இது தொடர்பான முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
1951-ஆம் ஆண்டிலேயே இதற்கான ஆரம்ப ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், 1983 டிசம்பரில் ஜே.ஆர். ஜெயவர்தன ஆட்சிக் காலத்தில் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையம் தெற்காசியா மற்றும் சோவியத் யூனியன் போன்ற பகுதிகளுக்கு குறுகிய அலை (Shortwave) மூலம் செய்திகளை ஒலிபரப்பத் பாவிக்கப்படும் எற்றாகவே வெளிப்படுதப்பட்டது.
முதலில் சிலாபம் பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த இக்கோபுரம், அங்கு வசித்த மீனவர்களின் எதிர்ப்பால் பின்னர் இரணவில பகுதிக்கு மாற்றப்பட்டது.
இந்தத் திட்டம் அரசியல் ரீதியாக இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது:
உள்ளூர் எதிர்ப்பாக கத்தோலிக்க திருச்சபை மற்றும் மீனவ சமூகத்தினர் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்றும் கடுமையாக எதிர்த்தனர். 1994-ல் நடந்த ஒரு போராட்டத்தின் போது ஒரு மீனவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சர்வதேச எதிர்ப்பாக இது அமெரிக்காவின் ஒரு ரகசிய உளவு மையமாக (Listening Post) செயல்படும் என்று இந்திரா காந்தி தலமையிலான இந்தியா கவலை தெரிவித்தது.
இந்தக் கோபுரத்தின் தற்போதைய நிலை நீண்ட இழுபறிக்குப் பின் 1990-களின் இறுதியில்(தமிழ் பிரதேசங்கள் எங்கும் ஜனநாக இடதுசாரிக் குரல்கள் நசுக்க்கப்பட்ட பின்பு) இயங்கத் தொடங்கிய இந்த நிலையம், 2016 டிசம்பர் 31 அன்று தனது செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக நிறுத்திக் கொண்டது.
தற்போது அந்த நிலம் மற்றும் கட்டிடங்கள் மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
1970 களின் பிற்கூறு 1980 களின் முற் கூறு பகுதிகளில் ஜேஆர் ஜெயவர்த்தன காலத்தில் இலங்கையில் அமைப்பட இருந்து அமெரிக்க தொலைத் தொடர்பு கோபுரத்துடனான நிலையத்திற்கு இந்தியாவின் இந்திரா காந்தி அரசு செய்த எதிர்ப்பை செவி மடுக்க தயாராக இல்லா சூழல் ஏற்பட்ட போது ஈழவிடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை அமைப்புக்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை இந்தியா வழங்குவதற்கான முடிவை எடுப்பதற்கு முக்கிய காரணம் ஆயிற்று எனலாம்.
இந்து சமுத்திரப் பிராந்தியம் அமைதிப் பிராந்தியமாக பேணுவதற்கு இது பெரும் அச்சுறத்தலாக அமையும் என்பதாக அன்றைய சோவியத்தின்(USSR) மிக நெருங்கி நண்பு நாடு இந்தியா கருதியது.
அன்று மிகவும் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்ட ஜேஆரின் ஐ தேசியக் கட்சி அரசின் அமெரிக் உறவு அதுவரை இலங்கையில் இல்லாது இருந்த(அகற்றப்பட்டிருந்த) இஸ்ரேலின் தூதரக அலுவலகத்தை அமெரிக்க தூதுவராலயத்தில் திறப்பதற்கு வழி வகுத்தது. இதன் மூலம் இலங்கையிற்கள் இஸ்ரேல் பின் கதவால் தன்னை புகுத்திக் கொண்டது.
இலங்கை அரசிற்கு தேவையான ஆயுதப் பயிற்சிகளை வழங்குதல் ஈழவிடுதலைப் பேராளிகளை அழித்தல் என்றான இந்தியாவுடனான உறவுள்ள அதைப்புக்களை அதில் சிறப்பாக பாலஸ்தீனம் பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்ற போரளிகளை அழித்தல் என்றாக வளர்ச்சியடைந்தது.
அது ஒரே நேரத்தில் இலங்கை அரசிற்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பயிற்சியை இஸ்ரேல் வழங்கும் நிலையையும் ஏற்படுத்திக் கொண்டது.
தனது இருப்பிற்கு கேள்விக் குறியாக்கும் பாலஸ்தீனர்களிடம் பயிற்சி பெற்றவர் என்றான ஈழவிடுதலைப் எபோராளிகளை அழித்து ஒழிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய கூறு.
இதற்கான பல தந்திரங்களை இஸ்ரேல் இலங்கை அரசு ஊடாகவும் விடுதலை அமைபில் ஒரு அமைப்பின் ஊடாகவும் ஏற்படுத்தியது.
அவையாவன இலங்கை அரசிற்கு இயக்கங்களை தமக்குள் மோதவிட்டு அவர்களை அவர்களால் அழித்து ஒருவரை மட்டும் மேலோங்க வைத்து இறுதியில் அவரையும் சாதகமான சூழலில் அழிப்பது என்பதான திட்டம் பிரதானமானது.
தமிழ் முஸ்லீம் மகள் இடையேயான சகோதரத்துவத்தை குலைக்கும் முரண்பாடுகளை செயற்கையாக உருவாக்கல் அதுதான் கிழக்கின் ஊர்காவல்படை.
இவற்றிற்கு எல்லாவகையிலும் திட்டங்களும் ஆலோசனைகளையும் இஸ்ரேல் முன்னிலையில் இருந்து செயற்படுத்த அமெரிக்கா தனது கொல்லை புறத்து ஆதரவை வழங்கியது கொழும்பில் அமைந்திருந்த அமெரிக்க தூதரகம் இஸ்ரேல் அலுவலகம் மூலம்.
இதற்கான செயல் வடிவத்தை தமிழ் தரப்பில் நிறை வேற்றியவர்கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தாம் இஸ்ரேலிடம் பயிற்சி பெறுவது பற்றி அவர்களே ‘….எந்த பேயிடமும் பிசாசிடமும் தாம் பயற்சி பெறத் தயார் என்றும் அந்தக்காலத்தில் அவர்கள் கூறினார்கள்.
இலங்கை அரசின் விருப்பமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விருப்பமும் தனது நேரடி எதிரியான பாலஸ்தீனத்தை இல்லது ஒழிப்பதற்கான திட்டங்களுக்கு இலங்கையில் செயல் வடிவத்தை தமிழ் செயல்வடிவம் கொடுத்தது விடுதலை தேசியம் என்றாக அந்த இயக்கமே.
இதற்கான சூழுரைகளை அன்றைய இலங்கை பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தினா பாராளுமன்றதில் பேசினார்.
ஹன்சாட்டில் (பாராளுமன்றப் பேச்சுப் பதிவேடு) இதற்கான பதிவுகள் உள்ளன அதற்கான செயல் வடிவத்தை ஏக போகமாக வந்தவர்கள் செய்தார்கள் இந்த போராட்டத்தில் இடதுசாரிச் சிந்தாந்தம் மேல் ஏழாதவாறு பார்த்துக் கொண்டதில் வலதுசாரி மேற்குலகம் அவரின் கைக் கூலிகள் வெற்றி வெற்றி கண்டனர்.
இறுதியில் தமது வேலைகள் முடிந்தது தமக்கு இனி தேவை இல்லை என்றாக அவர்களையும் முள்ளிவாய்காலில் புதைத்து மக்களையும் கொன்று இதற்கான கெட்ட பெயரை தான் வாங்காது அதிகம் இந்தியாவின் தலையில் போட்டனர்.
இதற்கான அவர்கள் இஸ்ரேலுடன் இணைந்து அன்றை ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் தலைவர் பத்மநாபாவைக் கொலை செய்து பின்பு அதன் பின்பு இந்தியாவின் இளம் தலைவரையும் ராஜீவ் காந்தியையும் கொலை செய்தனர். இதற்கும் அதே விடுதலைக் கழுவையும் பயன்படுத்திக் கொண்டனர்.
இலங்கையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஜனநாயக முற்போக்கு சக்திகளால் சமாதானம் என்றான நிலமைகள் ஏற்பட்டால் அது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது குழப்ங்களை கால் ஊன்றல்களை செய்ய முடியாது என்றான செயற்பாடுகளின் வெற்றியாகத்தான் அண்மையில் ஈரானின் கடற்படை வீரர்களின் கொலைகள் ஆகும்.
இவற்றிற்கான ஆதாரங்களா ‘வயர்(Wire)’ செய்தித் தொடர்பு அமைப்பு இன்று செய்திகளை வெளியிட்டு ‘….பூனைக் குட்டி வெளியில் வந்துவிட்டது….’ என்றாக சொன்னாலும் இதனைத்தான் இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து இலங்கையின் வலதுசாரி ஜே.ஆர் ரணில் வரை ஐ.தே. கட்சி அவர்களின் அருவருடிகள் செய்தார்கள் என்பதை ஈழவிடுதலை அமைப்புகளில் ஜனநாயக இடதுசாரிக் கருத்தியலை கொண்டவர்கள் அன்றே அம்பலப்படுத்தி நின்றனர்.
பூனை இன்று வெளியே வரவில்லை அன்றே வெளிவந்து அது சிங்கமாகி புலியாகி இன்று அம்பலப்பட்டு நிற்கின்றது.
இதனை மோதிரக் கையான வயர்(Wire) ஊடகத்தினால் வெளிப்படுவதினால் பலரும் இன்று ஏற்று நிற்கின்றனர்
கீழே இன்று வயர் ஊடகத்தில் வந்த செய்தியை இணைக்கின்றோம் இது எல்லாப் புள்ளிகளையும் இணைத்துப் பார்த்து ஒரு தெளிவைப் பெற உதவும் என்று நம்புகின்றோம். இவை அதிகம் 1987 ஐ மையப்படுத்தியதாக இருந்தாலும் இதற்கு முன்பு என்ன நடந்திருககும் என்பதை உய்தறிய உதவும்.
வயரில்(Wire) வந்த செய்தி:
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, 1987ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரசாரத்திற்காக இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ இடமிருந்து 10 இலட்சம் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாகக் கோரினார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் இரகசிய ஆவணங்கள் அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ‘த வயர்’ இணையத்தளம் வெளியிட்டுள்ள புலனாய்வுக் கட்டுரையில் இந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 14 ஆகிய திகதிகளில் பரிமாறப்பட்ட இரகசியத் தகவல்களின்படி, மொசாட் பிரதிநிதி ஒருவருடனான சந்திப்பின் போதே ஜே.ஆர். ஜயவர்தன இந்த நிதியைக் கோரியுள்ளார்.
அப்போது கொழும்பிலுள்ள இஸ்ரேலிய நலன்புரிப் பிரிவை மூடுமாறு அரபு நாடுகள் மற்றும் உள்ளூர் எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு பலத்த அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. ஜே.ஆரின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவது இஸ்ரேலின் மூலோபாய நலன்களுக்கு அவசியமாக இருந்ததாக அந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
1970 களில் அரபு நாடுகளின் அழுத்தத்தால் இஸ்ரேலுடனான உறவைத் துண்டித்திருந்த இலங்கை, 1984களில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தபோது மீண்டும் இரகசிய உறவைப் பேணியது.
1980களின் பிற்பகுதியில் சுமார் 30 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவத் தளபாடங்களை இஸ்ரேல் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதில் துவோரா ரக வேகப்பந்துப் படகுகள், மினி-உசி இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் இலத்திரனியல் வேலிகள் மற்றும் நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் அடங்குகின்றன.
இஸ்ரேலியப் பயிற்சியாளர்கள் ‘விவசாய ஆலோசகர்கள்'(இஸ்ரேலில் சொட்டு நிரு வவசாயம் வெற்றிகரமானது யாழ்பாணம் போன் நீர் மட்டுப்பாடாக உள்ள இடத்தையும் இது போல் செய்யலாம்.
யாழ்ப்பாணத்தவர் அதனால் இஸ்ரேல் போன்ற் ‘திறமை’யானவர்கள் என்ற புழகாங்கிதங்களுக்கு இதுவும் ஒரு காரணம்) என்ற போர்வையில் இலங்கைப் படையினருக்கு, குறிப்பாக கிழக்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.
அத்துடன், இலங்கை ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கும்(STF) இவர்கள் பயிற்சியளித்துள்ளனர். விசேட அதிரடிப்படை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோதிலும், இஸ்ரேல் தனது ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்கியுள்ளது.
ஜே.ஆர். ஜயவர்தன 10 இலட்சம் டொலர்களைக் கோரியதை ஆவணங்கள் உறுதிப்படுத்தினாலும், அந்தப் பணம் உண்மையில் வழங்கப்பட்டதா என்பதற்கான ஆதாரம் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும், எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் இஸ்ரேலியப் பிரதிநிதிகள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்படலாம் என்பதால், ஜே.ஆரின் வெற்றியை(அல்லது அவரின் சகாக்களின் வெற்றியை) இஸ்ரேல் பெரிதும் விரும்பியதாகத் தெரியவருகிறது.
இலங்கையின் மிகக் கொந்தளிப்பான காலப்பகுதியில் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவிய ஆழமான இரகசிய உறவுகளையும், அதற்குப் பின்னால் இருந்த பூகோள அரசியல் நகர்வுகளையும் இந்த ஆவணங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.