நோர்வேயில் ஜோர்ஜ் புளொயிட் இன் மரணத்திற்கு எதிரான போராட்டம்

அமெரிக்கத் தூதரகத்தின் முன் தொடங்கிய ஆர்ப்பாட்டம், ஆறு கிலோ மீற்றர் நடையாய் நீடித்துப் பாராளுமன்றின் முன் வந்து முடிந்தது. அமெரிக்கக் காவல்துறை பற்றிய எதிர்ப்புக் கோஷங்களோடும், மனித உரிமைகளுக்கான கோஷங்களோடும் இது நிறைவுற்றது.

பொதுவாக அரசியல் சார்ந்த விடயங்களில் கருத்துச் சொல்லாத அரசு குடும்பத்தினரும் இம்முறை வெளிப்படையாய்க் கருத்துக் கூறியது கவனத்துக்குரியது. இளவரசி மார்த்தா சமூக ஊடகத்தில் இருமுறை தன் எதிர்ப்பைப் பதிவிட்டார் (அவரது காதலரும் ஓர் அவ்ரோ அமெரிக்கர்). இதுபற்றி நேற்று (முடிக்குரிய ) இளவரசரிடம் கேட்டபோது, மக்களின் எழுச்சியும், தனது சகோதரியின் கருத்தும் நியாயமானவை என்பதாய்ப் பொருள்படக் கருத்துக் கூறியுள்ளார்.

இன்று நோர்வேயின் இன்னொரு நகரான ஸ்தவங்கரிலும் காவல், மருத்துவத் துறைகளின்
எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாது ஏராளம் மக்கள் இதே நோக்கத்திற் கூடியுள்ளனர்.

ஒடுக்குமுறை எதிர்ப்புகள் மக்களிடமிருந்து தானாக வரும்போது அவற்றை ஆதரிப்பதும், வரலாற்றிற் பதிவு செய்வதும் மிக முக்கியம்!

(வாழ்நாள் முழுவதும் சாதியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, இந்த நாடுகளிலும் அதைத் தமது குறுகிய நோக்கங்களுக்குப் பயன்படுத்துவோர் சிலரும் இந்த மக்கள் எழுச்சியை வாழ்த்துகிறார்கள், காலம்!!)