மகாண சபை முறமையும் அதிகாரப் பகிர்வும்

அதன் சாராம்சத்தை இங்கு தருகின்றேன் நேரக் கட்டுப்பாடு காரணமாக உரையினை கருத்தரங்கில் முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் அதனை இங்கு பகிர்கின்றேன்.

இணைந்த வடக்கு கிழக்கு மகாணசபையைத் தேர்தல்கள் மூலம் வென்று 1989 இல் ஆட்சியை அமைத்த போது முதலில் எதிர்நோக்கிய சவால்களாக புதிய அரச நிர்வாகம் ஒன்றை உருவக்குவதற்குரிய அலுவலகங்கள் அலுவலர்கள் ஆளணிகள் திணைக் கழத்திற்கு தலைவர்கள் என்று ஏதும் இல்லாத நிலையில் அவற்றை இனம் கண்டு உருவாக்கி அமைத்துக் கொள்வது மிக முக்கிய சவாலாக இருந்தது.

இதற்கான பணக் கொடுப்பனவுகளையும் பிரேமதாசாவின் மத்திய அரசு வழங்குவதில் போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை.

இந்த மாகாண அரசிற்கு பெரும் பாதுகாப்பு அச்சுறத்தலாக தமிழர் தரப்பில் விளங்கிய தமிழீழ வடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் மாகாண அரசுக்கு மட்டும் அல்ல இதில் இணைந்து வேலை செய்த சகல தரப்பு உத்தியோகஸ்தர்களும் உயிர் அச்சுறத்தலாக இருந்தது.

அதனால் பலரும் இதில் இணைந்து தமது அலுவல்களை செயற்படுத்த பின் நின்றனர்.

கூடவே இந்த நிர்வாகத்தில் மக்கள் பெறும் சேவை என்றான அடிப்படை என்ற அன்றாட தேவைகளை பெறும் பொது மக்களும் உயிர் ஆபத்தை எதிர் நோக்கினர்.

இந் நிலையில் சிவில் நிர்வாகத்தை செயற்பாட்டிற்குள் கொண்டு வருதல் பெரும் சவாலாக அன்று இருந்தது.

சகல திணைக் ழகங்களும் சிவில் நிர்வாகத்தை தடை என்ற தமீழ விடுதலைப் புலிகளின் உயிர் அச்சுறுதலுடனாக ஆணைக்கு பயந்து இதிலிருந்து விலகி இருந்தனர்.

மத்திய அரசம் பிரேமதாசா தலமையில் இந்திய இராணுவத்தின் பிரசன்னத்திற்கு எதிர் என்றாக வடக்கு கிழக்கு மாகாண அரசிற்கான வழங்களைவ வழக்குதல் ஒத்துழைப்புகளை நல்குதல் என்பது பெரும் பிரச்சனையாக இருந்ததும்.

இதில் பிரேமதாசா அரசம் புலிகளும் இணைந்து புரிந்துணர்வுடன் நட்பாக செயற்பட்ட காலம் அது.

சிறப்பாக நிதி போன்ற விடயங்களில் பாரிய கட்டுப்பாடுகளை செயற்படுத்தியது அரசு. கூடவே அரசியல் அமைப்பில் இருந்த அதிகாரங்களை பகிரவும் தடையாக இருந்தது.

இவற்றை மீறியே நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி அதனை செயற்பாட்டிற்குள் கொண்டு வந்து மக்களுக்கான சேவைகள வழங்க வேண்டி இருந்து.

இதற்கு பெரும்பாலான மாவட்டங்கள் தோறும் அரசல் இணபை;பாளர் என்ற ஒரு பதவி உருவாகப்பட்டு சிவில் நிர்வாகத்தை முழுமையாக செயற்பாட்டிற்குள் கொண்டவந்தோம்.

இதில் உத்தியோகஸ்தர்களும் மக்களும் புலிகளின் தடையை மீறி சிவில் நிர்வாகத்தில் பங்கெடுக்கவும் ஆரம்பித்தனர்.

யுத்தத்தின் பின்னரான சமாதான காலத்தில் மக்களின் தேவைகள் எதிர்பார்ப்புகள் எகிறி இருந்த வேளையில் அதிக பணிச் சுமைகளை இருந்த சூழலில் இந்த நிலமையிற்குள் கையாளுவது பெரும் சவாலாக இருந்து.

கிடைக்கப் பெற்ற ஒரு வருடம் 4 மாதங்களில் இதனை சிறப்பாக செய்தோம்.

மகாணசபை என்ற புதிய அதிகாரப் பரவலாக்க நிர்வாகக் கட்மைப்பை உருவாக்கிய பெருமிதமாக இதனைக் கருதலாம்.

இது தனது முழமையான ஆயள்காலத்தை பூர்த்தி செய்திருந்தால் சஇதன் பயன்பாடுகளை பொது மக்கள் அதிகம் உணரக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். அவை இன்றும் உணரப்பட்டிருக்கலாம்.

வடக்கு கிழக்கில் உள்ள சகல சமூகங்களையும் பிரதிநிதிதுவப்படுத்தும் மந்திரி சபையை தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என்றாக அமைத்து அதில் வடக்கு கிழக்கு என்றாக சகல பிரதேச் பிரிநிதித்துவங்களை உள்ளடக்கியதாக ஐந்து அமைச்சர்கள் முதல் அமைச்சர் என்றாக அமைத்ததும் சிறப்பு.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அரசை முன் மாதிரியாக கொண்டு தாமும் செயற்பட விளைவதாக தென் பகுதி மாகாணசபை உறுப்பினர்களின் குழுக்கள் எமது தலமையகத்திற்கு வந்து எம் செயற்பாட்டை அறிந்து எமக்கான அங்கீகாரமாக எம்மை முன் உதாரணம் என்று தெரிவிதத்து எனது முன்னோக்கிய பாதையின் அங்கீகாரமாக பார்க்க முடியும்.

கூடவே வடக்கற்கும் கிழக்கிற்கும் இணைப்பான இடமான திருகோணமலையை தலமையகமாக கொண்ட மகாணசபை நிர்வாகத்தை கட்டியமைத்தது.

இதற்கான எதிர்பை ஜேஆர் ஜெயவர்த்தனா சலுகை என்ற வகையாக எம்மோடு பேரம் பேச முற்பட்டதை நாம் நிராகரித்தும் இருந்தோம்.
இதற்கு முன்பாக எமது போராட்த்தின் சில வரலாற்றுப் போக்கினை சுருக்கமாக இவ்வாறும் பேசி இருந்தேன்….

மே 4, 1972 அன்று தமிழ் ஐக்கிய முன்னணியை (TUF) உருவாக்கின. வுருகு அதன் பெயரை தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) என்று மாற்றி, “மதச்சார்பற்ற, சோசலிச தமிழ் ஈழ அரசு” என்று அழைக்கப்படும் ஒரு சுதந்திர அரசுக்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட TULF ஆதரிக்க CWC மறுத்துவிட்டது.

1977 நாடாளுமன்ற பொதுத் தேர்தல்:
TULF போட்டியிட்ட முதல் பொதுத் தேர்தலில், UNP அமோக வெற்றி பெற்ற 1977 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், TULF மக்கள் வாக்குகளில் 6.40 % மற்றும் வடக்கு மாகாணத்தின் 14 இடங்களையும் உள்ளடக்கிய இலங்கை நாடாளுமன்றத்தில் 168 இடங்களில் 18 இடங்களை வென்றது.
பாராளுமன்றத் தேர்தல் எதிர் கட்சித் தலைவர்.

திம்பு பேச்சு வார்த்தை:

ஜூலை – ஆகஸ்ட் 1985 இல் இந்திய அரசாங்கம் பூட்டானின் திம்புவில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தது. அரசாங்க முன்மொழிவுக்கு பதிலளிக்கும் விதமாக, திம்புவில் தமிழ் பிரதிநிதிகள் குழு வெளியிட்ட பிரகடனம், திம்பு பிரகடனம் அல்லது திம்பு கொள்கைகள் என்று அறியப்படுகிறது.

தனி நாட்டுக் கோரிக்கை தவிர வேறு உங்கள் போராத்திற்கான தீர்வுக் கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை மேசையிற்கு வாருங்கள் என்ற இந்தியாவின் வேண்டுகோளிற்கு அமைய பின்வரும் நான்கு அம்சக் கோரிகையை நாம் இலங்கை அரசாங்கம் முன் வைத்தோம்:

  1. Recognition of the Tamils of Sri lanka as a as a distinct nationality
  2. Recognition of an identified Tamil homeland and the garanteeted of its territorial integrity
  3. Based on above recognition of the inalienable right of self determination of the Tamils nation
  4. Recognition of the right to full citizenship and fundamental democratic rights of all Tamils who look upon the island as their country

  1. இலங்கைத் தமிழர்களை ஒரு தனித்துவமான தேசிய இனமாக அங்கீகரித்தல்
  2. அடையாளம் காணப்பட்ட தமிழ் தாயகத்தை அங்கீகரித்தல் மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு உத்தரவாதம் அளித்தல்
  3. மேற்கூறியவற்றின் அடிப்படையில் தமிழ் தேசத்தின் பிரிக்க முடியாத சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்
  4. இலங்கைத் தீவைத் தங்கள் நாடாகக் கருதும் அனைத்து தமிழர்களின் முழு குடியுரிமை மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான உரிமையை அங்கீகரித்தல்
    தமிழர் போராட்ட வரலாற்றில் திம்பு பேச்சு வார்த்தை பலம் மிக்க காலம்.
    ஆனால் பேச்சுவார்த்தை மேசையிற்கு போகும் போது எந்த ஐக்கிய முன்ணியும் எம்மிடையே இருக்கவில்லை.
    கிடைத்த ஒரு இரு தினங்களில் ஐக்கிய முன்னணியாக ஒரணியாக ஒரே கோரிக்கையை முன்வைத்த நிகழ்வு அது.
    இதுவே தமிழ் வரலாற்றில் அதிக பலம் மிக்க இராஜதந்திரம் மிக்க நகர்வை மேற்கொண்ட சம்பவம் ஆகும்.
    1986 டிசம்பருடன் அனைத்து இயக்கங்களும் தமது மக்களுக்காக போராடும் உரிமையை மறுத்து தடை செய்யப்பட்டு 1987 புதிதாக ஏக தலமையாக எழுந்து நின்ற காலம்.
    இன்னும் ஒரு வகையில் சொன்னால் தமிழர் பகுதியில் பன்முகத் தன்மையை முழுமையாக மறுதலித்த காலகட்டம் அது.
    இதன் பின்பு அன்றை இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி பாராளுமன்றத்தில் சூழுரைக்கின்றார்….
    இயக்கங்களிடையே மோதலை ஏற்படுத்தி அவர்களாலே அவர்களை அழிப்பேன் இறுதியில் ஒரு அமைப்பு தனியாக நிற்கும் நிலை ஏற்படும் பின்பு அவர்களை எதிர் கொண்ட அழிப்பேன் என்று.
    இந்த சூழலில்தான் 1987 ஆண்டு உதயமாயிற்று
    ஒப்பரேசன் லிபரேசன் 1987 மே மற்றும் ஜூன் மாதங்களில் யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள வடமராட்சி பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து (தமிழ்ப் புலிகள்) மீண்டும் கைப்பற்ற இலங்கை ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதலாகும்.
    இந்த தாக்குதல் அதன் முதன்மை நோக்கத்தை அடைந்தது, இருப்பினும் இந்திய அரசாங்கம் ஜூன் 4, 1987 அன்று ஒபரேசன் பூமாலையில் யாழ்ப்பாணத்தின் மீது உணவுப் பொருட்களைக் ஆகாய மார்க்கமாக விநியோகித்தது.
    இது ஜே.ஆர் ஐ போரை நிறுத்தி பேச்சுவாரத்தை மேசையிற்கு கொண்டு வந்தது.
    ஆனால் மிகவும் தந்திரமான இராஜதந்திரி ஜேஆர் இதனை தமிழ் ஆயுதக் குழுக்களிக்கு இந்தியா வழங்கிய ஆதரவை எமக்கு எதிராக மாற்றி அமைத்துக் கொண்டார்.
    இதற்கான தந்திர உள் நோக்கத்தின் அடிப்படையில் ஜேஆரின் இலங்கை அரசாங்கம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளத் வைத்தது.
    விடுதலை அமைப்புகள இணைக்காமல் இந்தியாவிற்கும் இலங்கையிற்கும் இடையிலான இலங்கை இந்திய ஒப்பந்தம்.
    இதனை விடுதலைப் புலிகள் உட்பட்ட அணைத்து விடுதலை அமைப்புகள் ஒரு தலைப் பட்சமாக ஏற்கும் நிலை.
    சமானப்படை இறக்கம்:
    இதனை முழுமையாக ஏற்றுத்தான் பூரண கும்பத்துடன் புலிகள் இந்திய வாகனங்களில் பவனி சுதுமலை கூட்டம் ஏனைய அமைப்புகள் இவற்றில் அதிகம் இந்திய அரசால் கண்டு கொள்ளப்படவில்லை.
    ஆனால் மீண்டும் பன்முகப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டிற்கான களம் தமிழ் பிரதேசத்தில் திறக்கப்படுகின்றது இங்குதான் உண்மையில் பிரச்சனை ஏற்படுகின்றது.
    புளட் ஈபிஆர்எல்எவ் அமைப்பினர் மட்டக்களாப்பில் இரு தினங்களில் வகை தொகையில்லாமல் இந்திய இராணுவம் பார்த்துக் கொண்டிருக்க புலிகள் கொன்று குவித்தனர்.
    இதன் திசை திருப்பலாகத்தான் திலீபனின் உண்ணாவிரதம் இந்திய இராணுவத்தின் மீதான தாக்குதல் என்றான நிலைகள் ஏற்படுத்தப்பட்டன.
    இதற்கு முதல் இடைக்கால அரசில் 13 அங்கத்தவர்கள் கொண்ட அமைத்தலில் முழுவதுமாக தமிழ் ஈழவிடுதலைப் புலிகளை மட்டும் கொண்ட அமைத்தல் என்பதில் கூட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உட்பட ஏனைய விடுதலை அமைப்புகளின் பிரதிநிதித்துவம் வழகப்படவில்லை.
    ஆனால் சர்வதேச அளவிலும் இந்திய இராஜதந்திரிகள் மட்டத்திலும் தமிழர் ஐக்கிய முன்னணியின் கோரிக்கையிற்கு ஏற்ப இரு உறுப்பினர் மட்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியிற்கு வழங்குதல் எனபது உருவானது.
    ஜேஆர் இடைக்கால முதல்வராக ஒரு வரை தருமாறு கேட்ட போது சிவஞானம் பத்மநாதன் என்றாக கொடுத்து சிவஞானம் ஜேஆரின் ஏஜன்டாக இருந்த சூழலில் அவரை ஜேஆர் தெரிவு செய்ய பின்பு புலிகள் நிலமைகளை உணர்ந்து அவரை நிராகரித்து பத்மநாதனை பிரேரிக்கப்பட்ட நிலையில்தான் இந்த யுத்தம் ஆரம்ப மானது.
    வடகிழக்கு மாகாணசபையும் வரதராஜப்பெருமாளும்.!
    1987 யூலை 29 ல் இந்திய இலங்கை உடன்பாட்டை அடுத்து புதிதாக அமைக்கப்பட்ட வடகிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது.
    விடுதலைப்புலிகள் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு அறிவித்தது.
    அதில் இந்தியப்படையின் ஆதரவில் இயங்கிய ஈபிஆர்எல்எஃப் இத்தேர்தலில் வெற்றி பெற்றது.
    தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, புளட், ஈரோஸ் இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.
    கிழக்கில் மட்டும் ஈபிஆர்எல்எவ்வுடன் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கியதேசிய கட்சி, ஈஎன்டிஎல்எவ், போட்டியிட்டது.
    கிழக்கு மாகாணத்தில் ஈபிஆர்எல்எவ் செவ்வரத்தம் பூ சின்னத்தில் போட்டியிட்டு 17 ஆசனங்களையும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17, ஆசனங்களையும், ஜக்கியதேசிய கட்சி 01, ஆசனத்தையும் பெற்றது, ஈஎன்டிஎல்எவ் எந்த ஆசனமும் பெறவில்லை.
    மொத்த ஆசனங்கள்: 35
    வடக்கில் ஈபிஆர்எல்எவ் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது வேறு எந்த கட்சிகளும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யாமையால் தேர்தல் நடத்தாமலேயே ஈஎன்டிஎல்எவ் கட்சிiயுடன் உடன் இணைத்து போட்டியிடாமையால் ஆசனங்களை பகிர்ந்து 24, ஆசனங்கள் ஈபிஆர்எல்எவ் 12, ஆசனங்கள் ஈஎன்டிஎல்எவ் என்றாக வடமாகாணத்தில் 36 ஆசனங்களை பெற்றது.
    வடகிழக்கில் மொத்தம் 71 ஆசனங்களில் அதிகப்படியாக ஈபிஆர்எல்எவ் 41 ஆசனங்களுடன் வரதராஜப்பெருமாள் முதலமைச்சரானார்.
    முதல் அமைச்சர் பதவியிற்கும் தேர்தலில் பங்கு பற்றுமாறு அமிர்தலிங்கத்தை அழைத்த போது இறுதியாக மறுத்த அவர் ‘ புலிகள் வெல்லுமோ தெரியாது ஆனால் அவர்கள் கொல்வார்கள்’ என்ற உள் உணர்வால் இவற்றில் இணையவில்லை என்பது உணரப்பட்டது.
    ஆனால் இவர் புலிகளால் சில காலங்களின் பின்பு கொழும்பில் வைத்துக் கொல்லப்பட்ட போது அவரின் இறுதி ஊர்வலத்தை இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அரசுதான் வடக்கு கிழக்கு என்று எல்லா இடங்களுக்கும் மக்கள் மரியாதைகாக கொண்டு சென்று இறுதி நிகழ்வையும் நடாத்தி முடித்தது..
    இது இணைந்த வடக்கு கிழக்கு ஆட்சிக்காலத்தில்தான் நடைபெற்றது.
    வரதராஜப்பெருமாள் 1988, நவம்பர் 19, தொடக்கம் 1990, மார்ச் 01, வரையும் மட்டும் அதாவது 01, வருடம் 03 மாதம், 12 நாள் மட்டுமே முதலமைச்சர் என்ற பதவியில் இருந்தார்.
    1990, மார்ச் 01, ல் அவர் இந்தியப்படையுடன் கப்பலில் திருகோணமலையில் இருந்து பிற்பகல் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அன்று காலை 10, மணிக்கு திருகோணமலையில் இறுதி அமர்வு இடம்பெற்றபோது 19 அம்சக் கோரிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்து அவை ஒரு வருடத்திற்குள் நிறை வேற்றாவிட்டால் நாம் தனி நாடாக பிரிந்து செல்வதை தவிர வேறு வழியில் என்று உரையாற்றிவிட்டே சென்றார்.
    1990 மார்ச் 02 ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி வடகிழக்கு மாகாணசபையை உடனே கலைத்து, மத்திய அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.
    இதே வருடம் ஜுன் மாதம் இணைந்த வடக்கு கழக்கு மாகாணசபையின் பிதாமகன் தோழர் பத்மநாபா தமிழ் நாட்டில் தமிழீழு விடுதலைப் புலிகளால் சதி மூலம் கொல்லப்பட்டார்.
    மத்திய அரசின் கீழ் இணைந்த மாகாணசபை ஆளுநர் ஊடாக 2006 அக்டோபர் 16 வரை இணைந்த வடகிழக்கு மாகாணசபை ஆளுநரின் நிர்வாகத்தில் இயங்கியது.
    2006 யூலை 14 ல் ஜே வி பி இணைந்த வடகிழக்கு பிரிப்புக்கு எதிராக கொழும்பு உச்ச நீதிமன்றில் வழக்கை தாக்கல் செய்தமையால் அதன் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக 2006 அக்டோபர் 16, ல் தீர்பு வழங்கப்பட்டது.
    2006 அக்டோபர் 16, ல் இலங்கையில் எட்டு மாகாணசபையாக வர்தமானியில் வெளியிடப்பட்ட மாகாணசபைகள் 09, மாகாணசபை என கிழக்குமாகாணசபை தனியாகவும் வடக்கு மாகாணசபை தனியாகவும் வெளியிடப்பட்டது.
    தென் அமெரிக்காவின் சிலியில் 1973 இல் இடதுசாரி சல்வடோர் அலன்டே காஸ்ரோ அமெரிக்க சதி மூலம் கொல்லப்பட்டார். கிட்த்தட்ட 50 வருடம் தேவைப்பட்டது மீண்டும் அங்கு மக்களுக்கான இடதுசாரி கப்பிரியல் போரிக் இனால் ஐக்கிய முன்னணி அரசை அமைப்பதற்கு….
    1983 இல் மேற்கு ஆபிரிகாவின் பூர்கினோ பாசோ இல் தோமஸ் சங்காரா சதிமூலம் கொல்லப்பட்டார் இன்று வரை அந்த நாடு எழுந்துவருதலுக்கான போராட்த்தில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.
    தோழர் நாபா கொல்லப்பட்டு 35 வருடங்கள ஆகின்றன. இன்று வரை ஈழத் தமிழருக்கான அரசியல் திருவாக ஓரளவற்கு அமைந்த மகாண சபை எழுந்துவருவதற்கு போராடிக் கொண்டுதான் இருக்கின்றது..
    தோழர் பிடல் காஸ்ரோவின் ‘வரலாறு எம்மை விடுதலை செய்யும்'(“History Will Absolve Me”) என்ற நம்பிக்கைகளுடன் முன்னேறுவோம்
    அதற்கு அரத்தம் நிறைந்த வாக்கியங்கள் ‘நாங்கள் கொல்லப்படலாம் ஆனால் எங்கள் குரல் ஒருபோதும் ஓயாது..’ (“We May Be Killed But Our Voice Will Never Die”)என்று சொன்ன றோகனா விஜயவீராவின் தற்போதைய ஆட்சி என்ன செய்யப் போகின்றது என்பதை நாம் காத்திருந்து பார்க்கும் நிலையில் தற்போது…..