தோழர் நாபா படுகொலை செய்யப்பட்ட தினத்தை 1993 இல் சென்னை
புழலில் நடைபெற்ற கட்சியின் இரண்டாவது மகாநாட்டில் –
தியாகிகள் தினமாக – தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர் நீத்த
அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் தினமாக – பிரகடனப்படுத்தப்பட்டு வருடந்தோறும்
ஜனநாயகத்தை மதிக்கும் அனனவராலும்- நினைவு கூரப்பட்டு
வருகிறது.
தோழர் நாபா மறைந்து 35 வருடங்களாகிவிட்டது. அந்த வகையில் –
தோழர் நாபாவின் குறுகிய வரலாறு , அவரது அரசியல் செல்நெறி
மற்றும் செயற்பாடுகள் பற்றி இளைய தலைமுறை
செயற்பாட்டாளர்கள் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.
தோழர் நாபாவின் வரலோறும் அரசியல் செல்நறியும்:
தோழர் நாபா – 1970களில் தமிழ் மாணவர் பேரவை – பின்னர்
இளைஞர் இயக்கங்களில் செயற்பாட்டாளராக இருந்தார். 1976ம்
ஆண்டு பொலிசாரால் னகதுசெய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார் அந்த ஆண்டு பிற்பகுதியில் பெற்றோர்களினால்
உயர் கல்விக்காக லண்டனுக்கு அனுப்பி வக்கப்பட்டார்.
லண்டன் வந்ததும் அங்கு 1975ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஈழ புரட்சி
அனமப்பாளர்கள் – EROS – உடன் தன்னன இனணத்து சகாண்டார்.
1977ம் ஆண்டு EROS இயக்கத்தால் பலஸ்தீனத்திற்கு அரசியல்
இராணுவ பயிற்சி பெற அனுப்பிவைக்கப்பட்டு அந்த ஆண்டில் சிறீ
லங்கா திரும்பினார். அன்றிலிருந்து 1990 இல் அவரது
இறுதிமூச்சுவரை – மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த
உன்னத தனலவர்.
உட்கட்சி ஜனநாயகம் – ஜனநாயக மத்தியத்துவம் ஆகிய
கோட்பாடுகளைப் பின்பற்றும் புரட்சிகர கட்சி ஒன்றின் அவசியம்
1979 இலிருந்து புதிய அணுகுமுனறயில் அவரைப் பயணிக்க
னவத்தது.
அதன் வினளவாக 1981 ம் ஆண்டு – கட்சியின்
அமைப்பாளர் மகாநாடு நடைபெற்றது அதில் தோழர் நாபா கட்சியின்
செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டார்.
அதன் பின்னர் கட்சி வடக்கு கிழக்கில் வெகுஜன இயக்கங்களை பரவலாக விஸ்தரித்து. – மலையகத்திலும் – வெளிநாடுகளிலும் தீவிரமாக செயற்பட்டது. 1984 இல் நடைபெற்ற கட்சியின் முதலாவது காங்கிரஸில் மீண்டும் செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டார்.
தோழர் நாபாவின் அரசியல் செல்நெறியின் முக்கிய அம்சங்களை
பின்வருமாறு குறிப்பிடலாம். உட்கட்சி ஜனநாயக முடிவுகளை
மதித்தல் ஏற்று நடத்தல் –
நடைமுறையில் ஏகப்பிரதித்துவத்திற்கு மாறான – பன்முகத்துவ
அரசியலை வலியுறுத்துதல்.-
இதனாலேயே அனனத்து இயக்கங்கனளயும் ஒன்றிணைத்து –
1985இல் ஈழ தேசிய விடுதலை முன்னணியை – ENLF –
தோற்றுவிப்பதில் முக்கிய பங்காற்றார்.
தொடர்ந்து முற்போக்கு சக்திகளுடன் – நல்லுறவை பேணுவதற்கு
முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டார்.
இதன் விளைவாக நிக்கரகுவா, லிபியாஈ சிரியாஇ லெபனான்இ பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் கட்சிப் பிரதிநிதிகள் தங்கியிருந்து செயற்படுவதை ஊக்குவித்தார்.
சிங்கள மக்களுடனும் – முற்போக்கு சக்திகளுடனும் – நல்லுறவை
பேணுவதில் – பெருமளவு கரிசனை காட்டினார். சிறி லங்கா
இடதுசாரிக் கட்சிகளுடன் நல்லுறனவ பேணி வந்த அதே காலத்தில் –
“விகல்ப கண்டாமய ” என இயங்கிய குழுவினருடன் ஆயுதப்பயிற்சி
உட்பட பரஸ்பர உறவை வளர்த்திருந்தார்.
அவர்களில் ஒரு சிலர் கைது செய்யப்பட – அவர்களின் தலமைக்க்குழு அரசிவிற்சகதிராக – அரசை கவிழ்க்கசதி முயற்சியில் ஈடுபட்டதாக அரசு அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது.. அதில் பிரதான எதிரிகளில் ஒருவராக
நாபாவும் பட்டியலிடப்பட்டார்.
இந்தியாவின் முற்போக்கு பாத்திரத்தையும் – இந்து சமுத்திர
பிராந்தியத்தில் இந்தியா – தவிர்க்கமுடியாத சக்தி என்பதையும்
தெளிவாக புரிந்து கொண்டு செயற்பட்டார். அனனத்து இந்திய
கம்யூனிஸ்ட் கட்களின் தலைலவர்கள் செயற்பாட்டாளர்களுடன்
நெக்கமான உறவை பேணினார்.
பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்த இரண்டு இயக்க
தனலவர்களில் நாபாவும் ஒருவர். பிரதமர் ராஜிவ் காந்தியை
பலமுறை சந்தித்தார். இறுதியாக 1990 ஜூன் நடுப்பகுதியில்
டெல்லியிலிருந்து நேரடியாக சென்னை புறப்படுவதற்கு இரு
தினங்களின் முன் ராஜீவை இறுதியாக அவரது வீட்டில் சந்தித்தார்.
1988 இல் மாகாண சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபின்னர் – TULF
தலைவர் அமிர்தலிங்கத்திடம் நேரடியாக சென்று – அனைவரையும்
ஒன்றிணைத்து தேர்தலில் நிற்கவேண்டும் என்கின்ற விருப்பத்தை
தெரிவித்தார் .
அதற்கான சூழ்நிலை இல்லை என்று அமிர்தலிங்கம்
அவர்கள் கூறிய போது – துணிவுடன் நட்பபு சக்திகளையும்
இணைத்துக்கொண்டு – இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை
தேர்தலை சாத்தியமாக்கினார்.
அதன்பின்னர் 1989 இல் நடைபெற்ற பாராளுமன்ற தாக்குதலில் TULF பதாகையின் கீழ் EPRLF தேர்தலில் நின்று முதன்முதலாக 8 பாராளுமனற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படார்கள்.
1989 நடுப்பகுதியிலிருந்து கட்சியின் இரண்டாவது காங்கிரசை
திருகோணமலையில் நடத்துவதற்கான வேலைகளில் முழுமையாக
செயற்பட்டு வந்தார்.
ராஜிவ் காந்தியின் தேர்தல் தோல்வியைத்
தொடர்ந்து புதிய இந்திய அரசினால் இந்திய சமாதான படை
முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டது.
புலிகளுக்கும் பிரேமமதாசாவிற்கும் ஏற்பட்ட இணக்கத்தை தொடர்ந்து மாகாண
சபையும் கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தோழர் நாபா –
ஒரிசா – மல்காங்கிரியில் தோழர்களுடன் அகதி முகாமில் சிறிது
காலம் தங்கியிருந்தார்.
அதன்பின்னர் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் – புலிகள் மீண்டும் யுத்தத்தனர் ஆரம்பித்தனர் – அதனால்
ஏற்ப்படப்போகும்கும் பாரிய இழப்புகனள எவ்வாறு தவிர்க்கலாம்
போன்ற விடயங்கள் பற்றி – ஆலோசனைகள் நடத்தி –
செயற்திட்டங்களை வகுப்பதற்காக – கட்சியின் அனைத்து
தலைவர்கனளயும் அழைத்திருந்தார். கூட்டம் ஓரிரு தினங்களில்
நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு முன்னரே ஜூன் 19 இல்
தோழர் நாபா படுகொலை செய்யப்பட்டார்.
அடுத்து செய்யதவண்டியது என்ன?
தமிழ் பேசும் மக்களின் போராட்ட வரலாற்றில் இன்று இன்னுமொரு
முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றோம்.
அடுத்து சசய்யதவண்டியது என்ன?
தமிழ் பேசும் மக்களின் போராட்ட வரலாற்றில் இன்று இன்னுமொரு
முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றோம். 2022ம் ஆண்டு
தென்பகுதியில் நடைபெற்ற மக்கள் போராட்டம் – எதேச்சாகார –
மக்கள்விரோத – இனவாத – இராணுவாத -ஆட்சியினை முடிவிற்கு
சகாண்டுவந்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்று தேர்தல்களில் மக்கள் மாற்றத்தை வேண்டி வாக்களித்தனர் – ஒரு
புதிய நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. வடக்கு
கிழக்கிலுள்ள தமிழ்பேசும் மக்கள் மத்தியில் ஜனநாயக
அடிப்படைகளை வலுப்படுத்த – அடுத்த தலைமுறை அரசியல்
செயற்பாட்டாளர்கள் – தன்னலமற்று வழிநடத்த வேண்டும்
என்பதில் – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி- உறுதியாக நம்பிக்கை
கொண்டு செயற்பட்டு வருகின்றது.
தோழர் நாபா மனறந்து 35 வருடங்கள் ஆகிவிட்டது அதில் 2009
வரை யுத்தத்தினால் தமிழர் பிரதேசமும் மக்களும் பாரிய
இழப்புகளை சந்தித்து விட்டனர். அதன் பின்னர் 16 வருடங்களும்
தமிழர் அரசியல் எதுவும் சாதிக்க முடியாத நினலயிலும் – பிளவு
பட்டு சின்னாபின்னப்பட்டு போய் இருக்கிறது.
“““““““
75 வருடங்களுக்கு முன்னர் இருந்த சூழ்நிலையில் – முன்வைக்கப்பட்ட அதே கோரிக்கைளையே
சமஸ்டி – இறையாண்மை-பாரம்பரிய
பிரதேசம்-போன்றவற்றை அடைவதற்கான வழி ஏதும்
தெரியாமலே வெவ்வேறு – வடிவங்களில் முன்னவக்கப்பட்டு
வருகிறது. இவற்னற அடைவது சாத்தியமே இல்லை என்பது இந்த
கோரிக்களை முன்வைப்பவர்களுக்கும் தெரியும்.
தமிழ் மக்கள் பெற்றுக்கொண்ட ஒரேஒரு பலன் – இந்திய
இலங்கை ஒப்பந்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை
முறமை சிறி லங்கா அரசியல் யாப்பில் உள்ளடக்கபட்டதாகும்
அதில் எமது தலைவர் தோழர் நாபாவினதும் தோழர்களதும் மற்றும்
அந்த நேரத்தில் மாகாண சபை முறமையை செயற்படுத்துவதற்கு
உனழத்த அனனத்து தரப்பினரதும் தீர்க்க தரிசனம் பற்றி நாம்
பெருமை கொள்வதுவும் ஆகும்
மாகாண சபை முறையை வலுப்படுத்த – அதிகாரப் பரவலாகத்திற்கான மக்கள் இயக்கமொன்னற கட்டி எழுப்புவதே – மறைந்த எம் தோழர்களுக்கும் – பொதுமக்களுக்கும் – நாம் செலுத்தக்கூடிய உயரிய அஞ்சலியாகும்.
னவ. விக்கினேஸ்வரன்
பொது செயலாளர்
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி