அமெரிக்கப் படைகளால் கடத்தப்பட்ட நிலையில், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரெஸும், போதைப்பொருள் கடத்தல், நார்கோ-தீவிரவாதம் உள்ளிட்ட அவர்களின் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்க நீதிமன்றத்தில் முழுமையாக மறுத்திருக்கிறார்கள்.
நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டீன், “நார்கோ-தீவிரவாத சதி” உள்ளிட்ட மடூரோவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வாசித்து, அவரது பதிலை கேட்டபோது,
மடூரோ கூறினார்:
“நான் குற்றமற்றவன். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்த குற்றத்திற்கும் நான் தொடர்புடையவன் அல்லன், நான் குற்றமற்றவன்.”
மடூரோவின் மனைவி சிலியா ஃப்ளோரெஸும், தனது குற்றமின்மையை வலியுறுத்தி, தனது பதிலை இவ்வாறு தெரிவித்தார்:
“குற்றமில்லை. நான் முற்றிலும் நிரபராதி.”
மேலும் மடூரோ நீதிமன்றத்தில்,
“நான் குற்றவாளி அல்ல; நான் ஒரு நேர்மையான மனிதன்; நான் இன்னும் என் நாட்டின் ஜனாதிபதியே,” என்று உரக்க கூறினார்.
மடுரோ தொடர்ந்து “நான் ஒரு நாட்டின் அதிபர் நான் ஒரு போர் குற்றவாளி போல் இங்கே நிறுத்தப்பட்டிருகிறேன்” என்றார்.
அதற்கு நீதிபதி “இல்லை அதற்கு நான் பிறகு வருகிறேன், நீங்கள் யார் என்று அறிந்துகொள்வது தான் என் முக்கிய நோக்கம்” என்றார்
மடூரோவின் மனைவி சிலியா ஃப்ளோரெஸின் முகத்தில் சில காயங்கள் இருந்தது, அவர் பலமாக முகத்தில் தாக்கப்பட்டிருப்பதை அனைவரும் கவனித்தனர்.
எல்லாம் முடியும் தருவாயில் நீதிமன்றத்தில் இருந்த ஒருவர் பெரும் கூச்சலிட்டார், நீ தண்டனையை அனுபவித்தே தீருவாய் என்று மடூரோவை பார்த்து அவர் சொன்னார், அதனை அங்கீகரிக்கும் வகையில் மடுரோ அவரை திரும்பிப் பார்த்து, “I am a man of God” என்றார்.
மடூரோ, ஜூலியன் அசாஞ்சை பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக அறியப்பட்ட பிரபல குற்றவியல் பாதுகாப்பு வழக்கறிஞர் பாரி போலாக்கை தனது வழக்கறிஞராக நியமித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் அசாஞ்சின் விடுதலையுடன் தொடர்புடைய சில அம்சங்களை வெற்றிகரமாக அவர் வாதிட்டு அவருக்கு விடுதலையை பெற்று தந்தன் மூலம் உலக புகழ்பெற்ற மனித உரிமைகள் வழக்கறிஞராக திகழ்கிறார்.
அசாஞ்சேயை கைது செய்து வைத்திருந்த போதும் அவரை உயிருடன் கண்ணியமாக வைத்திருந்தது பிரிட்டிஷ் அரசு, இங்கே என்ன நடக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்!!!