இந்தியாவை ஆட்டிப் படைக்கும் இன்டிகோ விமான சேவையாக மாறி இருக்கின்றது இந்தியாவின் 65 சதவிகிதமான விமான சேவையை தன்னகத்தே கொண்டுள்ள இன்டிகோ பறப்பு நிறுவனம்
“காலில் சிலிப்பரை போடக் கூடிய நபர்களுக்கும் விமானப் பயணத்தை நான் கொண்டு வந்து கொடுக்கப் போகின்றேன்’ இது தற்போதைய இந்தியாவின் பிரதம மந்திரி மோடி இன் பரப்புரை வார்த்தைகள்… சில வருடங்களுக்கு முன்பு
உலகத்தின் அதிக சனத் தொகையைக் கொண்டிருக்கும் மக்களுக்கான (உள்ளுர்) விமான சேவைகளை தனியார் மயமாக்கும் போதே இந்த சூழுரையை அவர் உதித்தார்.
போக்குவரத்து அரசாங்கத்தின் வசம் அதிகம் இருக்க வேண்டும் என்பதே அதிகம் சரியாக இருக்கும் என்ற நிலையில் அவரின் சூழுரை இந்தியாவின் 40 சத வீதமான சொத்துகள் ஒரு சதவிகிதமானவர்கள் கையில் மட்டும் வைத்திருக்கும் நிலையை ஏற்படுத்திய சித்தாந்தத்தின் வழியேதான் உருவானது.
சகல துறைகளிலும் குறைந்தளவு அரசுப் பங்களிப்பு அல்லது பொறுப்புக் கூறல் இல்லாத அதிகளவு தனியார் மயமாக்கல் என்றாக அவரின் நெருங்கிய முதலாளிகள் ‘அதானி’, ‘அம்பானி’ என்றான நிலமைதான் இதற்கான முக்கிய காரணமாகி இருக்கின்றது.
இந்த பறக்க மறுக்கும் இன்டிகோவின் செயற்பாடுகளினால் இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் தமது பயணங்கள் தடைப்பட்ட நிலையில் பல ஆயிரம் மக்கள் வெஞ்சினத்தில் இருக்கின்றனர்.
தோராயமாக ஒரு நாளுக்கு உள்ளுர் வெளியூர் என்றாக இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பறப்புகளை தற்போது இன்டிகோ விமானம் கொண்டிருக்கின்றது.
இது வெறும் 20 வருடங்களில் ஏற்பட்ட வளர்ச்சி
இதற்கு அவர்கள் கையாண்ட வியாபார தந்திரம் போயிங்(Boeing) விமானங்களை தவிர்த்து எயர் பஸ்(Air Bus) விமானங்களை குறைந்த விலையிற்கு வாங்கி பாவிப்பது காரணமாகின்றது.
கூடவே மத்தியதர மக்களை அதிகம் கவரும் குறைந்த விலையிலான பறப்புக் கட்டணத்தை பறக்கும் வேளைகளில் தண்ணி வெந்நீர் தவிர்த்து உணவு தவிர்த்த சேவையும் காரணமாகின்றது.
கூடவே குறைந்தளவு ஊழியர்களை குறைந்தளவு ஊதியத்துடன் அவர்களுக்கான போதிய ஓய்வுகளை வழங்காத விமான பைலட்கள் விமானத்திற்குள் வேலை செய்யும் உபசரிப்பாளர்கள் என்றான உழைப்பவர்களின் வயிற்றில் அடிக்கும், அவர்களுக்கு போதிய ஓய்வு வழங்காத அதிக இலாபம் ஈட்டிய செயற்பாடுகளும் ஆகும்.
இது விமானப் பயணிகளின் பாதுகாப்பற்ற பறப்பிற்கு காரணமும் ஆகிற்று.
Aug 2006 ம் ஆண்டு கனடாவின் முதன்மை பல்கலைக் கழகமாக விளங்கும் வாட்லோ பல்கலைக் கழகத்தின் எந்திரவியல் பட்டதாரி ராகுல் பாட்டியா(Rahul Bhatia) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது இன்டிகோ நிறுவனம்.
தற்போதைய பிரதான பங்களார்களரான அவருடன் 2022 இல் அமெரிக்காவில் வசிக்கும் ராஜேஸ் கங்வால்(Rakesh Gangwal) என்பவர் இணைந்து நடத்தப்படுவதுதான் இன்டிகோ எயர்லைன்ஸ் இன் இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ்(Inter Globe Enterprises).
இந் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, முன்னால் கேஎல்எம் எயர்லைன்; இன் முன்னாள் நிறைவேற்று அதிகாரி பீட்டர் எல்பர்ஸ்(Pieter Elbers) ஆவார்.
அப்படி என்னதான் நடக்கின்றது தற்போது இன்டிகோ எயர் லைன்ஸ் இற்கு….
விமானங்கள் பாதுகாப்பாக பறப்பதற்குரிய சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்று (DGCA) சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(இந்தியா)(Directorate General of Civil Aviation) வழங்கிய காலக் கெடுவிற்குள் அவர்கள் அவற்றை நிறைவேற்ற வில்லை.
இந்த காலக் கெடு அறிவித்தலை 2024 ஜனவரி மாதம் வழங்கியிருந்த போதும் கடந்த இரண்டு வருடம் ஆகும் நிலையிலும் அவர்கள் இதனை நிறைவேற்றவில்லை.
அவர்களின் இந்த அலட்சியப் போக்கு ஏற்புடையது அல்ல. ஏன் எனில் அவர்களிடம் சரி செய்யுங்கள் என்று நிபந்தனை விதித்த விடயங்கள் விமானப் பயணங்களுக்கான பாதுகாப்பு சம்மந்தப்பட்டவை.
அவை நிறைவேற்றப்படாத இடத்து பயணங்கள் ஆபத்தில் முடியலாம்.
இந்த நிபந்தனைகளi உலக பொது நியத்தியிற்கு உட்பட்ட விமான பறப்பு பாதுகாப்பு சம்மந்தப்பட்டவை உலகின் அனைத்து விமான வேசவைகளும் ஏன் ஏயர் இந்தியா(Air India) இதனை கடைப் பிடிக்கின்றது அவற்றில் சிலவற்றை இணைக்கின்றேன் கீழே…
மனிதன் தரையில் வேலை செய்வதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டவன் . அப்போது தினம் 8 மணி நேரம் வேலை என்றாக 5 நாள் என்றான விஞ்ஞான உடல் அமைப்பைக் கொண்டவன்.
அப்போ அவன் ஆகாயத்தில் அதேயளவு நேரம் வேலை செய்வது என்பதே கடினம் அவரின் உடல் உறுப்புகள் அதற்கு இலகுவில் இயவாக்கம் அடையாது. காரணம் தரையிலும் ஆகாயத்திலும் அமுக்கம்(Pressure) வித்தியாசமாக உள்ளது.
கூடவே கண்டம் விட்டு கண்டம் மாறும் போது மனிதனின் உடலில்குள் செயற்படும் பயோ கடிகாரம்(Bio Clock) சடுதியாக இயவாக்கம் அடையாது.
இதனால் ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்திற்கு சென்றவுடன் ஓய்விற்கு நித்திரைக்கு செல்ல முடியாது.
இவை எல்வலாவற்றையும் வைத்துத்தான் விமான பணியாளர்கள், விமான ஓட்டுனர்(Pilot)களின் வேலை நேரம் ஓய்வு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது மனித டல் சம்மந்தமான விஞ்ஞானபூர்வமானது.
விமானிகள் பறப்பதற்கு முன்பு குறைந்தது இரு மணி நேர தயாரிப்பாக கணிதம் பௌதிம் வானியல் அடிப்படையிலான தயாரிப்பில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்பது பலருக்கும் தெரியாது.
அது வருடம் ஒன்றிற்கு 1000 மணி நேரம்(தோராயமாக மாதம் ஒன்றிற்கு 100 மணி நேரத்திற்கள்), நாள் ஒன்றிற்கு 8 மணி நேரம் வாரம் 5 நாள் வேலை.
அன்றேல் அவனின் உடல அதற்கு இயவாக இல்லாது விடின் அவனது செயறபாடுகள் மூளை சரியாக வேலை செய்யாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் அடிப்படையில் பறப்பதற்கான வேலை நேரம் ஓய்வு தீர்மானிக்கப்பட்டுள்ளது சர்வதேச மட்டத்தில்
ஆனால் இன்டிகோ இது வரை இருந்த நிலமை அவ்வாறு இருக்கவில்லை அது
வேலை நேரம் விமானிகள் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை பறக்கலாம் என்ற பழைய விதியை மாற்றி, புதிய, 8 மணிநேரம் மட்டும் பணி செய்தல் என்றாக மாற்ற வேண்டும்.
ஓய்வு நேரம் கிழமையிற்கு தொடர்ச்சியாக 48 மணி நேர ஓய்வு வழங்கப்பட வேண்டம் மாறாக பழைய முறையில் 36 மணி நேரம் மட்டுமு; வாரத்திற்கு என்றானது மாற்றப்பட வேண்டும் நேர விதிமுறைகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
இது விமானிகளுக்கு மட்டும் அல்ல விமானத்திற்குள் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் பொருந்தும்
இவற்றிற்கு மேலதிகமாக போதுமான விமானிகள் விமானப் பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தியாக வேண்டும் இதனை இன்டிகோ வழங்கப்பட்ட 2025 நவம்பர் 30ம் திகதியிற்கு முன்னரான காலத்தில் நிவைவேற்றவில்லை என்பதற்கு அப்பால் அதிகம் முயற்சிக்கவில்லை.
இதனால் கடந்த 5 நாட்களாக ஒரு நாளில் 400 மேற்பட்ட பறப்புகளை இரத்துச் செய்து பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
இவை பொதுமக்கள் வழியாக அரசுக்கான அழுத்தங்களாக மாறியது.
அதனால் அரசு தனது பாதுகாப்பு விதி முறைகளை தற்காலிகமாக தளர்த்தும் அளவிற்கு ஒரு ஏக போகமாக உள்ள தனியார் நிறுவனத்திற்கு அடிபணிந்துள்ளது
மேலும் இதற்கு அப்பால் ஏற்கனவே இந்தயாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்போது தற்போதைய அரசிற்கு மிகவும் நெருக்கமாக உள்ள அம்பானி குழுமத்திடமே அரசு தனியார் மய்படுத்தலாக வழங்கி உள்ளது.
இதற்குள் தற்போது ஏற்பட்டுள்ள இன்டிக்கோ பிரச்சனை சில வேளைகளில் இரண்டாக சுருங்கிய இந்திய விமான சேவைகளில் மிகப் பெரிதான் இன்டிக்கோ அம்பானியாக எதிர்காலத்தில் மாற்றப்படும் சூழ்ச்சிகள் இல்லை என்பதை மறுக்க முடியாது.
இது சகல துறைகளில் இந்தியாவில் தற்போதைய அரசின் கடந்த பத்திற்கு மேற்பட்ட வருட ஆட்சியின் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் செயற்பாடாக இருக்கின்றது.
அது கல்வி, உணவு, மருத்துவம், எரிபொருள், காப்புறுதி என்று எங்கும் வியாபித்து வருகின்றது தற்போது
இந்நிலை தொடருமாயின் இந்தியா வரும் காலங்களில் தற்போதைய விட அதிகம் அதி பாதாளத்தில் செல்லும்.
கடந்த பத்து வருடங்களில் அதிகம் அரசுடமையாக இருந்தவை எல்லாம் அடி மாட்டுவிலைக்கு தமது நலன்களை தூக்கி பிடிக்கும் தனியார்களுக்கு தாரை வார்த்தாகிவிட்டது அல்லது இன்னும் தொடர்கின்றது.
“காலில் செருப்பு போடுபவனும் விமானத்தில் பயணம் செய்யும் நிலமையை ஏற்படுத்துவேன் என்பது நரேந்திர மோடியின் அரசியல் கோசம் ஒரு விமான சேவையின் ஏக போகத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்தி அது அரசை அடி பணியவும் வைத்திருக்கின்றது.
மாறாக அரசுடமையாக விமான சேவையை தொடரந்து தனது அரசியல் கோசத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும் என்பதே இந்திய மக்களுக்கான சிறப்பான செயலாக இருக்க முடியும்.
இது பறத்தலுக்கான உயர் தட்டு மக்களின் பிரச்சனை என்று நகர்ந்து சென்று விடாதீர்கள் இது நாளைக்கு பஸ் புகையிரம் என்றாக சமான்ய மக்கள் அதிகம் பாதிக்கும் நிலமையிற்மான தனியார் மயமாக்கல் ஏகபோகத்தின் வெளிப்பாடுகள்.
இன்று பறத்தல் என்றாக நகர்ந்து சென்றால் இது எங்கள் கோடியிற்கு இது நாளை வந்த பின்பு நாம் போராட முடியாத சூழலை ஏற்படுத்திவிடும்.