருமாள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே தாயகத்தில் உள்ள கட்சி சாரா பல சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்களை சந்தித்து பேசி இருந்தார்.

அப்போது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாகாத… உருவாகக் கூடிய வாய்புக்கள் என்று ஒன்றும் இல்லாத காலத்தில் இவை நடைபெற்றன.

இதற்கான முன்னெடுப்புகளில் என்னளவில் தாயகத்தில் பலரையும் சந்தித்து உரையாடியும் இருந்தேன்

ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் சூழ் நிலையில் இதனை வேகப்படுத்தும்…. சேயற்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான பொதுக் கருத்தை உருவாக்கும் அவரின் முயற்சியும் இதற்கான சந்திப்புக்களும் வரவேற்கப்பட கூடியவை… தேவையானதும் கூட

ஆனால் வலாற்றில் நாம் தவறவிட்ட சந்தர்பங்களை இங்கு குறிப்பிட்டுக் காட்டுவது யாரையும் குறை கூறுவதற்காக அல்ல விட்ட வாய்புகளை இனியும் தவற விடாமல் முன்னோக்கி நகர்வதற்காகவே.

இறுதியாக…. பத்மநாபா ஈபிஆர்எல்எவ். இதன் பின்னரான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என்றவாறு பத்மநாபாவின் சிந்தனையில் பயணிக்கும் இந்த தமிழர் அமைப்பை இதுவரை பொதுவெளில் பிரதான நீரொட்டத்தில் செயற்படும் என்ற தமிழ்க் கட்சியும் கூட்டமைப்புக்களும் தேர்தல் சம்மந்தமாகவோ வேறு அரசியல் செயற்பாடுகள் சம்மந்தமாகவே இணைந்து உரையாடுவதற்கு அழைப்பதாக வரலாற்றில் குறிப்புக்களும் இல்லை என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டிய தேவை இருக்கின்றது. அந்த அளவிற்கான ‘வெறுப்பு’ அரசியலைத்தான் யாபேரும் கொண்டிருக்கின்றனர் என்ற கசப்பான உண்மைகளையும் நாம் பேசித்தான் ஆக வேண்டும்)

(இத்துடன் 2017 இல்ல என்னால் எழுதப்பட்ட ஒரு கட்டுரையையும் இணைக்கின்றேன் இது சூத்திரம் இணையத் தளத்தில் வெளி வந்த கட்டுரையாகும்)

பெப்ரவரி 27, 2017 இல் இது பிரிசுரமானது:

முன்னாள் போராளிகள் ஐக்கியப்பட்டு தமிழ் மக்களுக்கான தலமையை தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாக கொடுப்பார்களா….?

(சாகரன்)

டிரிஎன்ஏ(DTNA), தமிழ் மக்கள் அரங்கம் போன்ற முயற்சிகள் நடைபெற்றதையும் இங்கு கவனத்தில் எடுக்கவேண்டும். இவை பலமான ஐக்கிய முன்னணிகளாக முன்னேறாதற்குரிய காரணங்களையும் இங்கு நாம் இதயசுத்தியுடன் ஆராயவேண்டும் இவை பெரும்பாலும் முன்னாள் விடுதலை அமைப்புக்களின் ஆளுமைக்குள் வளர்ந்து வரக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தன. அண்மையில் நடைபெற்ற தோழமை தின நிகழ்வுகளும் இதற்கான சில சுழிகளே. ஏன் 2009 மே இற்கு பின்னரான காலகட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலை அமைப்புக்களின் ஆளுமைக்குள் வருவதற்கான வாய்புக்கள் நிறையவே இருந்தது

வெற்றிகள்… கதிரைகள்… பேச்சாளர் கௌரவம்… தங்களிடம் இருந்தபோது அல்லது வருங்காலத்தில் இருக்கவேண்டும் என்ற காய் நகர்த்தல்களிலேயே இதில் உள்ள விடுதலை அமைப்புக்களின் கட்சிகள் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ், என்பன இயங்கின. மாறாக முன்னாள் விடுதலை அமைப்புக்கள் தமக்குள் ஒரு பலமான ஐக்கிய முன்னணியை அமைக்க முயலவில்லை…… வெற்றி பெறவில்லை….. இன்னமும் தமிழ் மக்கள் பேரவை என்று புறப்பட்டாலும் இரு தோணிக்குள் கால் என்ற வகையிலேயே செயற்படுகின்றன. தமிழரசுக் கட்சியைவிட்டால் தமக்கு ஆசனம் இல்லை என்றே நம்புகின்றன.

இத்தனைக்கும் இந்த முன்னாள் விடுதலை அமைப்புக்களின் கட்சிகள் தமிழர் விடுதலைக் கூட்டணி என்றிருந்து ஆலவிருட்சத்தை விமர்சித்து(1978 களில்) மக்களிடம் அம்பலம்படுத்தி தமது அரசியல் பாதையில் பயணித்தவர்கள். தற்போது ‘வீடு’ இற்குள் படுத்துக்கிடக்கின்றனர். குறைந்த பட்சம் 2009 இற்கு பின்ரான இந்த 8 வருடத்தில் தமது விடுதலை அமைப்பில் முன்னின்று செயற்பட்டவர்களையாவது தமது வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கலாம். மாறாக சிறீதரன், ஐங்கரநேசன், சிவமோகன் போன்றவர்களுக்கு பதிலாக ‘தேசிகன்’ போன்றவர்களை முன் நிறுத்தியருக்கலாம்.

தேசிகன் எல்லாவிதத்திலும் தகுதியானவர் என்பது என்கணிப்பு சர்வேஸ்வரனை கடைசித் தெரிவாக வைத்திருக்கவேண்டும் அல்லது முழுமையாக தவிர்க்கவேண்டும் இதற்கான வலுவான காரணங்கள் என்னிடம் உள்ளன. குமரேசை முன்னிறுத்துவதற்கு பதிலாக இன்னும் முகம் அறியாத பல முன்னாள் போராளிகளை நிறுத்தியிருக்கலாம். சிவசக்தி ஆனந்தன் இன்று வன்னியின் பண்ணையாராக மாறி இருந்தாலும் இவரின் தெரிவு இரா துரைரத்தினத்தின் தெரிவில் எனக்கு ஆட்சேபனை இல்லை.

புளொட்டைப் பொறுத்தவரையில் அமல் விளாந்திரனைத் தவிர்த்து மட்டக்களப்பில் முன்னாள் போராளியை முன்னிறுத்தியிருக்க வேண்டும். திருப்தியான தெரிவு பவான், லிங்கநாதன் போன்றவர்கள். சித்தார்த்தன் தந்தைவழி அரசியலை தொடர விரும்புபவர். இவரிடம் இருக்கும் நம்பிக்கையைவிட பவான் லிங்கநாதன் போன்றவர்களின் செயற்பாடுகள் நம்பிக்கை தருபவை. சித்தார்த்தன் ‘வீடு’ இற்குள் படுத்திருக்கவே விரும்புவார்.

டெலோவிடம் அதிக அரசிலை எதிர்பார்கவேண்டுமாயின் அடைக்கலநாதன் வழிவிட்டு நல்லவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கவேண்டும். இது இலகுவில்சாத்தியம் இல்லை. ஆனந்திக்கு வாய்பளிக்க முற்பட்ட சுரேஷ் இவரைவிட சிறந்த ஆயிரம் பேரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க கருத்தில் எடுத்திருக்கவேண்டும். டக்ளஸ் கமலேந்திரன் போன்றவர்களைவிட சீவரத்தினம் வேலும்மயிலும், இராஜ்குமார் சிவகுமார் போன்றவர்களை வெல்வதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.

ஆயிரம் விமர்சனம் இருந்தாலும்…. சுயநலன்கள் இருந்தாலும்…. டக்கள் ஞானசக்தி சிறீதரன் இற்கு தேர்தலில் வாய்பளித்தது வரவேற்றகத்தக்கது. திருமதி பற்றகுணத்தின் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தவிருப்ப வெறுப்பும் இல்லை ஆனால் டக்ளஸ் தனது இயக்கத்தில் இருந்த போராளி ஒருவருக்கு (தவராசா போன்ற தகுதியுள்ளவருக்கு) மாநகரசபை வாய்ப்பை வழங்கியிருக்கு வேண்டும்.

இவற்றையெல்லாம் நான் மீள்வாசிப்பிற்கு உள்ளாக்குவதற்கு காரணம் இது நடைபெற்றிருந்தால் இன்று தமிழரசுக்கட்சியின் வீட்டிற்குள் வாலைச்சுருட்டிக்கொண்டு படுத்திருக்கவேண்டியநிலமை முன்னாள் போராளிகளுக்கு ஏற்பட்டிருக்காது.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக கொண்டு வந்த போது எனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாய் இல்லை எங்களில் ஒருவனுக்கு கிடைக்க கூடாது என்ற ஈகோ… இதனால் எற்பட்ட விளைவுகளுக்கு மன்னிப்பே இல்லை. இன்று இவரின் வாலைப் பிடித்துக்கொண்டு தொங்குவதற்கும் ஒருகாலத்தில் பிரேமதாசாவின் வலைப் பிடித்துக்கொண்டு தொங்கியவர்களின் செயற்பாடுகளுக்கும் இடையில் அதிகம் வித்தியாசம் இல்லை(இதனை சற்று ஆழமாக பார்க்கவும்)… இன்னும் எழுதுவேன்.

(மே 18 2009 இற்கு பின்னரான நிலமைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது விடுதலை அமைப்புகள் இடையே போராட்டகாலத்தில் ஏற்பட்ட ஐக்கிய முன்னணி பற்றி இங்கு நான் எழுத முற்படவில்லை)

(முன்னாள் விடுதலை இயக்க கட்சிகள் எல்லாம் தமிழரசுக்கட்சியை ஓரங்கட்ட ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்……… – யோகா வளவன் தியா என்ற முகப் புத்தக பதிவிற்கு பதிலளிக்கு முகமாக எழுதப்பட்டது)