உங்களால் மறந்துவிடமுடியுமா அந்த நாளை?

சொல்லொணா வேதனையுடன் பதின்மூன்று நாள்கள் உயிருக்குப் போராடி உயிர் துறந்தாள். ஜோதி சிங்குக்கு ஊடகங்கள் இட்ட பெயரைச் சொன்னால் உங்களுக்கு நினைவு வந்துவிடும்! நிர்பயா!

எல்லாம் வந்து துக்கம் விசாரித்துவிட்டு – ஆறுதல்மொழிகளைச் சொல்லிவிட்டுப் போன பிற்பாடும் – ஒருவர் மட்டும் அந்தக் குடும்பத்துக்கு நிரந்தர உறவாக இருந்தார். மனரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அந்தக் குடும்பத்தைத் தாங்கிப்பிடித்தார்.

தான் செய்யும் உதவி ஒருபோதும் விளம்பரப்படுத்தப்பட்டுவிடக்கூடாது என்ற கண்டிப்புடன் அந்தக் குடும்பத்தாருக்கு உதவிய அந்த மனிதர் – நிர்பயாவின் சகோதரனின் முழு கல்விப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

ஓர் உடன்பிறந்தானைப் போன்று அரவணைத்து வழிகாட்டினார். கல்லூரி முடித்த அந்த இளைஞனை ரேபரேலி ஃபிளையிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டார். இன்று அந்தப் பையன் ஒரு விமானி!

கைநிறைய சம்பளம் – உறுதிப்படுத்தப்பட்ட வாழ்க்கை என்று பெற்றோருடன் நிம்மதியாக இருக்கிறான்.

நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி இப்படி நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார் :”மகள் மரித்தபோது கையறுநிலையில் இருந்தோம். அப்போது ஒருவர் தேவதூதன்போல எங்கள் வாழ்வின் நம்பிக்கை ஒளியாக வந்தார்.

எந்த டமாரமும் அடிக்காமல் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றினார். என் மகனின் வாழ்க்கைக்குப் பொறுப்பெடுத்துக்கொண்டார். அவனுக்கு வழிகாட்டினார். அவனை நன்றாகப் படிக்கவைத்தார். அவனை ஒரு பைலட் ஆக மாற்றி எங்களுக்கு வழங்கியிருக்கிறார்.

என் மகனுக்கு அவர்தான் கார்டியன் ஏஞ்சல் – காவல் தேவதை !” அந்த கார்டியன் ஏஞ்சலின் பெயர் ராகா!ஆமாம், ராகுல்காந்தி! படத்தில் : நிர்பயாவின் தாயார்