SriLankan Airlines புதிய Airbus A330-200 விமானம்

2025 ஜூன் 4-ஆம் தேதி, SriLankan Airlines அதன் புதிய wide-body விமானமான Airbus A330-200 வகையை சேர்ந்தது இதற்கான பதிவு எண்ணாக 4R-ALT-ஐ பெற்றுக்கொண்டது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த விமான நிறுவனத்தின் முதல் wide-body விமானமாகும். இது சேவை தரத்தை மேம்படுத்துவதிலும், சர்வதேச இணைப்புகளை விரிவுபடுத்துவதிலும் முக்கியமான முன்னேற்றமாகும்.

இந்த விமானம் பிரான்சில் உள்ள Paris நகரிலிருந்து புறப்பட்டு கொழும்பு கடலோரத்தில் தாழ்வாக பறந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்து அங்கே பாரம்பரிய Water Canon Salutations மரியாதையை பெற்றது.

எட்டு வருட lease ஒப்பந்தத்தின் கீழ் குத்தகையிலேயே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, ஒப்பந்தப்படி விரும்பினால் lease நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. SriLankan Airlines நிறுவனத்தின் தலைவரும் மற்றும் Acting CEO-வும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த Airbus A330-200 விமானத்தில் 18 Business Class flat-bed இருக்கைகள் மற்றும் 251 Economy Class இருக்கைகள் உள்ள இரண்டு வகுப்பு அமைப்பு உள்ளது. இது இரண்டு Rolls-Royce Trent 700 இயந்திரங்கள் கொண்டது மற்றும் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்த wireless in-flight entertainment மற்றும் ஒவ்வொரு இருக்கைக்கும் தனிப்பட்ட USB சார்ஜிங் போர்ட்டுகள் உள்ளன.

Airbus A330-200 தொழில்நுட்ப விவரங்கள்
Type: Wide-body, twin-engine, long-haul commercial aircraft

Manufacturer: Airbus
Length: 58.82 meters
Wingspan: 60.3 meters
Height: 16.79 meters
Maximum Takeoff Weight: Up to 242,000 kg
Range: Approximately 13,450 km
Cruise Speed: Mach 0.82 (about 871 km/h)
Maximum Operating Altitude: 41,000 feet
Engines: Rolls-Royce Trent 700 (commonly used)
Fuel Capacity: Approximately 97,530 liters
Cargo Capacity: Around 45.2 cubic meters
Features: Advanced fly-by-wire system, wide cabin for passenger comfort
Lease விவரங்கள்

SriLankan Airlines இந்த விமானத்தை பிரெஞ்சு leasing நிறுவனத்துடன் எட்டு வருட குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் பெற்றுள்ளது. 2024 ஏப்ரல் மாதத்தில், Sri Lankan Cabinet நான்கு Airbus A330 wide-body விமானங்களுக்கு குத்தகை ஒப்பந்தங்களை ஒப்புதல் அளித்தது.

குத்தகை விலையில் மாதந்தோறும் ஒவ்வொரு விமானத்திற்கும் USD 360,000 முதல் USD 365,000 வரையான கட்டணம் உள்ளது.ORIX Aviation நிறுவனத்திலிருந்து 6 ஆண்டுகள் காலத்துக்கான 2 விமானங்கள், மாதம் USD 360,000 வீதம்.Aergo Capital நிறுவனத்திலிருந்து 8 ஆண்டுகள் காலத்துக்கான 2 விமானங்கள், மாதம் USD 365,000 வீதம்
இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 120 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருக்கிறது மற்றும் இந்த ஒப்பந்தங்கள் அசோக பதிரகே மற்றும் ரிச்சர்ட் நட்டாலின் SriLankan Airlines-இன் திறன்களை விரிவுபடுத்தும் மற்றும் புதிய இணைப்புகளை ஏற்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த புதிய விமானத்துடன் SriLankan Airlines படை தற்போது 23 விமானங்களைக் கொண்டுள்ளது, அதில் 10 wide-body மற்றும் 13 narrow-body விமானங்கள் அடங்கும்.

Fleet expansion திட்டங்கள்
திட்டங்கள் விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் படையை 50 விமானங்களுக்குச் சேர்க்கும் இலக்கை கொண்டுள்ளது. முக்கிய பாதைகள் போன்று Beijing-Colombo, Nairobi-Colombo மற்றும் Australia மற்றும் East Africa இலக்குகளுக்கு சப்ளை மற்றும் சேவை விரிவாக்கம் செய்யும் திட்டங்கள் உள்ளன.

ஆனால் சிறீலங்கன் இதைத்தாண்டி இந்திய பிரதான மற்றும் இரண்டாம்நிலை நகரங்கள் மற்றும் அமெரிக்க ஐரோப்பிய அவுஸ்திரேலிய நேரடி விமான சேவைகளை இணைத்து அதுபோல சீன கிழக்கு தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க இணைப்பையும் இதே வகையில் செய்ய முடியும் டிரான்ஸிட் Hub ஆக மாற்ற முயற்சிக்க வேண்டும். மிகவும் குறுகிய அதேநேரம் தரமான விரைவாக டிரான்ஸிட் சேவைகளை வழங்கும் Dedicated Transit Corridor விமான நிலையத்திற்கு தேவை.

இலங்கையில் இரண்டு கோடி சனத்தை வைத்து கொண்டு National Carrier மைன்ட் செட்டில் இருந்து Regional Carrier Global Carrier என்ற இடத்தை நோக்கி நாம் சிந்திக்க வேண்டும். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாம் ஓடுபாதை மற்றும் இரண்டாம் மூன்றாம் டேர்மினல்கள் கொழும்பு கட்டுநாயக்க விரைவு இரயில் மற்றும் தரமான பஸ் சேவைகள் விரைந்து அமைக்கப்பட வேண்டும் .

இதுவரை சிறீலங்கனால் இலங்கையில் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவுக்கு நஷ்டம் அடைந்துள்ளது இந்த நஷ்டத்தை வைத்து மாத்திரம். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாம் ஓடுபாதை , ஏப்ரன் டெக்ஸிவே, இரண்டாம் மூன்றாம் முனையங்கள் உட்பட கொழும்பு – கட்டுநாயக்க விசேட ரயில்வே சேவை பஸ் சேவைரயில் பஸ் போக்குவரத்து முனையம் ஒன்றையும் பல்லடுக்கு பார்க்கிங் மற்றும் கட்டுநாயக்க அதிவேக பாதை தங்கொட்டுவ வரை கொண்டு போக ஜெயராஜ் பெர்ணான்டோபிள்ளே எடுத்த முயற்சி அனைத்தும் செய்திருக்க முடியும்.