இலங்கை… மாலைதீவு….

அப்பலோ ஹொஸ்பிடல் உட்பட கொழும்பு தனியார் வைத்தியசாலைகளில் அதிகம் சிகிச்சை பெற்று வந்தது மாலைதீவு மக்களே. ஜோன் கொதலாவல உட்பட பல தனியார் பல்கலைக்கழகங்கள் தோரும் அதிகம் இருக்கும் சர்வதேச மாணவர்கள் மாலைதீவு மாணவர்கள்.

இலங்கையில் எப்போதும் சரிசரியாக 50000+ மாலைதீவு மக்கள் வருடாந்தம் வந்து நீண்ட காலம் தங்கி இருப்பார்கள். இதனால் இவர்கள் சராசரியாக ஒரு மாதம் தங்கி இருந்தால் கூட 250+ மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் மாலைதீவு மக்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு தந்தார்கள்.

2012 இல் இருந்து இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம் இன வெறுப்பு பிரச்சாரம் ஹலால் எதிர்ப்பு பிரச்சாரங்கள் காரணமாக மாலைதீவு மற்றும் அரபு மக்களையும் பாதித்தது. இதனால் மாலைதீவு மக்கள் கொழும்பை கைவிட்டு கேரளாவின் கொச்சின் நகரை தங்கள் பிரதான தளமாக மாற்றினார்கள்.

இடப்பற்றாக்குறை காரணமாக மாலே மக்கள் அவதிப்பட்டு இருந்த போது இலங்கையில் துறைமுக நகரம் திட்டம் சீனாவின் உதவி மற்றும் ஆலோசனை மூலம் ஆரம்பமானது இதையடுத்து சீனாவை தொடர்ப்பு கொண்டு மாலைதீவு மக்கள் ஹுல்ஹுமாலே நில மீட்பு மற்றும் மாலே ஹுல்ஹுமாலே கடல் வழி பாலம் இரண்டு திட்டங்களும் மிக மிக வெற்றிகரமான முறையில் முடித்து விட்டார்கள் இப்போது ஹுல்ஹுமாலே ஃபேஸ் 2,3 என்று தொடர்ந்து அபிவிருத்தி நடக்கிறது. மிகச் சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை சிறிய மாலைதீவு நடத்தி வருகிறது.

வேலணா விமான நிலையம் பாரிய அபிவிருத்திக்கு உள்ளானது இப்போது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விட அதிக விமான நிறுவனங்கள் 50+ மாலே நகரை இணைக்கிறது நமக்கு வருவது 35+ மாலே விமான நிலையம் 60+destination சேவை வழங்கும் நிலையில் நாம் வழங்குவது 50+ ஆக அதிலும் அவர்கள் முந்தி விட்டார்கள் எமது Total Aircraft Movements 50000+ அவர்கள் மூன்று மடங்கு 225,000+ இதில் அநேகமாகவை private jets மற்றும் seaplane ஆகும்.

ஆக அனைத்து புள்ளிவிவரங்களும் மாலே வேலணா கொழும்பு பண்டாரநாயக்கவை பின்தள்ளி வளர்ச்சி பாதையில் போகிறது மத்திய கிழக்கு அவுஸ்திரேலியா தூர கிழக்கு இடையே முக்கிய விமான நிலையமாக மலேயை மாற்றும் விஷன் அவர்களிடம் இருக்கிறது.
கொழும்பின் அமைவிடம் காரணமாக இலங்கை மாலைதீவின் பிரதான இணைப்பு தளமாக இருந்திருக்கலாம்.

மாலைதீவு மக்களை கவரும் வகையில் இலங்கை கொள்கை வகுப்பு செய்திருக்க வேண்டும்.

விசா இல்லாமல் இருக்கும் வாய்ப்பு உள்நாட்டு மக்களுக்கு வழங்கும் டிக்கெட் விலை நாம் அவர்களை வரவேற்று இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கொழும்பு விமான நிலையம் சிறீலங்கன் ஒரு போதும் நட்டமடைய நேராது ஆனால் நாம் இனவாதம் மதவாதம் காரணமாக முஸ்லிம் வெறுப்பை உமிழ்ந்து அவர்களை விரட்டி விட்டோம்.

அவர்களை மட்டுமல்ல அதிக அளவில் பணத்தை வீசி செலவழிக்கும் அராபிய உல்லாசப் பயணிகள் ஹலால் வெறுப்பு பிரச்சாரம் மூலம் விரட்டி விட்டோம். இலங்கையில் சராசரி உல்லாசப் பயணிகள் செலவு 180 டொலரில் இருந்து 130 வரை குறைந்ததாக அங்கலாய்த்து வருகிறார்கள் இதற்கான காரணம் அராபிய மற்றும் மாலைதீவு மூலம் கிடைத்த வருவாய் இழப்புதான்.

அதைவிட அதிகமான உலகின் 3 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ” ஹலால் மார்க்கட்” நுழையும் வாய்ப்பை இலங்கை வணிகர்கள் மற்றும் விவசாயிகள் இழந்தார்கள்.இலங்கையின் மத்திய கிழக்கு அண்மைய அமைவிடம் மற்றும் சனத்தொகை விகிதாசார அடிப்படையில் இதில் வருடாந்தம் இதில் நாம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பங்கையாவது பெற வேண்டும்.

இந்த வெறுப்பு பிரச்சாரத்தின் பிரதான முகவர் ஞானசார அவருக்கு திலந்த விதானகே போன்ற பலர் பெக் என்டில் இருந்து வழிநடத்தினார்கள் அவர்களில் ஒருவர் தான் இப்போது கல்வி சீர்திருத்தம் எதிர்ப்பு பிராதான சூத்திரதாரி உலப்பனையார்.

இவர்கள் வெறுப்பு பிரச்சாரம் காரணமாக இலங்கை சராசரியாக நேரடியாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை முஸ்லிம் சந்தையில் இருந்து இழந்தது கிட்டத்தட்ட இது 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் விட அதிகமானது. அதைவிட 60 பில்லியன் அமெரிக்க டொலர்களை Potential Halal Market Income இலங்கை இழந்தது.

அதைவிட Halal Financial Market இலிருந்து வட்டி இல்லாத கடன் வாய்ப்பு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு இழந்தது உதாரணமாக வருமான பகிர்வு ஒப்பந்தம் மூலம் இலங்கையை 100 சதவீதம் Renewable Energy கொண்ட தேசமாக இதன் மூலம் மாற்றி அமைக்க முடியும்.இந்த இழப்பின் மூலம் நன்மை அடைந்தது இந்தியா குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகா.

இன்றும் கூட இலங்கை மக்கள் உணவு உற்பத்தி பாதுகாப்பு பிரச்சனைகளை முகம் கொடுத்து வருகின்றது. 2010 சீனாவின் மலிவான தரமான Climate Control Agriculture புரட்சியின் நன்மையை இலங்கை பெற தவறிவிட்டது இலங்கையில் விவசாயத்தை Hi tech விவசாயமாக்கி அதில் இளைஞர்களை கவர்ந்து இழுத்திருக்கவும் பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் விவசாய உற்பத்தி ஏற்றுமதி மற்றும் மலிவான நம்பகமான நஞ்சற்ற விவசாய உற்பத்தி தேசமாகவும் விவசாயிகள் பணக்காரர்காக வாழும் நாடாகவும் போருக்கு பிந்தைய இலங்கை நிச்சயமாக மாறி இருக்கும்.

ஏனைனில் இலங்கையில் அறுவடை செய்த உணவு வெறும் மூன்று மணிநேரத்தில் மிகப்பெரிய ஹலால் மார்க்கட் மத்திய கிழக்கின் எந்த நகரத்தையும் அடைந்து அங்கிருந்து உலகம் முழுவதும் சென்றடைந்து இருக்கும். அதேபோல் Halal Financial Market இலிருந்து இலங்கை மிகப்பெரிய முதலீட்டை பெற்றிருக்க முடியும் இதன் இழப்பு கற்பனைக்கு எட்டாதது.

இன்னும் எமக்கான கதவுகள் திறந்து இருக்கின்றன. நாம் இன்னும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதும் அந்த கதைவை அடைக்கும் மடையர்களை கட்டுப்படுத்தாமல் விடுவதும் விசர் நாய்களுக்கு வக்சீன் போட்டு வாயை கட்டி விடாமல் இருப்பதும் விசனத்துக்குரியது.

யாரை வேண்டுமானாலும் யாரும் மோசமாக பேசலாம் அவதூறாக பேசிவிட்டு போகலாம் பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்குள் ஜனாதிபதி பிரதமரை கூட இழிவு படுத்தி விட்டு பிரச்சனை இன்றி திரியலாம் என்பது கேவலமான நிலை.அதுவும் அரசை இப்போது இந்த விசர்ஞமலிகள் கடித்து குதற தொடங்கிய நிலையில் இதுபற்றி தடைச் சட்டம் குறித்து சிந்தனை செய்ய வேண்டும் உண்மையில் அந்த விசரர்களுக்கும் விசர்களின் சந்ததிக்கும் நன்மை பயக்கும்.

இலங்கையில் பல இன மத ரீதியான அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டியவை குறிப்பாக இனங்களுக்கு மதங்களுக்கு இடையே மற்றும் இனங்களுக்கு மதங்களுக்கு உள்ளே பேதங்களை உருவாக்கும் அமைப்புகள் இத்தகையன.

இலங்கையில் ஏதாவது முன்னேற்றம் வர வேண்டும் எனில் இலங்கையில் வெறுப்பு பேச்சு, வெறுப்பு பிரச்சாரம், வெறுப்பு குற்றம், வெறுப்பு கருத்து வெளிப்பாடு, வெறுப்பு வன்முறை இவற்றுக்கு எதிராக இலங்கை மண்ணிலோ அல்லது உலகின் எந்த பகுதியிலோ செய்வது குற்றமாக்கும் மிகவும் பலமான சட்டங்கள் இயற்றப்பட்டு அமுல்படுத்தபட வேண்டும். ம
(Mohamed Ali Yaseer Arafath)