பெரியாரின் கணிப்பு உண்மையாகிறது

தலித் அர்ச்சகர்களிடமிருந்து பிரசாதம் வாங்க ஆணவ ஜாதியினரில் ஒரு சாரர் மறுப்பதாக கேரளாவிலிருந்து செய்தி வருகிறது.

“பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகரானால், கோவிலில் இருப்பது சாமியே அல்ல, வெறும் கல்தான் என்று பார்ப்பனர் பிரச்சாரம் செய்யத்தொடங்கிவிடுவார்கள்” – என்று பெரியார் சொன்னது எத்துனை உண்மை என இன்று புலப்படத்தொடங்கிவிட்டது.


“கோவிலும், சாமியும், பிரசாதமும் பார்ப்பனர் தனது ஆதிக்க வெறியைக் கட்டிக் காக்க உருவாக்கப்பட்டதே ஒழிய அவற்றில் இறைத்தன்மை என்று எதுவும் இல்லை” – என்ற தெளிவு பார்ப்பனிய ஆதிக்க ஜாதியினருக்கு இருப்பதற்கு இச்சம்பவமே உதாரணம்.
இனி கேரள அரசு செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது.
ஆணவ ஜாதியினர், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக இப்படிச் செயல்படுவதால், இது நாள் வரை நூறு சதவீதம் அர்ச்சகர் பணி ஆதிக்க ஜாதியினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது போல, அடுத்த ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு அனைத்து அர்ச்சகர் பணியும் நூற்றுக்கு நூறு சதவீதம் தலித் அர்ச்சகர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு செய்து தரவேண்டும்.
பிறகு பிரசாதமும் வேண்டாம், கோவிலும் வேண்டாம், சாமியும் வேண்டம் எங்களுக்கு எங்கள் வெறித்தனமான ஜாதி மட்டுமே முக்கியம் என்று ஆணவ ஜாதியினர் ஒளித்து வைத்திருக்கும் உண்மையை உரக்கச் சொல்லட்டும்.
சக மனிதர்கள் மீது வன்முறை நிகழ்த்தவே உருவாக்கப் பட்ட ஜாதியும் – ஜாதியைக் கட்டிக் காப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட மதமும் ஆட்டம் காணட்டும்.
கோவில், சாமி, மதத்தின் பெயரில் பெரும்பான்மை மனிதகுலத்தை ஏய்த்துப்பிழைக்கும் பார்ப்பனிய- ஆதிக்க ஜாதியினரின் வன்முறையிலிருந்து எளியோரை மீட்கவும், தேசத்தில் சமத்துவத்தை உறுதிப்படுத்தவும் அதுவே நேர்மையான தீர்வாக அமைந்திருக்கும்.