இனப்பிரச்சினைக்கு சமஷ்டி சிறந்த தீர்­வாகும். தற்­போ­தைய நிலையில் அது சாத்­தி­ய­மில்லை – வரதராஜபெருமாள்,

அதி­கா­ரப்­ப­கிர்வு ஆணைக்­குழு அவ­சியம் : வர­த­ரா­ஜ­பெ­ருமாள் வலி­யுறுத்து

இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு சமஷ்டி சிறந்த தீர்­வாகும். தற்­போ­தைய நிலையில் அது சாத்­தி­ய­மில்லை. எதிர்­கா­லத்தில் அதற்கு வழி­வ­குக்க கூடிய வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது அதி­கா­ரப்­ப­கிர்­வைக்­கொண்ட ஒற்­றை­யாட்­சிக்­குட்­பட்­ட­தாக இருக்க வேண்டும். அதி­கா­ரப்­ப­கிர்வு ஆணைக்­கு­ழு­வொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கு­மென வட­கி­ழக்கின் முன்னாள் முத­ல­மைச்­ச­ரான வர­த­ரா­ஜ­பெ­ருமாள் விசும்­பா­ய­வி­லுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்பில் பொது­மக்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றி­வதற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள சிவல் குழுவின் தலை­மைக்­கா­ரி­யா­லயத்தில் நேற்­றை­ய­தினம் 22 பக்­கங்­க­ள­டங்­கிய தனது பரிந்­து­ரை­களை சமர்ப்­பித்­ததன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.


அவர் மேலும் தெரி­விக்­கையில்,
புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது இன­ப்பி­ரச்­சினை தொடர்­பான தீர்­வுக்கு அல்­லது எதிர்­கால நகர்­வு­க­ளுக்கு அடித்­த­ள­மாக அமையும். புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒட்­டு­மொத்த சிறு­பான்­மை­யி­னரின் உரி­மைகள் தொடர்­பிலும் அவர்கள் சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் அவ­சி­யமாகும். கடந்த கால அனு­ப­வங்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு பெரும் உத­வி­யாக அமையும். கடந்த காலங்­களில் இழைக்­கப்­பட்ட தவ­று­களை நிவர்த்தி செய்­வ­தற்­கான செயற்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.
1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்­புக்கள் மக்­களின் எந்­த­வி­த­மான ஆலோ­ச­னை­க­ளையும் பெறாது தான்­தோன்­றித்­த­ன­மாக திடீ­ரென தோற்­று­விக்­கப்­பட்ட யாப்­புக்­க­ளாகும். அந்த வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதில் மக்­களின் அபிப்­பி­ரா­யங்­களை கோரு­வதும் நிபு­ணத்­து­வ­மா­ன­வர்­க­ளிடம் ஆலோ­சனை பெறு­வதும் வர­வேற்­கத்­தக்­கதும் பாராட்­டக்­கூ­டிய விட­ய­மாகும். ஒற்­றை­யாட்சி தொடர்பில் பல வாதப்­பி­ர­தி­வா­தங்கள் காணப்­ப­டு­கின்­றன. அர­சி­ய­ல­மைப்பே அதி­யுச்­ச­மா­னது. அர­சாங்­கத்­தினால் ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பில் ஏற்­ப­டுத்­தக்­கூடிய நெகிழ்­வுத்­தன்­மை­யான விட­யங்கள் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும். இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு சமஷ்டி முறை­யி­லான தீர்வே சிறந்­தாகும். தற்­போ­தைய நிலையில் அது சாத்­தி­ய­மில்லை.
சமஷ்டி என்­பது வடக்­கு,­கி­ழக்­கிற்கு மாத்­தி­ர­மா­ன­தல்ல என்­பதை சிங்­க­ள­வர்கள் உண­ரும்­போது அது சாத்­தி­ய­மாகும். ஆகவே எதிர்­கா­லத்தில் சமஷ்டி முறை­மைக்கு செல்­லக்­கூ­டிய வகையில் புதிய அர­சி­ய­மைப்பு அதி­யுச்ச அதி­கா­ரப்­ப­கிர்வை கொண்ட ஒற்­றை­யாட்­சிக்­குட்­பட்­ட­தாக அமைந்­தி­ருப்­பதே தற்­போ­தைக்கு போது­மா­னது.
நான் தற்­போ­தைய ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா ஆகி­யோ­ருடன் இணைந்து நாடு எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வை காணத் தயா­ரா­க­வுள்ளேன், சந்­தி­ரி­கா­வுடன் எனக்கு நல்ல உற­வுள்­ளது, என்னை இணைந்து பணி­யாற்ற அவர் அழைத்தால் அதனை பெரு­மை­யாக கரு­துவேன்.
அர­சி­ய­ல­மைப்பே அதி­யுச்­ச­மா­ன­தாக அமை­ய­வேண்டும். அனைத்து அதி­கா­ரங்­களும் சட்­டங்­களும் அர­சி­ய­ல­மைப்பில் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும். அவை தொடர்பில் பிரச்­சி­னைகள் ஏற்­படும் தரு­ணத்தில் அவற்­றுக்கு எதி­ராக நீதி­மன்றில் வழக்­கு­தொ­ட­ரு­ம­ள­விற்கு நீதித்­து­றைக்­கான சுதந்­திரம் வழங்­கப்­ப­ட­வேண்டும்.
அதே­நேரம் ஏனைய சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் போன்று அதி­கா­ரப்­ப­கிர்வு ஆணைக்­கு­ழு­வொன்றும் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். அதி­கா­ரங்கள் தொடர்­பாக பிரச்­சி­னைகள் எழு­மி­டத்தில் அவ்­வா­ணைக்­கு­ழுவின் ஊடாக பெற்­றுக்­கொள்­ள­ மு­டி­யு­ம­ள­விற்கு சுயா­தீ­ன­மாகச் செயற்­ப­டு­வ­தற்கும் இட­ம­ளிக்­கப்­ப­ட­வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­பட வேண்­டுமா இல்­லையா என்­பதை மக்­களும், பிர­தி­நி­தி­க­ளுமே தீர்­மா­னிக்­க­வேண்டும். வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­மா­க­வி­ருந்தால் நிர்­வாகச் செயற்­பா­டுகள் வினைத்­தி­றன்­மிக்க வடிவில் எவ்­வாறு முன்­னெ­டுப்­பது குறித்தும் கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளேன்.
குறித்­த­வொரு மாகா­ணத்தில் ஆளு­ந­ருக்கு காணப்­படும் நிறை­வேற்று அதி­காரம் நீக்­கப்­ப­ட­வேண்டும். மக்­களால் தெரி­வு­செய்­யப்­பட்ட மாகாண முத­ல­மைச்­சர்கள் மற்றும் அமைச்­சர்கள் வலு­வுள்­ள­வர்­க­ளாக ஒரு அர­சாங்­க­மாக செயற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­வேண்டும். நிறை­வேற்று அதி­காரம் மாகாண அமைச்­ச­ர­வைக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும். மத்­திய அர­சாங்­கத்­திற்கும், மாகா­ண­ச­பைக்கும் பொது­வான அதி­கா­ரங்­க­ளாக ஒத்­தி­யங்­குப்­பட்­டியல் காணப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு காணப்­ப­டு­கின்­ற­போதும் அதி­கா­ரங்கள் தொடர்பில் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆகவே மாகாண சபைக்கு தனி­யான நிர்­வாக அமைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். இரண்டாம் தர சபைகள் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இணைவு தொடர்பில் கவனம் செலுத்­தும்­போது முஸ்­லிம்­களை உள்­வாங்­கிய கட்­ட­மைப்பை உரு­வாக்கி தீர்வை முன்­வைப்­பதா இல்­லையேல் அவர்­க­ளுக்­கான தனி­ய­லகை வழங்­கு­வதா என்­பது குறித்து நீண்ட கலந்­து­ரை­யா­டல்­க­ளைச் ­செய்­ய ­வேண்­டி­யுள்­ளது.இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்பப் பட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­க­வுள்­ளது.
தேசிய கொள்­கைகள், திட்­டங்கள் தொடர்­பாக வரை­ய­றைகள் செய்­யப்­ப­ட­வேண்டும். தேசிய இனங்­க­ளுக்­கி­டை­யி­லான சமத்­துவம் பேணப்­ப­ட­வேண்டும். தகு­தியின் அடிப்ப­டையில் நியமனங்கள் வழங்குதல், சலுகைகள் அடிப்படையில் நியமனங்கள் வழங்குதல் போன்றவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவேண்டும். இராணு வம், பொலிஸ், போன்றவற்றில் தேசிய சிறுபான்மை இனங்களைச் சோந்தவர்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யவேண்டும்.
அனைத்து மதங்களுக்குமான மதிப்புககளும் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படவேண் டும். பெரும்பான்மை என்ற அடிப்படையில் மதங்களுக்கான விசேட ஏற்பாடுகள் நீக்கப்படவேண்டும். தேசிய இனங்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத் தும் வகையில் சபைகள் உருவாக்கப்பட வேண்டும். அதேபோன்று முரண்பாடுகளை தவிர்க்கும் வகையிலான எல்லைகளை மீள்நிர் ணயம் மேற்கொள்ளவேண்டும். தேர்தல்கள் தொடர்பான மாற்றங்களும் மேற் கொள்ளப்படவேண்டும். இவை தொடர்பாக விரிவான கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தேன் என்றார்.