துலாக்கோலின் சூட்சுமமா..?

நேற்றைக் கிரவு…, நீள்துயிலுக்
கிடையினிலே
ஏற்றம் இறைப்பதுபோல் ஓர்கனவு;
ஏற்றமதில்,
ஏறி மிதித்ததுநான்; இறைத்தவனோ இன்னொருவன்
சாறிக் கிடந்தஅந்த செம்பாட்டுத் தரைமேலே
ஆறிஆறி ஓடியது ஊற்றியநீர்;
ஏறியநான்
எட்டி முன்வந்து உழக்கநீர் மொள்ளுவதும்
விட்டுப் பின்செல்ல வெளிக்கிழம்பிப் பட்டையது
திட்டைக்கு ஏறித் தண்ணீர் சொரிவதுமாய்…
பட்டுப் பட்டென்று பகல்போலக் காட்சிதர,
எட்டிக் கீழ்நின்று இறைப்பவனை நோக்குகிறேன்..