கூடவே பள்ளிச் சிறுவர்கள் 150 மேலாக உள்ளடங்கிய 500 மேற்பட்டவர்கள் இதில் கொல்லப்பட்டனர்.
இது சமகால சர்வதேச உறவுகளில் ஏற்பட்ட ஒரு பெரிய முறிவு. பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தலமை வகித்து ஓமான் இது பற்றி தனது அதிருப்த்தியை பொதுவெளியில் முன்வைத்தும் இருக்கின்றது
தகவல் தொழில் நுட்பமும் உளவுத் துறையும் கை கோர்த்து அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அயத்துல்லா காமனியின் கொலை இஸ்ரேலின் நிழல் யுத்தத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகின்றது.
இதே தொழில் நுட்பமும் உளவுத் துறையும் பிறிதொரு காலத்தில் இன்று ஏவியவர்ளையும் அவர்கள் சார்ந்த சித்தாந்தத்தையும் திருப்பி அழிப்பதற்கும் பாவிக்கப்படலாம்… மாற்றம் பெறலாம்… என்ற இயங்கியலை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.
இந்த தொழி நுட்பமும் உளவுத் தகவலும் ஆக்கத்திற்கு பதிலாக அழிவிற்கு பாவிக்கப்படும் அவலங்கள்தான் இந்த யுத்தங்களின் கொடூரம்.
இதே இஸ்ரேலின் மொசாட்டின் நாசகார வேலைகள் ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் ஜேஆரினால் இலஙi;கயிற்குள் கொண்டு வரப்பட்டதை நாம் யாவரும் அறிந்ததே.
இதே இஸ்ரேலிடமும் இல்ரேல் அழிக்துக்கட்டத் துடிக்கும் பாலத்தீனத்திடமும் ஈழ விடுதலைப் போராளிகளின் இரு வேறு தரப்பினர் பயிற்சிகள் பெற்றது ஒன்றும் இரகசியம் இல்லை.
இதில் ஈழவிடுதலைப் போராட்டம் இடது வலது என்றாக பிரிவடைந்து வலது பலம் பெற்று இறுதியில் பஸம்ம் ஆனதையும் நாம் எனது முதல் பந்தி ஒப்பீட்டிற்கு வலுச் சேர்க்க பாவிக்கின்றேன்.
ஏவுகணை யுத்தமாகவே இஸ்ரேலும் அமெரிக்காவும் யுத்தங்களை நடாத்த விரும்புகின்றனர். இங்கு ஈரானில் அதுவே அதிகம் நடைபெற வாய்ப்புகள் உண்டு.
தரை வழித் தாக்குதலாக கசாவில் நடாத்திய யுத்தத்தில் இருந்து இந்த யுத்தம் வேறுபட்டு இருக்கின்றது.
அதே போல் ரஸ்யாவிற்கு எதிராக ஏவப்பட்டு தொடர்ந்து கொண்டிருக்கும் நேட்டோவின் யுத்மும் தரையால் நடாத்தப்படும் யுத்தமாகவே நடைபெறுகின்றது.
இவ் இரு இடங்களிலும் வான்வெளி தாக்குதல்கள், ஏவுகணை என்பன தரை வழி யுத்தத்திற்கு பக்க பலம் சேர்க்கவே பாவிக்கப்படுகின்றன.
நீண்ட நாள் தயாராப்பின் அடிப்படையில் உள்ளுக்குள் இருந்து தகவல்களை துல்லியமாக வழங்கிய நிலையில்தான் காமெனியின் இருப்பிடம் 30 தொடக்கம் 60 வினாடி வரையிலான மிகக் குறுகிய நேரத்தில் அழிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக குண்டுகள் துளைக்க முடியாத நிலக் கீழ் அறையில் 100 அடி ஆழத்திற்கு ஊடுருவி குண்டுகள் வெடிப்பதற்கு முதலில் ஒரு தொகுதி குண்டுகள் துளையிட அனுப்பப்பட்டன. தொடர்ந்து அடுத்து சில வினாடிகளில் அதே துளையிற்குள் மேலும் துளையை ஆழப்படுத்த மேலும் குண்டுகளை துல்லியமாக இறக்கி 100 அடி வரை துளை இட்டு காமெனியின் இருப்பிடத்திற்கு இறுதியாக அனுபப்பட்ட குண்டுகள் அதே துளை ஊடாக அனுப்பப் பட்டிருக்கின்றன.
இந்த அனைத்துக் குண்டுகளும் அதிக சக்தி வாய்ந்தவைகள்.
இவை யாவும் மிகத்துல்லியமாக சில கணங்களிலு முடிந்துவிட்டன.
இந்த தாக்குதலின் போது அவர்கள் சுரங்கப் பாதை வழியாக நகர முன்பே எல்லாம் முடிந்துவிட்டன.
இந்த நில கீழ் அறை சீமெந்து கட்டிடம் அணுக் கதிர் இயக்கத்தைக் கூட தடுக்கும் அளவிற்கு பலமானதாக இருந்தாலும் தொன் கணக்கில் இறக்கிய வெடி குண்டுகள் துளைளை ஆழப்படுத்தலையும் இறுதியில் வெடிப்பபை ஏற்படுத்தி அவ்விடத்தில் இருந்து அனைவரையும் முடித்திருக்கின்றது.
இதனை இஸ்ரேலும் அமெரிக்காவும் கொண்டாடினாலும் ஸியா சன்னி என்று பிரிந்திருந்த முஸ்லீம் மக்கள் இணைந்து எதிர்பலைகளை உருவாக்குவதற்கு இது உறுதி செய்திருக்கின்றது.
அதன் விளைவுதான் இந்த மதப் பிரிவு வேறுபாடுகள் இன்றி இந்த கொலைகளுக்கு எதிரான எதிர்பலைகள் போராட்டங்கள்.
ஒரு கணம் அதிர்ந்து போன ஈரான் உடனே விழித்துக் கொண்டு எதிர்பார்த்தபடி வளைகுடாவின் பல இஸ்லாமிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது குண்டுகளை தொடர்ச்சியாக பொழிந்து அமெரிக்காவை ஆட்டம் காண வைத்துள்ளது.
அதே போல் இஸ்ரேலின் வான் பாதுகாப்பான அயன் டோமை மீறி இஸ்ரேலின் முக்கிய அரசுத் தலைவர்கள் நடமாடும் இடங்கள் இராணுவ இலக்குளை தாக்கியும் உள்ளது.
அன்று எட்டு ஆண்டுகள் அமெரிக்க பின்புலத்துடன் தரையால் நடைபெற்ற ஈராக்கிக் தாக்குதல்களை முறியடித்த ஈரான் இன்று இந்த வான் வெளித்தாக்குதலையும் தனியாக நின்று தாக்கு பிடிப்பது என்பது தாய் நாடு மீதான உறுதிப்பாடும் அதற்கு அவர்கள் நம்பும் இஸ்லாமும் காரணமாகி இருக்கின்றன.
எமக்குள் ஜனநாயகம் மனித உரிமை பொருளாதாரம் என்றாக பிரச்சனைகள் இருந்தாலும் அதனை நாமே தீர்த்துக் கொள்வோம் இதற்கு நீ எமக்கு நல்லது செய்வதாக கூறி என்னை ஆக்கிரமிக்க எம் தலைவரை கொல்ல நீ யார் என்றாக மக்கள் ஓரணியில் திரளுவது ஈரானுக்கு பலத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த யுத்தம் எண்ணை விநியோகப் போக்குவரத்தை செங்கடல், ஹார்முஸ் ஜலசந்தி போன்ற இடங்களில் தாமத்தை தடுப்புகளை ஏற்படுத்தும்.
இதனால் உலக அரங்கில் எண்ணையின் விலை ஏற்றமும் அதனால் ஏற்படும் பொருளாதார மந்த நிலையும் உலக மக்களின் வாழ்வை நிச்சயமாக பாதிக்கும்.
இந்த நிலமையை தமக்கு சாதகமாக்கி பணம் பண்ணும் முதலாளிகள் இந்தியாவின் அதானிவரை விரிந்து கிடக்கின்றனர்.
இஸ்ரேலின் தாக்குதலை கொலைகளை பற்றி எந்த கண்டனமும் தெரிவிக்காது வளைகுடாவில் ஈரான் தொடுத்த பதில் தாக்குதலுக்கு தனது கண்டனங்களை தெரிவித்திருக்கின்றது.
அகண்ட இந்தியா என்ற சிந்தனையும் அகண்ட இஸ்ரேல் என்ற சிந்தனையும் இங்கு கை கோர்க்க முயலுகின்றன. கூடவே இந்துத்துவா என்ற மேலாதிக்க சிந்தனையும், முஸ்லீம் வெறுப்பு சிந்தனையும் சியோனிச சிந்தனையும் இன்று கரம் கோர்ப்பதாகவே உணர முடிகின்றது.
இந்திய மக்கள் இதனை முறியடித்தாக வேண்டும்
மனிதர்களின் வழங்களுக்கும் வலுகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் பாலஸ்தீனம் இன்று வரை தாக்கு பிடித்து வாழ்வதைப் போல்..
தென் அமெரிக்க மத்திய அமெரிக்க தென் ஆபிரிக்க நாடுகள் ஏகாதிபத்திய சியோனிச எதிர்பில் இன்று வரை தன்மானத்துடன் தாக்குப் படித்து வாழ்வது போல் ஈரானும் தன்னை இவர்களுடன் இணைத்து தாக்குப்பிடிக்கும் அதுவரை இந்த யுத்தம் தொடரத்தான் போகின்றது.