தீய சக்தி என நரம்பு புடைக்க கத்திய ஒருவன் முதல்வராக ஆதரவளிக்க தன் தோழமைக் கட்சிகளுக்கு மனமுவந்து சிதந்திரமாக செயல்பட வழி சமைத்துருக்கிறார்.ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்த அவர்கள் தவிர்த்திருக்கலாம் தவிக்க விட்டிருக்க வேண்டும் .விடுங்கள் அது தனிக் கதை .
கொளத்தூரில் தோற்றது மனதுக்கு நெருடலாக நீள்கிறதுதான் ஆனாலும் சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்து மாண்பு மிகு முதல்வர் அவர்களே என்று சொல்ல காலம் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் அவர்களுக்கு ஒரு துன்பகரமான வாய்ப்பை கொடுக்காமல் தவிர்த்திருக்கிறது.
தோல்வியின் பின்னர்தான் ஸ்ராலின் எவ்வளவு நேசிக்கப்படுகிறார் என்பது தெரிகிறது கல்வியாளர்கள்,புத்தி ஜீவிகள்,வட இந்திய தென் இந்திய பத்திரிகயாளர்கள் ,தொலைக்காட்சி ஊடகங்கள் ஸ்ராலினை புகழ்ந்து தள்ளுகின்றன
தோல்வியுற்ற தருணத்தில் பொருளாதார் வளர்ச்சியில் தேசிய சராசரி ஏழு புள்ளியாக இருக்க தமிழ் நாட்டின் குறியீடு பத்து புள்ளி எண்பத்து மூன்று சதவீதமாக முதல் நிலையில் இருக்கிறது .தோல்வியிலும் ஒரு வெற்றிச் செய்தியோடுதான் உயர்ந்து நிற்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் அசர்கள்.
இருண்ட தமிழகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது திராவிட இயக்கம் அதிலும் குறிப்பாக் திராவிட முன்னேறக் கழகம்.
கடந்த ஐந்தாண்டுகளில் எவ்வளவோ விடயங்கள் நடந்தாலும் அவற்றை நாம் பட்டியலிட முடியாது அவ்வளவு செய்திருக்கிறார்கள்.
சொல்ல எவ்வளவோ இருக்கிறது
என் மனதைக் தொட்ட சில விடயங்களை மட்டும் நான் இங்கு சொல்லியாக வேண்டும்.
மாவட்டம் தோறும் பெரு நூலகங்களை அமைத்து வருவது குறிப்பாக மதுரையில் எழுந்து நிற்கும் கலைஞர் நூலகம், திருச்சியில் முடியும் தறுவாயில் உள்ள காமராஜர் நூலகம், கோயம்புத்தூரில் அமைகின்ற நூலகம் மாவட்டம் தோறும் ஆண்டு முழுவதும் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகள்.
தமிழரின் தொன்மையை உலகுக்கு சொல்லும் இரண்டு
அருங்காட்சியகங்கள்
கீழடி அருங்காட்சியகம்
பொருணை அருங்காட்சியகம்
இவற்றையெல்லாம் காணக் கண் கோடி வேண்டும்
வாழ்த்துகள் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் அவர்களே
காலம் உங்களுக்காக காத்திருக்கிறது