தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி

இதுமிகப் பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள், ஆய்வாளர்கள், அரசியல் நோக்கர்களின் கணிப்புகளை, எதிர்பார்ப்பை, பொய்யாக்கி மதச்சார்பு அற்ற முற்போக்கு கூட்டணியின் கிடைக்காத வெற்றியாக முடிந்துள்ளது.

தேர்தல் ‘தீர்ப்பு’புதிய ஒருவர் ‘…நான் அவனும் இல்லை இவனும் இல்லை…’ என்றாக

‘….தமிழ் தேசியம் திராவிட சித்தாந்தம்…’ என்றாக தனது அரசியல் பிரகடனத்தை செய்தவர் முன்னிலை பெற்றுள்ளார்.

கூடவே ‘…அரசியல் எதிரி இவர் கொள்கை எதிரி அவர்…’ என்றாக இரு வேறு வேறு சிந்தாந்தங்களில் பயணிப்பவர்களை சுட்டிக் காட்டியவர்.

‘பாசிசத்திற்கு பாயாசம்’ என்றாக விளக்கம் கொடுத்தவர்.

அது பலருக்கு இனிப்பான செய்தியும் ஆகியது.

பெரும்பாலும் வீட்டிற்குள் முடங்கி குளிருட்டப்பட்ட அறையினுள் ஓய்வில் இருந்து கொண்டு வெளியே வருவது என்றால் தனி விமானம் அன்றே வீடு திரும்புதல் என்றாக மக்கள் பணி செய்ய வந்த ஒருவரை நம்பி மக்கள் தமது வாக்குகளை அதிகமாக வழங்கி இருக்கின்றார்கள்.

அது தினமும் வெயிலில் கருகும் ஆட்டோ ஓட்டுனரைக் கூட சட்டசபை உறுப்பினராக்கிய ‘ஜனநாயகன்’ இவர் என்ற விம்பத்தைக் கொடுத்தும் இருக்கின்றது.

இளைஞர்களாக(GenZ) 10 தொடக்கம் 15 வீதமாக உள்ளவர்கள் சமூக விடங்களில் அக்கறை அதிகம் இல்லாது தனி உடமையாக இன்று முன்னிலை பெற்றுவரும் புதிய வாழ்க்கை ஒழுங்கிற்குள் உட்பட்ட சிந்தனையின் ஆதிக்கத்தில் உள்ள தலைமுறையினர் ஆதரித்த நிலையில் ஆரம்பமானது இந்த சினிமா என்றும் பால் ஊத்தும் அரசியல் பிரவேசம்.

இவர்களின் இந்த தெளிவான புரிதல் அற்ற நிலை பலராலும் உணரப்பட்டாலும் இவர்களும் தேசத்தின் மக்கள் எதிர்காலச் சந்ததியினர் அவர்களின் பார்வை முன்னேறம் அடைய வேண்டும் சிறப்பாக சமூக முன்னேற்றம் என்பது தனி நபர் முன்னேற்றத்தை விட முதன்மையானது என்பதாக… எனவே அவர்களை சமூக அரசியல் புரிதலில் ஆழப்படுத்தல் அவசியமாகின்றது என்பதை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த தேர்தலின் பின்பும்கூடவே எல்லா நாடுகளிலும் வாக்காளர்களில் மூன்று பிரிவினராக பிரிந்திருந்து வாக்களிக்கும் மனிநிலையிலேயே காணப்படுவர். தேர்தல் நாள் நெருங்க இதுவரை எந்த கட்சிலும் சார்ந்திராத அல்லது எந்த சித்தாந்தம் கொள்கையிலும் அதிகம் சார்ந்திராது இறுதி நாட்களில் மற்றைய இரு பிரிவினரில் யாருக்கு வாக்களிப்பது என்று தீரமானக்கும் பிரிவினர் இந்தத் தேர்தல் முடிவில் தமது அதிக செல்வாக்கை செலுத்தி உள்ளனர்.

இந்த பிரிவினர் பெரும்பாலும் வழமையை விட மிக அதிகமாக(20 சதிவிகிதத்திற்கு மேல்) இந்தத் தேர்தலில் தவேக இற்கு வாக்களித்து இருப்பதே மொத்தமாக 30 சதிவிகிதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை மாநிலம் முழுவதும் சராசரியாக பெறுவதற்கு காரணமாகி இருக்கின்றது.

தேர்தல் வெற்றியை எடுக்கும் இந்த மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்களின் வாக்குளில் பெரும்பாலானவை தவெக இற்கு வழமையை விட கிடைத்திருப்பதற்கு பின்னால் இருக்கும் இந்தியக் குடும்பங்களுக்குள் நிலவும் உறவு அதிக செல்வாக்கு செலுத்திய இருப்பதாக உணரப்படுகின்றது.

அது எல்லா வீட்டிற்குள்ளும் சினிமா நடிகனாக உட்கார்ந்து இருக்கும் ‘உச்ச நடிகர்’ அவரை ஆதரித்த இளசுகள், குழந்தைகள் தமது உறவுகளான தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என்றாக ‘…இம்முறை விஜய் அண்ணாவிற்கு… அங்கிளுக்கு… போடுங்கோ….’ என்பதில் உள்ள உறவை மறுக்க முடியாத இரத்த உறவுகள் இம்முறை பிள்ளைக்காக…. பேரப்பிள்களுக்காக போடுவம் என்றான வாக்குகள் நிறைவே வேலை செய்திருக்கின்றது.

தேர்தல் அறிகையில் என்ன கூறியிருக்கின்றது என்பது சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனத்தை அதிகம் ஆழமின்றி வாசித்து ஒப்புவிக்கும் அளவிற்கு அப்பால் புரிந்திருப்பாரா என்பதை இனி வரும் ஆட்சி நாட்கள் சொல்லி நிற்கும்.

இதில்தான் சினிமா மூலம் மக்களைச் சென்றடைந்த எம்ஜிஆரிடம் இருந்து விஜய் வேறுபட்டு நிற்கின்றார்…. எம்ஜிஆர் பட்டுக் கோட்டையார் கவிகளை… பாடல்களை… கலைஞர் எழுதியதை… அண்ணா பேசியதை புரிந்து கொண்டு செயற்பட முற்பட்ட மக்கள் திலகம்.

இவர் இளைய தளபதி …: குடும்ப உறவை …’அது வேர்த் இல்லை…’ என்று பகிரங்கமாக மேடையில் கூறி… நாம் ஏன் பொண்டாட்டியாகக் கூட வருவோம் என்பதை கூற வைத்த ‘நெறியியலாளர்’

பெரியாரின் சமூக நீதி, பகுத்தறிவு, பெண்விடுதலை, இடதுசாரி, ஜனநாயகம் என்றான விடயங்களை ‘…பார்பனிய கடப்பாறையைக் கொண்டு திராவிட சித்தாந்தத்தை உடைபேன்…’ என்று சனாதனத்தின் பின்புலத்தால் எய்தப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தி வாய் வீச்சு ‘திராவிடக் கட்சி’களை புறம் தள்ளி கூடவே ஒரு அயற்சியால் இதற்கு எதிரான திராவிடக் கட்சிகள் இல்லாத ஆட்சி ஒன்றை உருவாக்கிய சனாதனத்தின் தற்காலிக வெற்றியாக தமிழ் நாட்டுத் தேர்தல் உணரப்படுகின்றது.

உண்மையில் சனாதனக் கருத்தியலை திராவிட சித்தாந்தற்கு எதிரான விடயத்திற்கு ஏவுவதற்கு செயற்வடிவம் கொடுத்ததே ஆர்எஸ்எஸ் இன் கைப்புள்ளைதான்.

இதற்கு அவர் விவசாயச் சின்னத்தையும் புலிக் கொடியையும் கையில் எடுத்தார்இவரை வைத்து ஆட்சி அமைக்க முடியாத ‘தமிழர்’ பற்று (குறும் தேசியவாதம்) தமழ் நாட்டில் வாழும் எனைய மொழி வழி வந்த தமிழ் நாட்டு மக்களின் வாக்கைப் பெறமுடியாதுள்ளது என்பதை சனாதன ‘சோசல் எஞ்சினியறிங்’ உணர்ந்து களத்திற்கு கொண்டவரப்பட்டவரா தவெக கட்சியினர் என்பதை இனிவரும் காலங்கள் அவர்களின் செயற்பாடுகள் பதில் கூறி நிற்கும்…?

இதற்கு விஜய் இன் அரசியல் ஆலோசகர்களாக செயற்படும் செங்கோட்டையின் ஆரம்பித்து நிர்மல் குமார் ஆதவ் அர்சுனா என்பவர்கள், என்றானவர்களின் சித்தாந்த அரசியல் பின்புலம் நாம் கூறுவதை உண்மையாக்குவதாகவே இருக்கும்.

இதனை மீறி அறுதிப் பெரும்பான்மை பெறாத ஆட்சியைத் தொடர ஆதரவு கொடுக்கும் நிலையில் இருப்பவர்களின் செயற்பாடுகள் அமையுமா என்பது கேள்விகளாகி உள்ளது.

இதற்கு மாறாக தமது கருத்தியலை ஏற்றும் இரு மொழி கொள்கையும் மதவெறுப்பு செயற்பாடும் சிறுபான்மை மக்கள் மீதான வன்மம் மாநில உரிமைகள் சுயாட்சிகளை மறுதலிப்பவர்கள் ஆதரித்தால் ஆட்சி தொடரும்.

இல்லையே ஆட்சி சில காலத்தில் தோற்கடிகப்படும் மகாராஸ்டா போல்.இதற்கான சாத்தியங்களே அதிகம் உண்டு பார்போம் மக்களின் தீர்பு எவ்வாறு மகேசனித் தீர்பாக அமைகின்றதா அல்லது ராமனின் தீர்பாக அமைகின்றதா என்று

ஜனநாயகம் தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் தொடர்ந்து மேலோங்குமா என்றுஇலத்திரனியல் வாக்கு இயந்திரம் வாக்காளர்களின் எண்ணிக்கை யில் சித்து சீர்திருத்தம், தேர்தல் ஆணையாளர் போன்ற பலவற்றின் தமதுக்குத் தேவையான அளவிற்கான குழபங்கள் இத்தத் தேர்தல் வெற்றியை தீர்மானித்து இருந்திருகின்றன என்பது வல்லுனர்கள் கூறும் கூற்றை நிராகரிக்க முடியவில்லை.

அது முன்னாள் முதல் அமைசர் மு. க. ஸ்டாலின் தோல்வியில் அவருக்கு வாக்கு செலுத்திய மக்களின் சாட்சிகளுடன் ஒத்துத்தான் போகின்றது.

இந்தியா முழுவதற்குமான பாசிச சனாதனத்தின் கரம் தற்போதும் வலுவாகத்தான் உள்ளதா என்பதை இனிவரும் ஆட்சிக் காலம் நிறுவி நிற்குமா இல்லையா என்பது இனிவரும் நாட்களின் முக்கிய செய்திகள் ஆகும்.

இது தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகளுக்கு அப்பால் சிறப்பாக மேற்கு வங்கத்திற்கும் பொருந்தித்தான் உள்ளது

Leave a Reply