நேட்டோவில் புதிய நாடுகளின் இணைப்பு புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்துமா…?

இன்று அது 1340 கிலோ மீற்றர் தரை வழியேயான ரஷ்யாவிற்கு எதிரான படை நிறுத்தலை பின்லாந்தில் ஏற்படுத்த வழி வகிக்கும் பின்லாந்து நேட்டோவில் இணைதல் என்றாகி இடையறாத யுத்தங்களை நேட்டோ ஏற்படுத்தியிருக்கின்றது.

இதற்கான வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம்….

சோசலிச சோவியத் யூனியனினதும் அதன் தோழமை நாடுகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு, உடன்பாடான செயற்பாடுகளுக்காக 1955 இல் உருவாக்கப்பட்டது வார்சோ அமைப்பு.

இது சோவியத்தின் தனித்தனி நாடுகளாக பிரிவடைந்த 1989 இல் இதன் தேவைகள் இல்லாது…? போனதால் ஜுலை 01, 1991 இல் கலைக்கப்பட்டதே வரலாறு.

சோவியத்துடனான பனிப் போரைச் சமாளிக்க… அதனைத் தொடர்ந்து இந்த வார்சோ அமைப்பிற்கு எதிராக தம்மை பாதுகாத்துக் கொள்ள ஒத்துழைப்புகளை மேற்கொள்வதற்காக ஏப்ரல் 04 ,1949 உருவாக்கப்பட்டு செயற்படுவதாக நேட்டோ அமைப்பு தன்னை பிரகடனப்படுத்தி உருவானது.
நேட்டோ என்ற வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு. இது 30 உறுப்பு நாடுகளான 28 ஐரோப்பிய மற்றும் இரண்டு வட அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான ஒரு அரசுகளுக்கிடையேயான இராணுவக் கூட்டணியாகும்.

நேட்டோ என்பது ஒரு கூட்டு பாதுகாப்பு அமைப்பு என்று தன்னை பிரகடனப்படுத்துகின்றது.

அதன் சுதந்திர உறுப்பு நாடுகள் மூன்றாம் தரப்பினரின் தாக்குதல்களுக்கு எதிராக ஒருவரையொருவர் பாதுகாக்க உருவாக்கப்பட்டதாக தன்னை பிரகடனப்படுத்தியிருந்தாலும்

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னரும் இந்த கூட்டணி நீடித்து மற்றும் பால்கன், மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் ஆபிரிக்காவில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

1989 இன் சோவியத் யூனியன் ரஷ்யா என்ற நாடாகவும், இன்னபிற நாடுகளாகவும் தனித்தனியாக சென்ற பின்பு நேட்டோவின் தேவை இல்லாமல் போனது. அது கலைக்கப்பட வேண்டும் என்பதே அன்றைய அமெரிக்க தரப்பிற்கும் சோவியத் தரப்பிற்கும் ஏற்பட்ட உடன்பாடு.
ஆனால் சோவியத்தின் உடைவை உறுதிப்படுத்திய அமெக்ரி;க்க முதலாளித்வம் நேட்டோவை கலைக்கவில்லை மாறாக அதனை தொடர்ந்தும் பேணி வருகின்றது.

சோசலிசம் என்ற கருத்தியல் மீதான் பயம் எப்போதும் இனியும் அமெரிக்காவிற்கும் அது சார்ந்த முதலாளித்துவத்திற்கும் எப்போதும் இருந்து கொணடு இருப்பதினால் உலக மக்களை ஒடுக்கி ஆள இந்த அமைப்பை தனக்குள் கலைக்காது வைத்திருக்கின்றது இன்று வரை.

மனித குல வரலாற்றின் அடிப்படையில் ஆதிப் பொதுவுடமை சமூதாயத்தில் ஆரம்பித்து முதலாளித்துவம் என்ற உச்சக் கட்ட உழைப்புச் சுரண்டல் என்ற சமூக அமைப்பு ஏற்பட்டு அது இறுதியல் கம்யூனிச சமூகமாக மாற்றம் பெறும் என்பது சமூக விஞ்ஞானம் இயங்கியல்.
இந்த முதலாளித்துவத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் சோசலிச கட்டுமானம் உருவாகும் என்பதை சமூக விஞ்ஞானம் நிறுவியுள்ளது.

இதனை முதலாளித்துவமும் நன்கு அறியும். தனது சுரண்டல் மூலம் பிறனின் உழைப்பை சுரண்டி சொகுசாக வாழும் இந்த முதலாளித்துவம் தனது வாழ் நாளைக் எவ்வளவு முடியுமோ அவ்வளவு காலத்திற்கு இழுத்துச் சென்று தானே வெட்டிய சவக் குழியில் தன்னை புதைத்துக் கொள்ளும்.

அதுவரை தனக்கான இருப்பை தக்கவைக்க காலத்தை இழுத்தடிக்கடிவே நேட்டோ என்ற அமைப்பின் இருப்பும் அதன் விரிவாக்கமும்… போர்களும் ஆகும்.

உக்ரேனின் நேட்டோ உடனான இணைவு என்பதுவும் அது சார்பாக ரஷ்யாவின் எல்லைப் புறத்தில் அதனை சுற்றி வளைப்பதாக அமைந்து செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வாறு செயற்படுவது சோவியத் உடைவின் போது அதனுடன் முன்பு ஒன்றாக இணைந்திருந்த நாடுகள் எக்காரணம் கொண்டும் நேட்டோவிலோ அதுசார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்பதை மீறிய ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்த செயற்பாடுகளை உக்ரேன் முன்னெடுக்க முற்பட்டதற்கு எதிர்வினையாகவே ரஷ்யா தனது படைகளை உக்ரேனுக்குள் உள்ளே அனுப்பியது.

நேரடியாக ரஷ்ய்hவுடன் முன்னரங்கில் செயற்பட திராணி அற்ற அமெரிக்காவும் அதன் நேட்டோ நாடுகளும் உக்ரேனை முன்னிறுத்தி ஆயுதம, நிதி, இராணுவ ஆலோசனை, உயர்மட்ட இராணுவ அதிகாரிகளின் ஆலோசனை, நேரடிச் செயற்பாடுகளாக விரிந்து சென்ற ரஷ்யா, உக்ரேன் யுத்தம் உண்மையில் ரஷ்யா நேட்டோ நாடுகளுக்கு இடையிலான யுத்தமாகவே நடைபெறுகின்றது.

இதன் ஓரு அங்கமாக மேலும் நாடுகளை நேட்டோவில் அதுவும் ரஷ்யாவின் எல்லையில் உள்ள அல்லது அதற்கு அருகாமையில் ரஷ்யாவை தாக்கி அழிப்பதற்குரிய இலக்குகளாக உள்ள நாடுகளை இதில் அவசரம் அவசரமாக இணைக்கும் செய்றபாடுகளில் அண்மையில் பின்லாந்தை நேட்டோ இல் இணைத்துள்ளது.

இதனை விட வேகமாக சுவீடனை இதில் இணைப்பதற்கு முயன்றும் வருகின்றது.

பின்லாந்து சுவீடன் போன்றநாடுகளுடன் சோவியத் யூனியன், ரஷ்யா போன்ற நாடுகள் 1800 கள், 1900 களில் யுத்தங்களும் சமாதானங்களும் ஒப்பந்தங்களுமாக இருந்து வருவதே வரலாறு இது பற்றிய விரிவான வரலாற்றிற்குள் தற்போது போகவிரும்பவில்லை. (இதனை தங்களின் கருத்திடலின் அடிப்படையில் தனியாக எழுதலாம் என்றுள்ளேன்)

ஆனால் சோவியத்தின் கட்டுப்பாட்டிற்குள் யுத்தங்கள் மூலம் வந்த அல்லது வருவதற்குரிய வாய்ப்புக்களை; எற்பட்ட போது எல்லாம் சோவியத், ரஷ்யா இந்த இரு நாடுகளுடனும் சமான ஒப்பந்தம் எழுதி இனி தங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறத்தலான எந்த செயற்பாடுகளில் ஈடுபடமாட்டோம் எதிர்காலத்தில்….

கூடவே அவ்வாறான செயற்பாடுகளை அன்று பிரிதானியாவுடன் தற்போது அமெரிக்கா போன்ற நாடுகள் எமது நாட்டில் இராணுவத் தளங்களை அமைக்க அனுமதிக்கமாட்டோம் என்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டே இந்த இரு பால்டிக் அல்லது ஸ்கண்டினேவியன் நாடுகள் சமதானமாகவும் பெயர் சொல்லும் அளவிற்கு இதுவரை உலகத்தில் தமது வாழ்வை நகர்த்தியும் வந்தனர்.

ஆனால் இன்று எல்லாவற்றையும் கடாசிவிட்டு அமெரிக்காவின் சொல்லை நம்பி நேட்டோவுடன் இணைவது சார்பில்லாத நாடாக இல்லாது ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ யுத்தத்தில் இணைவது பாரிய எதிர் வளைவுகளை உலகத்தில் ஏற்படுத்தப் போகின்றது.

இதன் அடிப்படையில்தான் தற்போதைய பின்லாந்தின் இணைவும்….
புதிதாக அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் தமது இராணுவ நிலைகளை 1380 கிலோ மீற்றர் நீளத்திற்கு எல்லையில் ரஷ்யாவை நோக்கி வைக்கவும் போகின்றன.

கூடவே சுவீடன் உம் இணையும் (இதற்கு ஹங்கேரி துருக்கி தமது எதிர்பை தெரிவிக்கும் நிலையில்) பட்சத்தில் உலகிற்கு பொதுவான கடல் பயணத்திற்கான பால்டிக் கடல் பிரதேசத்தில் ரஷ்யாவின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பெரிதும் உதவப் போகின்றது.

அமெரிக்காவின் பார்வையில் சுவீடன் தரையால் நேரடியாக ரஷ்யா இணைப்பைக் கொண்டிராவிட்டாலும் ரஷய்யாவின கடல் பயணத்தை தடுக்கும் கடலின் ஆதிக்கத்தை சுவீடன் மூலம் ஏற்படுத்துவதில் காணும் அக்கறை சுவீடனையும் இந்த நேட்டோ நாடுகள் பட்டியிலில் இணைககவே முயலும்.

பால்டிக் கடலின்(Baltic) ரஷ்யா நாட்டுப் பக்கம் 6 மாதம் உறை பனியாகவும் சுவீடன் நாட்டுப்பக்கம் 3 மாதங்கள் மட்டும் உறைபனியாக இருக்கும் சாதகங்களை அமெரிக்கா தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முனையும்.
இதனால் அமெரிக்கா சுவீடனை எப்பாடுபட்டாவது நேட்டோவில் இணைப்பதற்கு முழமூச்சாக செயற்படும்.

அவ்வாறு இணைதல் என்பது நீர் மூழ்கிக் கப்பல் தொழில் நுட்பத்தில் உலகில் உயர் நிலையில் இருக்கும் ரஷ்யாவின் செயற்பாடுகள் பாரிய பின்னடைவுகளைச் சந்திக்கலாம்.

இந்த துறைமுக தீவு நகரில் நேட்டோவின் இராணுவத் தளங்கள் எற்கனவே இருக்கின்றன.

அதிலும் சிறப்பாக சுவீடன் இன் கொற்லான்ட்(Gotland) தீவுப்பகுதியில் இருக்கும் பால்டிக் கடற்பயணங்களின் கட்டுப்பாடு இணைப்புச் செயற்பாடுகளின் தளம் ரஷ்யாவின் இரகசிய செயற்பாடுகளை இடையூறு செய்யும் என்பது பிரதான இடத்தையும் பிடிக்கின்றது.

இந்த புதிய நாடுகளை நேட்டோவில் இணைப்பது சமாதானமாக வாழும் இந்த ஷ்கன்டிநேவியன், பால்டிக் நாடுகளில் இனிவரும் காலத்தில் அமைதியின்மையும் சுபீட்சமான வாழ்வுகளையும் இல்லாமல் செய்யும்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னரான கடந்த அரை நூற்றாண்டு காலமாக அமெரிக்காவும் அதன் நேசபடைகளும் புகுந்த எந்த நாடும் உருப்பட்டதாகவும் சிறப்பாக வாழுவதாக வரலாறு இல்லை.

மாறாக புகையும் சதையும் இரத்தமும் வறுமையுமாகவே கடக்கின்ற இந்த நாடுகள்.

அது ஆப்கானிஸ்தானில் ஆரம்பித்து சோமாலியா, ஈராக், லிபியா என்று பெரிய பெயர் பட்டியலை நாம் முன்வைக்க முடியும்.

பின்லாந்தின் இணைவும் சுவீடனை இணைக்கு முயலும் செயற்பாடும் உலக ஒழுங்கில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி சமாதானத்தில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

ஏற்கனேவே பொருளாதாரத்தில் பெருந்தொற்றல் தள்ளாடும் உலகம் இன்னும் அதிகம் தள்ளாடப் போகின்றது.

உலகத் தலைவர்களே மக்களை யோசியுங்கள் மாறாக கருவிகளை விற்பனை செய்வதையும், உற்பத்தி செய்த கறள் பிடித்த கருவிகளை விற்று காசாக்குவதையும், இதனைப் பாவித்து அழிவுகளை ஏற்படுத்துதல் பின்பு கட்டுமானம் என்று பணம் பண்ணுவதையும் நிறுத்துங்கள்.

இந்த யுத்தங்களில் மக்களின் உயிர்கள் அது அப்பாவி மக்களாக இருக்கலாம் ஏன் இராணுவமாகவும் கொன்றொழ்ப்பதில் இருந்து விடுபட உதவுகள்.

(The Warsaw Pact (WP),formally the Treaty of Friendship, Cooperation and Mutual Assistance, was a collective defense treaty signed in Warsaw, Poland, between the Soviet Union and seven other Eastern Bloc socialist republics of Central and Eastern Europe in May 1955, during the Cold War. (Albania withdrew in 1968).)
(The North Atlantic Treaty Organization (NATO is an intergovernmental military alliance between 31 member states – 29 European and two North American. Established in the aftermath of World War II, the organization implemented the North Atlantic Treaty, signed in Washington, D.C., on 4 April 1949. NATO is a collective security system: its independent member states agree to defend each other against attacks by third parties. During the Cold War, NATO operated as a check on the perceived threat posed by the Soviet Union. The alliance remained in place after the dissolution of the Soviet Union and has been involved in military operations in the Balkans, the Middle East, South Asia, and Africa.)