ஜனசக்தி தோழர் ராஜ்மோகன் அவர்களுக்கு அஞ்சலி

உலகின் எந்வொரு தேசிய விடுதலைப் போராட்டத்தை எடுத்துக் கொண்டாலும் இதுவே நடைபெற்றிருக்கின்றது. அந்த தேசத்தின் தேசிய முதலாளிகளும், இடதுசாரிகளும் ஒரு வண்டிலில் பூட்டிய இரு எருதுகள் போலவே விடுதலை என்னும் வண்டிலை இழுத்துச் சென்றனர். ஆனால் எங்கு போராட்டத்தின் தலமைத்துவத்தை தொடர்ந்தும் உழைக்கும் மக்களின் தலமையில் வைத்திருத்த நாடுகள் இன்று உலகில் பேசப்படும் முன்னோக்கிய நகரவான ஒரு சமுதாயத்தை தமது தேசத்தில் கட்டியமைத்திருக்கின்றன என்பதே வரலாறு.

ஆனால் இந்திய தேசத்தின் விடுதலைப் போராட்டத்தினால் கிடைத்த வெற்றியும் அதனைத் தொடர்ந்து கிடைத்த சுதந்திரமும், பாராளுமன்ற அரசியலும் இடதுசாரிகளுக்கு தேர்தல் களத்தில் தமது அறுதிப் பெருபான்மையை பேணி காத்துக் கொள்ளும் நிலமையை ஏற்படுத்தவில்லை. ஆனால் சுதந்திரம் பெற்ற காலத்திலும் இதற்கு முன்பும் பலமாக ஒரணியில் இடதுசாரிகளாக நின்று சாதித்து காட்டினார்கள். அதனால் மத்தியிலும், மாநிலங்கள் அவையிலும் கணிசமான பிரதிநிதித்துவத்தையும், மாநிலங்கள் பலவற்றில் தனியாகவும், கூட்டாகவும் ஆட்சியில் அமர்ந்து நல்லாட்சியை உறுதி செய்து தம்மால் ஆனா பங்களிப்பைச் மக்களுக்குச் செய்தனர்… செய்கின்றனர்.

ஆனால் இந்திய சுதந்திரத்திற்குப் பின்னரான இடதுசாரி கட்சியிடையே ஏற்பட்ட ‘தத்துவார்த்த” பிளவு அது சி.பி.ஐ, சி.பி.எம் என்றான பின்பு இந்திய தேசத்தில் தேர்தல் களத்தில் அவர்களின் பிரதநிதித்துவம் என்ற வகையில் பலவீனமாகிக் கொண்டு போனார்கள். அது இன்றுவரை தொடர்கின்றது.ஆனால் தத்துவார்த்த ரீதியில், கட்சி அமைப்பு, சித்தாந்தம் என்ற வகையில் தொடர்ந்தும் பலமாகவே இருந்தனர்… இருக்கின்றனர்…. இன்றுவரை.

அந்த ஒரு பிரிவின் முக்கிய தலைவர் ஒருவராக விளங்கியவர்தான் தோழர் ராஜமோகன் ஆகும். சி.பி.ஐ இன் வார இதழான ஜனசக்தி இன் ஆசிரியராக நீண்ட காலம் செயற்பட்ட எழுத்தாளர் தோழர் ராஜ மோகனை நாம் தற்போது கொரனாத் தாக்கத்தினால் இழந்து நிற்கின்றோம்.சி.பி.எம் இன் தீக்கதிர் உம், சி.பி.ஐ இன் ஜனசக்தி உம் இன்று வரை இந்திய மக்கள் மத்தியில் முற்போக்கு கருத்துகளை விதைப்பதில் மிக கணிசமான பங்களிப்பை செய்து வருகின்றன.

இதில் ராஜ்மோகனின் தசாப்தங்களாக கழிந்த காலங்களில் தொடர்சியான பங்களிபை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

இந்திய சுதந்திர போராட்டத்தின் பின்பு இந்தியாவில் ஆட்சியதிகாரத்திற்கு வந்த தேசிய முதலாளிகளின் அரசின் தேடுதலுக்கு தலைமறைவாகி தோழர் ஜீவானந்தம் இலங்கையிற்கு தலைமறைவாகி வந்ததும் இங்கும் அவரை இலங்கையின் இடதுசாரிகளே பாதுகாத்து வைத்திருந்தனர் என்பதுவும் வரலாற்றுப் பதிவுகள்.

அதே அனுபவங்கள் ஈழத்து விடுதலைப் போராளிகளின் தலைவரகளுக்கு ஏற்பட்ட வேளையில் கைகொடுப்பதில் முன் நின்று செயற்பட்டவர் தோழர் ராஜமோகன்.ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில்….. 1980 களுக்கு முன்பு சிறப்பாக 1983 ஜுலை கலவரத்திற்கு முன்பு அதிகம் அறியப்படாத செய்தியாக ஈழவிடுதலை இயக்கங்களில் இடதுசாரிக் கருத்தியலை தமக்குள் கொண்டிருந்த இயக்கங்களின் ஆதரவு, பாதுகாப்பு, அனுசரணைத் தளமாக இருந்தவர்கள் இந்த பொதுவுடமைவாதிகள், இடதுசாரிகள் இதில் சி.பி.ஐ, சி.பி.எம் என வேறுபாடுகள் இன்றி அவர்கள் செயற்பட்டனர்.

இதனில் தோழர் ராஜமோகனின் பங்களிப்பு மகத்தானது.வளங்கள் ஏதும் அற்ற நிலையில் இருந்த விடுதலை அமைப்புகளுக்கான தார்மீக ஆதரவுகளையும், தத்துவார்த்து வகுப்புகள், புத்தகங்கள் வெளியீடுகள் போன்றவற்றை வழங்குதல், புதிய தொடர்புகளை எற்படுத்ததல் என்று பல தளங்களிலும் உதவிகளை வழங்கியவர்களில் ஒருவராக ராஜமோகன் அவர் கட்சியின் சார்பிலும் தனி மனித செயற்பாட்டிலும் இருந்தார் என்பது அவரை இழந்து நிற்கும் தற்போதைய சூழலில் எமக்கு ஞாபகத்திற்கு வந்து போகின்றன.

1970 களின் பிற்கூற்றில் ஆரம்பித்து 1987 இல் ஏற்பட்ட இலங்கை இந்திய சாமாதான ஒப்பந்தம்… இணைந்த மாகாணசபை என்று பயணித்து இதன் பின்னரான மகாணசபையை கலைத்து யுத்தம் என்ற புறப்பட்டு பயணப்பட்டு 2009 மே மாதம் வரையிலான கால கட்டம் அதன் பின்னரான யுத்தம் அற்ற காலகட்டமாகிய தற்போதைய பயணம் என்று எப்போது இந்த இதடதுசாரிகளே தெளிவான நிலையான நிலைப்பாட்டை ஈழவிடுதலை பற்றியும் அந்த மக்கள் பற்றியும் அவர்களுக்கான சக, சமவாழ்வை இலங்கையிற்குள் உறுதிப்படுத்தல் என்பதற்குள் நின்று செயற்பட்டனர் இதில் ராஜமோகனின் நீக்கமற்ற அர்பணிப்புடனான பங்களிப்பை நாம் இங்கு பேசித்தான் ஆக வேண்டும்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கமும், இந்த இடதுசாரிகளும் மிக நீண்ட காலமாக விளம்பரப்படுத்தாது தமது தார்மீக அர்த்தமுள்ள ஆதரவை வழங்கியே வந்திருக்கின்றனர் ஈழ மக்களுக்கு. தேர்தல் களத்தில் முன்னிற்ற கட்சிகள் தமது தேர்தல் வெற்றிகாக ஈழத் தமிழர் பிரச்சனையை தூக்கி பிடிக்கும் தந்திரத்திற்குள் இவர்கள் எப்போதும் வீழ்ந்தவர்கள் அல்லர்.அது தோழர்கள் கல்யாணசுந்தரமாக இருக்கட்டும், நல்லகண்ணுவாக இருக்கட்டும் த. பாண்டியனாக இருக்கட்டும் தற்போது எம்மை விட்டுப் பிரிந்த ராஜமோகனா இருக்கட்டும் நமது போராட்டத்திற்கு மகத்தான பங்களிப்பை தமது தேசத்தின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களாக ஈழத் தமிழரை எண்ணி குரல் கொடுத்தவர்கள் போராடியவர்கள்.

ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் ராஜமோகனின் அரசியலையும் நாம் இணைத்துப் பார்த்து அவருக்கு நாம் அஞ்சலி செலுத்தி நிற்போம். இந்தியத் தமிழர்களின் ‘போராளி’ என்ற அடையாளத்தை எடுத்துக் காட்டும் முறுக்கிய மீசையை தனது அடையாளமாக கொண்ட மிடுக்கானவர் தோழர் ராஜமோகன்.

தோழர் வி. ராஜ்மோகன் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர். இளமைக் காலம் முதல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தவர். ரயில்வே, துறைமுகம், பாதுகாப்புத்துறை தொழிற்சங்கங்களில் செயல்பட்டவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர், மாநில நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர். அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் தமிழ்நாடு செயலாளராக பணியாற்றி வந்தார்.

எனது தோழன் ஒருவர் கூறுவதைப போல் ‘… எமது காலத்தில் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி ஜீவாவாக இருந்த தோழர் ராஜ்மோகன் அவர்கள் இறந்து விட்டார் எனும் செய்தி இதயத்தில் அடிக்கு மேல் அடி விழுவதாக உள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் பல்லாயிரம் சாதாரண மனிதர்களுக்கு சமமானவர்கள். ராஜ்மோகன் தோழரோடு நெருங்கிப் பழகிய நாட்கள் நினைவில் ஊஞ்சலாடுகின்றன. தான் கொண்ட கருத்துக்கள் மீது தெளிவும் தளரா உறுதியும் கொண்டவர். பழகுவதில் மிகப் பண்பாளர், எளிமையானவர், இனிமையானவர். 1980களில் எமது போராட்டத்துக்கான ஆதரவுத் தளங்களை தமிழகத்தில் பொதுவுடைமைத் தோழர்கள் மத்தியில் விரிவு படுத்துவதில் தோழர் ராஜ்மோகன் அவர்களின் பங்கு மறக்க முடியாதவை…..’

இவ் வரிகளின் அர்தங்களை நேரில் அனுபவித்தவர்களில் நானும் ஓருவன் என்ற வகையில் அவருக்கு செவ்வணக்கம் செலுத்தி நிற்போம்.