இலாப நஷ்டம் அது வேறு கணக்கு
கடைசியாக எமிரேட்ஸ் கீழே சிறீலங்கன் 4.4 பில்லியன் ரூபாய் இலாபமீட்டியது அதிலிருந்து ஒரு ஆண்டு கூட ஆசைக்கும் இலாபத்தை காணவில்லை. மஹிந்தவின் மிக மோசமான தலைதெறிச்ச வேலை எமிரேட்ஸ் இடமிருந்து சிறீலங்கனை பறித்தது. பறிக்கும் போது கிட்டத்தட்ட 300+ மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவுக்கு தான் கடன்கள் இருந்தது.
ஆனால் யஹபாலன யுகம் தொடங்கும் போது இது 400+ மில்லியன் என்று இருந்தது கோடாவிடம் வரும் போது இது 975 மில்லியன் அளவுக்கு ஏற்றப்பட்டது காரணம் எயார்பஸ் A350 ஓடர்களை கேன்சல் செய்தது.
அத்தோடு தெற்காசிய வலயத்தில் பலமான விமான சேவையாக உருவாக இருந்து பொன்னான Take off வாய்ப்பு காயடிக்கப்பட்டு முற்றிலும் சிறீலங்கன் சிறகு வெட்டப்பட்டு முடமாக்கப்பட்டது இதன் மூலம் அயல்நாட்டு விமான துறை பெரும் நன்மை பெற்றது.இதைத்தவிர ஜப்பான் தாய்சே பொதுவாக ஜப்பான் திட்டங்களில் ஊழல் செய்ய முடியாது அந்தளவுக்கு கிடுக்குப்பிடி இருக்கும் வேண்டும் என்றால் construction materials களவு எடுக்கலாம் இதையும் இலங்கையில் செய்துள்ளார்கள்.
ஆனால் ஊழல் தேடிய வீரர்கள் இரண்டு ஆண்டுகள் தோற்றுப் போய் அதற்குள் யென் ரேட் கூடிவிட அதனால் திட்ட செலவு அதிகரிக்க அதை பலன்ஸ் செய்ய நிறுவனத்திடம் முரண்பட்டு “பழைய”தாமரை’ டிசைனை “வாழை இலை” டிசைனாக மாற்றி சீலிங் உயரத்தை குறைத்து அடித்த கூத்து அதோடு port city project review என்ற பெயரில் அதன் marketing potential சாகடித்து இன்றுவரை அதை கட்டாந்தரையாக்கிய பெருங்கூத்து இதைவிட பெரிய பொருளாதார குற்றம் சுதந்திர இலங்கையில் யாராலும் இழைக்கப்படவில்லை.
பணம் போனாலும் பரவாயில்லை Deloitte Forensic Services போன்ற தரமான international forensic audit firm நிறுவனங்களிடம் இந்த விடயங்களை பாரம் கொடுத்தால் இந்த வாய்கிழிந்த கழிசடை களின் சீல் சலம் அனைத்தும் பீறிட்டு பாயும்..
ஒவ்வொரு ஆட்சிகாலத்திலும் அடைந்த நஷ்டங்கள் வருமாறு.
ராஜபக்ஷ யுகம்
900+ மில்லியன் அமெரிக்க டொலர்கள்
யஹபாலன யுகம்
1600+ மில்லியன் அமெரிக்க டொலர்கள்
கோதாபய யுகம்
700+மில்லியன் அமெரிக்க டொலர்கள்
ரணில் யுகம்
140+ மில்லியன் அமெரிக்க டொலர்கள்
ரணில் விக்ரமசிங்க இரண்டாம் காலம் ஒப்பளவில் பரவாயில்லை என்ற போதும் சிறீலங்கன் மற்றும் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் மோசமான காலமான யஹபாலன யுகத்தில் முக்கிய பங்காளர் அவர்தான்.
இவ்வளவு மோசமான financial records கொண்ட விமான சேவையை யாரும் வாங்க மாட்டார்கள். இரண்டு தடவைகள் சர்வதேச கேள்விப்பத்திரம் வழங்கப்பட்ட போதும் credible players யாரும் சிறீலங்கனை வாங்க முன்வரவில்லை. ஒன்று இதை தொடர்ந்து இயக்குவது அல்லது bankruptcy file செய்து நிறுவனத்தை கலைத்து விட்டு அவ்வளவு கடனையும் இலங்கை மக்கள் மீது கட்டுவது இந்த விடயத்தை கையாளவே மீண்டும் IMF இரண்டு வருடங்களுக்கு பேச வேண்டும் அவ்வளவு சிக்கலான விடயம்.
இதைத்தவிர 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான A350 எயார்பஸ் 8 விமானங்கள் கேன்சல் பண்ணியது மிகப் பெரிய பொருளாதார குற்றம். இவற்றின் கொள்வனவின் போது இடம்பெற்ற ஊழலை துல்லியமான முறையில் குறிவைத்து அதை செய்தவர்களை தண்டித்திருக்கலாம்.
ஆனால் 370+ மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெனால்டியாக கிட்டத்தட்ட ஒரு விமானத்தின் பெறுமதி எயார் பஸ் மற்றும் AerCap Holdings NV போன்ற நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலையை உருவாக்கி அதிலும் ஊழல் செய்து இலங்கைக்கு Fuel Efficient மற்றும் Long haul விமான பயண சந்தை வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் ஆக்கப்பட்டது. இதை விட operational cost அதிகமான பழைய விமானங்களை இயக்க Sri Lankan நிறுவனம் நிர்ப்பந்திக்கப்பட்டது.
உண்மையில் இந்த கிழமை வந்த A330-200 விட குறைவான operational cost மற்றும் அதிநவீன widebody விமானமாக A350 இருக்கிறது. உதாரணமாக சிங்கப்பூர் எயார்லைன்ஸ் பிரதான விமான ஸ்டொக் A350 ஆகும். தமிழரான ஜே. வை. பிள்ளை சிங்கப்பூர் விமான சேவையின் தந்தை, சில வருடங்களுக்கு பயன்படுத்திய விமானங்களை தொடர்ந்து பயன்படுத்தினால் operational loss வரும் எனவே cost effectiveness குறையும் போது fleet change செய்ய வேண்டும் என்று நியதியை உருவாக்கினார் அவர் அன்று போட்ட அத்திவாரம் காரணமாக இன்றுவரை வெற்றிபெற்ற நிறுவனமான சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விளங்குகிறது.