திருடனாய்ப் பார்த்து திருந்தாவிடின்…

(ப. பிறின்சியா டிக்சி)

ஒவ்வொருநாளும் நடைப்​பயிற்சியில் ஈடுபடும் வயதான ஒருவர், ஒருநாள் வெளியில் செல்ல முடியாமல் போய்விட்டால், குட்டிபோட்ட பூனையைப் போல, வீட்டுக்குள் அங்குமிங்கும் உலாவித்திரிவார்; எவ்விதமான ஆறுதலுக்கும் செவிசாய்க்கமாட்டார். அவ்வாறானவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாது.