காசாவின் இனவழிப்பு: உண்மைக் காரணி

Jared Kushner-ன் “Project Sunrise” அல்லது காசா கடற்கரை மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பின்னால் உள்ள பொருளாதார நோக்கங்களுக்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே ஒரு வலுவான அடித்தளம் இடப்பட்டுவிட்டது.

அந்த திட்டத்தின் பெயர் “பென் குரியன் கால்வாய் ” (Ben Gurion Canal Project) என்ற இஸ்ரேலின் நீண்டகாலக் கனவுத் திட்டம்.

தற்போது ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் மிக முக்கியமான கடல் வழிப்பாதை எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் ஆகும்.

உலக வர்த்தகத்தில் சுமார் 12% முதல் 30% வரை இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது.

எகிப்து இதன் மூலம் ஆண்டுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை வருமானமாகப் பெறுகிறது.

மேற்கத்திய நாடுகளும் இஸ்ரேலும் ஒரு மாற்றுப் பாதையை உருவாக்குவதன் மூலம் எகிப்தின் இந்த ஒற்றை அதிகாரத்தை (Monopoly) உடைக்க விரும்பினர்.

1960-களில் அமெரிக்காவின் Lawrence Livermore National Laboratory ஒரு ரகசியத் திட்டத்தை முன்மொழிந்தது.

எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ள சூயஸ் கால்வாய்க்கு மாற்றாக, இஸ்ரேலில் ஒரு புதிய கால்வாயை உருவாக்குவதே இதன் நோக்கம்.
1960-களில் முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம், இந்தக் கால்வாய் செங்கடலின் ஈலாட் (Eilat) முனையிலிருந்து தொடங்கி, இஸ்ரேலின் தெற்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, இறுதியில் மத்திய தரைக்கடலில் கலக்க வேண்டும் என்பதே.

இங்குதான் சிக்கல் எழுகின்றன.

இந்தக் கால்வாய் கடலில் கலக்கும் புள்ளி, புவியியல் ரீதியாக காசா முனைக்கு (Northern Gaza Strip) மிக அருகாமையில் அமைகிறது.

ஒரு சர்வதேச வர்த்தகப் பாதையை உருவாக்க பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்படும்போது, அதன் நுழைவு வாயிலில் “ஹமாஸ்” போன்ற ஆயுதக் குழுக்களோ அல்லது இஸ்ரேலுக்கு எதிரான மக்களோ இருப்பதை இஸ்ரேலும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளும் விரும்புவதில்லை.

ஹமாஸ் இருக்கும் வரை இத்திட்டத்தை நிம்மதியாக செயற்படுத்த முடியாது.

இந்தக் கால்வாயின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமானால், காசா பகுதியை இஸ்ரேல் தனது முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் அல்லது அங்கிருக்கும் மக்களை அப்புறப்படுத்த வேண்டும்.

பென் குரியன் கால்வாய் வந்து சேரும் அந்தப் பகுதியில் ஒரு மிகப்பெரிய பொருளாதார மையத்தை (Economic Hub) உருவாக்குவதே “Project Sunrise” போன்ற நவீன திட்டங்களின் மறைமுக நோக்கம்.

இதற்காகவே காசாவின் வடக்கு பகுதி தரைமட்டமாக்கப்பட்டு, மக்கள் தெற்கு நோக்கி விரட்டப்படுகிறார்கள்

கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட காசாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த AI கண்காணிப்பு நகரத்தின் ( AI smart City) மூலம் அனைவரின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும்.

பில்லியன் கணக்கில் வருவாய் ஈட்டித்தரப்போகும் கால்வாயின் பாதுகாப்பு மிகவும் தொழில்நுட்பரீதியில் உச்சத்தில் இருக்கப் போகின்றது.

இத்தனை ஆயிரம் உயிர்களை பலிகொடுத்து ஏன் இந்த கால்வாய்த் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எகிப்தின் சூயஸ் கால்வாயை மட்டுமே சார்ந்து இருப்பது ஒரு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது

இஸ்ரேல் வழியாக ஒரு மாற்றுப் பாதை அமைவது மேற்கத்திய நாடுகளின் எரிசக்தி மற்றும் வர்த்தகப் பாதுகாப்பை உறுதி செய்யும்.

இது மத்திய கிழக்கில் இஸ்ரேலின் பிடியை மேலும் வலுப்படுத்தும் மற்றும் அமெரிக்காவின் செல்வாக்கை நிலைநிறுத்தும்.

இஸ்ரேல் மற்றும் அதன் மேற்கத்திய பங்காளிகளின் பார்வையில் காசா ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கான மேலும் 3 காரணங்கள் உள்ளன.

காசா கடற்கரையில் கண்டறியப்பட்ட பில்லியன் டாலர் மதிப்புள்ள இயற்கை எரிவாயு வயல்கள், இந்தக் கால்வாய் திட்டத்திற்குத் தேவையான எரிசக்தியை வழங்கக்கூடியவை. காசா இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் மட்டுமே இந்த எரிவாயுவை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியும்.

ஒருவேளை இந்தக் கால்வாய் வழியாக உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்கள் செல்லத் தொடங்கினால், காசாவில் இருந்து ஏவப்படும் ஒரு சிறிய ஏவுகணை கூட ஒட்டுமொத்த உலக வர்த்தகத்தையும் முடக்கிவிடும். எனவே, கால்வாயின் பாதுகாப்பிற்காக காசாவை “முழுமையாகச் சுத்தப்படுத்த” (Complete Clearance) அவர்கள் விரும்புகிறார்கள்.

இந்தக் கால்வாய் அமைந்தால், எகிப்தும் ஜோர்டானும் தங்கள் முக்கியத்துவத்தை இழக்கும். இஸ்ரேல் இப்பகுதியின் ஒரே பொருளாதாரப் பேரரசாக மாறும்.

இந்த பென்குரியன் கால்வாய் திட்டத்தில் மேலதிகமான ஒரு வீபீரிதமான மற்றும் சுவாரஸ்ய தகவல் ஒன்று உள்ளது.

பென் குரியன் கால்வாயைத் தோண்டுவது என்பது சாதாரண காரியம் அல்ல. நெகேவ் பாலைவனத்தின் கரடுமுரடான மலைப்பகுதிகள் மற்றும் கடினமான பாறைகளைத் தோண்டுவதற்குப் பல தசாப்தங்கள் ஆகும். இதைக் குறுக்கு வழியில் முடிக்க அமெரிக்கா ஒரு விபரீதமான திட்டத்தைத் தீட்டியது.

சுமார் 160 மைல் நீளமுள்ள இந்தக் கால்வாயைத் தோண்டுவதற்கு, நிலத்தடியில் சுமார் 520 அணு குண்டுகளை (Nuclear Explosives) வெடிக்கச் செய்து, ஒரே நேரத்தில் பள்ளங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டது.

பாரம்பரிய இயந்திரங்களைப் பயன்படுத்தித் தோண்டுவதற்கு ஆகும் செலவை விட, அணு வெடிப்புகளைப் பயன்படுத்துவது பல மடங்கு மலிவானது என அமெரிக்க அணுசக்தி ஆணையம் கருதியது.

இந்தக் கால்வாய் காசா மற்றும் அரபு நாடுகளுக்கு மிக அருகில் அமைவதால், அணு வெடிப்பினால் ஏற்படும் கதிர்வீச்சு (Radioactivity) பற்றி அந்தத் திட்டம் பெரிய அளவில் கவலைப்படவில்லை.

குஷ்னரின் Project Sunrise என்பது ஒரு நவீன முலாம் பூசப்பட்ட திட்டம் மட்டுமே.

ஆனால் அதன் வேர்கள் 1960-களின் Ben Gurion Canal திட்டத்தில் ஆழமாகப் புதைந்துள்ளன.

இன்று காசாவில் மக்கள் கொல்லப்படுவதும், அவர்கள் தெற்கு நோக்கி விரட்டப்படுவதும் ஒரு பெரும் வர்த்தகப் பாதைக்காகப் போடப்படும் அத்திவாரமாக பார்க்கப் படுகின்றது.

காசாவை ஒரு வெற்று நிலமாக மாற்றினால் மட்டுமே, அங்கு பில்லியன் கணக்கான டாலர் முதலீட்டில் இந்த “மாற்று சூயஸ் கால்வாயை” உருவாக்க முடியும் என்பதே கசப்பான உண்மை.

Leave a Reply